Jun 4, 2014

பேசாத வார்த்தைகள் : நான் சிகப்பு மனிதன் , வந்தனா ஸ்ரீ , லாவகம் & COMING SOON.




நான் சிகப்பு மனிதன் படத்தில் வரும் “ஒ பெண்ணே” பாடல் சமீபத்தில் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று . முதலில் ஈர்த்தது ஆண் குரல் . ஏதேது சுக்விந்தர் சிங்கையோ இல்லை உதித் நாராயணனையோ திருப்பி அழைத்துத வந்துவிட்டார்களோ என்று பார்த்தால் AL-RUFIAN என்ற பையன் பாடியிருக்கிறார் . இன்னும் யுவன் காதுகளில் சிக்கவில்லை போல J .

மேற்படி பாடலில் வரும் பெண் குரல் வந்தனா ஸ்ரீனிவாசனுடையது . எமக்கு பிடித்தமான பெண் பாடகர்களில் ஒருவர் . தாண்டவத்தில் வரும் ஒரு பாதிக் கதவு , ராஜா ராணியின் உன்னாலே , ரம்மியின் – கூட மேல இவையெல்லாம் வந்தனா வசீகரித்த பாடல்கள். வந்தனாவின் குரலில் தொக்கி நிற்கும் அக்கறை எனக்கு ரெம்பப் பிடிக்கும் .

ரெண்டு நாள் முன்பு local channel ல் நா.சி.ம இடைவேளை வரையிலும் பார்த்தேன் . சமீபகாலமாக விஷால் under play பண்ணி நடிக்கும் படங்கள் நன்றாகவே இருப்பதாக தோன்றுகிறது . அடக்கி வாசிப்பதற்கு சொந்தத் தாயாரிப்பும் ஒரு காரணியாக இருக்கலாம் . இருக்கட்டும் பால் பப்பாளி , பச்ச தக்காளின்னு மஞ்ச கலர் பனியனும் , ராஜ்கிரண் Under wear ம்  போட்டு பாடுவதைக் காட்டிலும் , Bare Body காட்டி பஞ்சு Dialouge பேசுவதைக் காட்டிலும் இது எவ்வளவோ மேல் .

         ***********************************************************************************************************************************

முள் மேல போட்ட சேலையை லாவகமாக எடுக்கவேண்டுமென்று சொல்வார்கள் . இப்பொழுதெல்லாம் யாரும் முள் மேல் சேலையை போடுவதும் இல்லை , காயவைப்பதுமில்லை. But , இந்த லாவகம் நிறைய இடங்களில் தேவைப்படுகின்றது . குறிப்பா பின் வரும் சில விசயங்களில்....,

* வண்டிக்கும் &SHOE க்கும் சேதாரமில்லாமல் Two Wheeler Stand ல் இருந்து வண்டியை எடுப்பதற்கு. 

* பேருந்து பயணங்களில்,  Luggage Carrier ல் திணிக்கப்பட்ட Bag ஐ எடுப்பதற்கு .

* Chain stitch மூலம் தைக்கப்பட்ட அரிசி மூட்டையை அவிழ்ப்பதற்கு.

* Two Wheeler Side ல் மாட்டப்பட்ட கட்டைப்பையை சேதாரமில்லாமல் எடுப்பதற்கு .

இதுநாள் வரைக்கும் மேற்படி விசயங்களில் இந்த லாவகம் நேக்கு கைவந்த பாடில்லை . கைப்புள்ளை கணக்காக எம் கைப்பொருள்களுக்கு சேதாரம் ஆகிக்கொண்டே இருக்கின்றது .


         ***********************************************************************************************************************************

மன்னிச்சுக்குங்க ன்னு சொல்லும் போது இருக்கும் உறுத்தலும் , வலியும் Sorry சொல்லும்போது இருப்பதே இல்லை – SORRY ஆங்கிலத்தில் எனக்கு பிடித்த வார்த்தை .

         ***********************************************************************************************************************************

நிறைய எழுத வேண்டுமென்று ஆசை , ஆனால் நாலு வரி டைப்புவதற்கே நாற்பது முறை Backspace ஐ அழுத்த வேண்டியதிருக்கு . ஆதலால், எழுத ஆசைப்படும் சில பதிவுகளின் சில தலைப்புக்களையாவது எழுதி வைக்கலாமென்ற எண்ணத்தில் ...

ஒற்றைக் குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா ?

இலக்கியம் – கவிதை – ஹைக்கூ Vs எம்.எஸ்.வி - ராஜா – ரஹ்மான் ...!

ரிங்டோன் கலாட்டா ...!

ஆஞ்சியோ – அதிர்ச்சி அனுபவம் ...!

M.B.A – ஒரு சபதம் !

சுன்னத் – அவசியமா ?

நான் ரசித்த பெண்கள் ...!

மாலைப்பொழுதின் மயக்கத்திலே – மவுன ராகம் ...!

இஞ்சினியரிங்கும் இண்டர்வியுவூம் ..!

பேஷன் – SOCKS SELECT செய்வது எப்படி ?

ஆடை ரசனையற்றவர்களா தமிழக ஆண்கள் ?

வாட்டர் தெரப்பி – From own Experience ..

பேசாத வார்த்தைகள் : பெண்களும் முக அலங்காரமும்  , விளம்பர யுக்தி , கோ-ஆப்டெக்ஸ் .

கேட்டால் கிடைக்கும் – MEDICLAIM .

   ***********************************************************************************************************************************

என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .




32 comments:

  1. ஒவ்வொரு தலைப்பிலும் பகிர்வுகள் வருமா...?

    ReplyDelete
  2. வணக்கம்
    ஒவ்வொரு தலைப்பு பற்றிய பகிர்வைமிக விரைவில் எதிர்பார்க்கிறேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நான் முதன்முதலில் கேட்ட வந்தனா பாட்டு பரதேசியில் வரும் அவத்த பையா, அப்புறம் கூட மேல கூட வச்சு... வேறு எந்த பாடல்களையும் கேட்டதில்லை...

    என்னிடம் கூட இருபதுக்கும் மேற்பட்ட கருக்கள் உள்ளன... ஆனால் உங்களைப்போல தலைப்புகளை வெளியிட்டால் யாரேனும் சுட்டுவிடுவார்கள் என்பதால் வெளியிடுவதில்லை...

    ReplyDelete
    Replies
    1. வந்தனா gvp யோட ஆஸ்தான பாடகி . அவத்த பையா எனகென்னமோ பிடிக்கவில்லை .

      சுடுவதைப் பற்றியெல்லாம் யோசிப்பது இல்லை . சமயங்களில் நாம எழுத நினைத்ததை அப்படியே வேறொருவர் எழுதியிருக்கும் போது அட நாம miss பண்ணிட்டோமேன்னு தோணும் ...ATLEAST தலைப்பை மட்டுமாவது எழுதி வைக்கலாம்னு தான் ..

      Delete
  4. ஜீவன்,

    நீங்களாச்சும் தலைப்பை மட்டும் பட்டியல் போட்டுட்டிங்க , நமக்கு அதுக்கு கூட பலத்த யோசனையாவே இருக்கும் , அப்புறம் ஒரு வழியா ஏதோ தலைப்பை வச்சு ஒரு கால்ப்பக்கம் தட்டச்சு செய்துவிட்டு இன்னும் கொஞ்சம் விவரம் சேகரிச்சுட்டு தொடரலாம்னு கேப் விடுவேன் ..... விட்டது விட்டது தான் அப்படியே ஒரு 60-70 கால்ப்பக்கங்கள் கிடக்கு அவ்வ்!

    பல சமயத்துல தலைப்பு வைக்க சோம்பேறிப்பட்டுக்கிட்டு டேட் /மாதம் பேர வச்சு சேவ் செய்துடுவேன் அப்பத்தான் அடையாளமா கண்டுபிடிப்பனாம் ,என்ன ஒரு முன்னெச்சரிக்கைனு நினைக்கப்படாது அவ்வ்.
    ------------

    பிரபா,

    //ஆனால் உங்களைப்போல தலைப்புகளை வெளியிட்டால் யாரேனும் சுட்டுவிடுவார்கள் என்பதால் வெளியிடுவதில்லை...//

    தலைப்பை சுட்டால் சுட்டு போகட்டுமே , உள்ள இருக்க கன்டண்ட் தானே "அடையாளம், ஒரே தலைப்பை பத்து பேரு எடுத்து எழுதினாலும் "நம்மாள வித்தியாசம்" காட்ட முடியனும் என நினைப்பவன்.

    ReplyDelete
    Replies
    1. //தலைப்பை சுட்டால் சுட்டு போகட்டுமே// இதை நானும் ஆமோதிக்கிறேன்.. டைட்டிலுக்காக சினிமா டைரக்டர்கள் சண்டை போடும்போது கூட இதை யோசித்தேன்.. தலைப்பில் என்ன இருக்கு.. உள்ளே இருக்கும் சரக்கில் தானே எல்லாம்!!

      Delete
    2. 60-70 கால்ப்பக்கங்கள் கிடக்கு அவ்வ்!//

      அப்ப அறுநூறு எழுநூறு பதிவுகள் தேறும்னு சொல்லுங்க - ஆஆஆஆஆஆஆவ் :)

      Delete
  5. வந்தனாவின் பாட்டுக்கள் பிரபா குறிப்பிட்டவைதான் நானும் கேட்டிருக்கேன், மன்னிச்சுக்குங்க... ஹி... ஹி... ஹி... அப்புறம்... அந்தத் தலைப்புகள்ல பதிவுகள் எழுதினா 6வது தலைப்பை எழுதாம தவிர்த்துடவும். தங்கள் மதசம்பந்தமான நுணுக்கமான ஒரு விஷயத்தை வேற்று மதத்தினர் அலசுவதை அந்த மதத்தினர் நிச்சயம் விரும்ப மாட்டாங்க. கல்லடிகள்தான் கிடைக்கும் உனக்கு.

    ReplyDelete
    Replies
    1. 6வது தலைப்பை எழுதாம தவிர்த்துடவும். //

      மருத்துவ பதிவு தான்னா -CIRCUMSISE ன்னு போட்டா தெரியாதுன்னு தான் அப்டி போட்டேன் ...

      Delete
  6. நானும் வவ்வால் போலத்தான், என்ன அவர் பல பதிவுகளை அப்படியே ட்ராப்டில் வைத்துள்ளார் நான் எழுதும்போதே வாசித்து பிடிக்காவிட்டால் CTL+A , delete :-). இப்போதெல்லாம் எழுதி அழிக்கக் கூட நேரம் இல்லை. ஆபீஸ்லையே போட்டு குத்து குத்துன்னு குத்ராயிங்க எசமான்...

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் எழுதி அழிக்கக் கூட நேரம் இல்லை. //

      அவன் அவனுக்கு (சு)வாசிக்கவே இங்க நேரமில்ல :)

      Delete
  7. சுப்பு அருமையா எழுதறீங்க! தலைப்புகள் எல்லாம் சூப்பரா இருக்கு! ஆவலுடன் எதிர்ப்பார்க்க்கின்றோம்! இதுல என்னன்னா வவ்வால், சீனு சொன்னது போல நாங்களும் நிறைய எழுதி பாதில நிக்குது! அதுவும் ஆவி கடவுள் கோட்பாடு எழுத அதற்கு நாங்களும் ஒண்ணு எழுதறோம்னு சொல்லி இன்னும் முடிச்சு பதிவு போடலை! பாவம் ஆவி மறந்து கூட போயிருப்பாரு! இந்த மாதிரி நிறைய....நீங்க at least தலைப்பாவது போட்டுட்டீங்க! நாங்க தலைப்பே கூட இல்லாம சும்மா நிறைய கிறுக்கிகூட வைச்சுருக்கோம்! ஹி ஹி ஹி..(சும்மா பந்தா!!!)

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. நல்லவேளை ஞாபக படுத்தனீங்க சார்.. "கடவுள் எனும் கோட்பாடு" தொடரணும்..

      Delete
    2. தொடரணும்// - நாம ஒரு பக்கம் போனா வண்டி இன்னொரு பக்கம் போகுதே ஆண்டவா :)

      Delete
  8. நம்ம கேஸ் கொஞ்சம் டிபரன்ட்.. எல்லாத்தையும் ஆரம்பிச்சு அந்தரத்துல தொங்க விட்டுடறேன்.. அம்போன்னு நிக்குது மூன்று தொடர்கள்.. நேரம் எனக்கு பிரச்சனையா தெரியல.. சில விஷயங்கள் எழுத ஒரு வித மூட் தேவைப்படுது.. For Example நாங்களும் எஞ்சினியர் தான் எழுத குஷியான மூட் வேணும். "கடவுள் எ கோ" எழுத கொஞ்சம் சீரியஸ் மூட், பயணக் கட்டுரை எழுத ஒரு டூர் மூட் னு செட் ஆகணும்.

    ReplyDelete
  9. ஒரு பாதிக் கதவும் கூட மேல வும் என் பேவரைட்

    ReplyDelete
  10. எத்தனை முறை சொன்னாலும் இதையே தான் சொல்லவேண்டியிருக்குசகா :)) cheers வந்தனாவின் இந்த பாடல்கள் ஆஹா!!
    இனி லாவகமான இந்த வேலைகளை செய்கையிலும் இந்த பதிவு நினைவு வந்துவிடும்:)
    அப்புறம் பதிவுகள் எழுதமுடியாமல் போவதற்கு வேலைப்பளு, சோம்பல் போன்ற ரீசன் இருந்தா பரவால, otherwise take care of your health. awaiting for those coming soon:)

    ReplyDelete
    Replies
    1. //awaiting for those coming soon:)//


      எதிர்பார்ப்புகள் ஏமாற்றத் தவறுவதில்லை :(

      Delete
    2. to said frankly இந்த நெகடிவ் பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. :((
      எதுவும் நன்றாக முடியும் என எதிர்பார்ப்போம். அப்படி முடியாவிட்டால் அது முடிவு இல்லை என நம்புவோம்:)
      apart from all ur health is important friend. take care.

      Delete
  11. முள் மேல போட்ட சேலை அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டதுண்டு! பலமுறை சைட் ஸ்டேண்டில் இடித்துக் கொண்டு கட்டைப்பையை கிழித்து எல்லாம் நடந்திருக்கிறது! தலைப்புக்கள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. உங்களைப் போல நான் நிறைய மெனக்கெடுவதில்லை! வந்து உக்கார்ந்து என்ன தோணுகிறதோ எழுதி பதிவிட்டு விடுகிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. //முள் மேல போட்ட சேலை அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டதுண்டு! பலமுறை சைட் ஸ்டேண்டில் இடித்துக் கொண்டு கட்டைப்பையை கிழித்து எல்லாம் நடந்திருக்கிறது!//

      அப்பாடா ...! இந்த வார்த்தைகளை வாசிக்கும் போது எவ்வளவு சந்தோசமா இருக்கு ...!

      Delete
  12. தலைப்புகள் அத்தனையும் அருமை... அனைத்திலும் பதிவுகளையும் விரைவில் எதிர் பார்க்கிறோம்...

    //ஒற்றைக் குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா ?// இந்த தலைப்பு அதிக எதிர்பார்ப்புடன்

    ReplyDelete
    Replies
    1. நானும் இந்தப் பதிவை கண்டிப்பாக எழுத வேண்டுமென்று ஆர்வத்துடன் உள்ளேன் .

      Delete
  13. பதிவை விட பதிவின் இறுதியிலுள்ள தலைப்புக்கள் பிரமிக்க வைக்கின்றன. ஒவ்வொன்றிலும் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  14. சுவாரஸ்யமாய் எழுதியிருக்கிறீர்கள்.

    நீங்கள் வெளியிட்ட தலைப்புகளே ஆர்வத்தை தூண்டும்படியாக இருக்கின்றன.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr
    ( தங்களுக்கு நேரமிருப்பின் எனது வலைப்பூவினை படித்து உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    ReplyDelete
    Replies
    1. நன்றி ...! உங்களது சில பதிவுகளை வாசித்திருக்கிறேன் ...

      Delete
  15. தலைப்புகளுக்கு காபிரைட் வாங்கி வச்சுடுங்க!யாராவது சுட்டுடுவாங்க!(முதல் ஆள் நான்தான்)

    ReplyDelete
  16. ஸ்வாரசியம்..... தலைப்பு முதலில் வெளியிட்டாச்சு.... நல்லது. சீக்கிரமா அந்த தலைப்புகளில் பதிவும் எழுதிடுங்க!

    ReplyDelete

Related Posts with Thumbnails