Jun 14, 2014

பேசாத வார்த்தைகள் : சேனல்ஸ் பக்கம் - புதுயுகம் & மக்கள்



புதுயுகம் மற்றும் மக்கள் தொலைக்காட்சிகளில் சிலபல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன . போதிய promo இல்லாததினால் வெகு ஜன பார்வையாளர்களை சென்றடைவதில்லை .

புதுயுகம் தொலைக்காட்சியின் பெரிய minus என்று பார்த்தால் Galrity & Background settings . என்பது தொன்னூறுகளில் பொதிகை பார்த்த effect . மக்கள் - ரெம்ப நல்லாவே இருக்கு -குறை சொல்ல ஒண்ணுமில்லை .

புதுயுகம் :
  
உயிரே  உனக்காக படத்தில் வரும் ஓடோடி விளையாடு பாடலில் நதியாவின் தாத்தாவாக வருவாரே மீசை தாத்தா அவரின் பேட்டியை சமீபத்தில் புதுயுகம் தொலைக்காட்சியின் கேள்வி பாதி கிண்டால் பாதி நிகழ்ச்சியில் பார்த்தேன் .  நேற்றுவரை ஐயாவை ஒரு நடிகராகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் பெரியவர் Instrument வாசிப்பதில் கில்லாடியாம் . Instrument என்றால் யமகா பியானோ வோ , World class வயலினோ இன்ன பிற Electronic கருவிகளோ இல்லை . கொட்டாங்குச்சி , பழைய தகரம் அவ்வளவு தான் . ச்சும்மா பின்றாருங்க ...! அய்யாவின் பெயர் மீசை முருகேசனாம் . கலைமாமணி பட்டம் வாங்கியிருக்கிறார் .

ராஜாவின் பார்வை ராணியின் - பாடலில் வரும் குதிரை ஓடும் சத்தம் அய்யாவின் கொட்டாங்குச்சியில் இருந்து வந்ததாம் . EXCELLENT ! மேற்படி நிகழ்ச்சியின் இணைப்பு இங்கே .





மக்கள் - நொடிக்கு நொடி - சிட்டு 

மக்கள் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரை ஒளிபரப்பாகும் நொடிக்கு நொடி நிகழ்ச்சி - one of my favourite . காரணம் சொல்லித்தெரியவேண்டியதில்லை :) . சித்ரா செல்லமா சிட்டு என்னமா தொகுத்து வழங்குது பொண்ணு . அடேங்கப்பா எவ்வளவு Expression ஸ் . 

தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கும் நிகழ்ச்சி - அழகான பொண்ணு , அதைவிட அழகான குரல் & உடல் மொழி எல்லாவற்றிலும் மேலான பேரழகுத் தமிழ் வார்த்தைகள் . நேரம் கிடைப்பின் பாருங்கள் .







என்றென்றும் புன்னகையுடன் 

ஜீவன் சுப்பு .


16 comments:

  1. உண்மையில் நல்ல பணி ...
    கொஞ்சம் டிஸ்கவரி, என்.ஜி.சி ட்ராவல் சானல்கள் குறித்தும் எழுதலாமே தோழர் ..
    http://www.malartharu.org/2014/01/gold-vein.html

    ReplyDelete
  2. புதுயுகத்தில் ஐயா'வின் நேர்காணலை நானும் கண்டு ரசித்தேன்.

    பேய் வரும் போது கிளம்பும் சத்தத்தை அவர் வாசித்துக் காட்டிய போது பிரம்மித்து விட்டேன்.

    //காரணம் சொல்லித்தெரியவேண்டியதில்லை :) //

    ஹிஹி...



    ReplyDelete
  3. நட்பு தொடர்வது சந்தேகம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, தான்.........................................................................................................................................................?

    ReplyDelete
  4. முதலில் கைபேசியில் தொடர்பு கொள்ளவும்..

    ReplyDelete
  5. அவர் பெயர் முன்னரே தெரியும் ஆனால் அவரது பன்முகத்தன்மை இப்போ தான் தெரியுது. good job :)) நொடிக்கு நொடி ரெகுலரா இல்லாட்டியும் அப்பப்போ பார்ப்பேன்.காரணம் தெரிந்தது தானே:)

    ReplyDelete
  6. மீசை முருகேசன் கொன்னக்கோல் வாசிப்பதில் எக்ஸ்பர்ட் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மக்கள் டிவி பொண்ணு நல்லாவே தமிழ் பேசுதே!

    ReplyDelete
  7. மக்கள் டீவி நிகழ்ச்சி நானும் ரசித்துள்ளேன்! மீசை முருகேஷ் ஐயாவின் கொன்னகோல் முன்பு தூர்தர்சனில் ஒளிபரப்பான போது பார்த்து இருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  8. மீசை முருகேஷ் ஐயா அவர்கள் பழம் இசை கருவிகளில் பல விற்பன்னர். மக்கள் தொலைக்காட்சியின் சிறப்புகள் ஒன்று அதன் " நல்ல தமிழ் " !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ( எனது புதிய பதிவு : முற்பகல் செய்யின்
    http://saamaaniyan.blogspot.fr/2014/06/blog-post.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதிவிடுங்கள்.நன்றி )

    ReplyDelete
  9. மீசை முருகேஷ் ஐயா நல்ல திறமைசாலி. காலி தண்ணீர் பாட்டில் [பிளாஸ்டிக்] வைத்து எத்தனை விதமான சத்தங்கள் உருவாக்குவார். வேறு ஒரு தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் செய்து காண்பித்தார்.

    ReplyDelete
  10. மீசை முருகேசன் ஐயா ஒரு பன்முகத் திறமைசாலி! அவர் கொன்னக்கோலில் கில்லாடிதான் வாத்தியார் பாலகணேஷ் சார் சொன்னது போல....அது போன்று அவர் வித்தியாசமான பொருட்களில் வித்தியாசமான, வழக்கமான ஒலிகளையும், சத்தங்களையும் உருவாக்குவதில் வல்லவர். நாங்கள் பல நிகழ்சிகள் பார்த்திருக்கின்றோம்!

    மக்கள் டிவி இனிதான் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  11. ஜீவன் நீங்கள் இன்னும் அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் விரிச்ச வலையில் விழவில்லையா? வலை உலகைச் சுற்றி வரும் 10 கேள்விகள் அவர் எழுப்பிய கேள்விகள்.....வாருங்களேன் வந்து நீங்களும் அதில் புகுந்து விளையாடுங்களேன்! எந்த வலைத் தளம் போனாலும் உங்களுக்கு அந்த 10 கேள்விகளும் கிடைக்க்கும்! டைம் இருந்தால்....பதில் கொடுங்களேன்!

    ReplyDelete
  12. தங்கள் பதிவு வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! //http://blogintamil.blogspot.in/2014/07/cocktail-fizzy-crissppy.html// நன்றி !

    ReplyDelete
  13. மைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  14. அன்பு நண்பரே தங்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது
    http://www.malartharu.org/2014/09/versatile-blogger-award.html#more

    ReplyDelete
  15. அன்புள்ள அய்யா திரு.ஜீவன் சுப்பு அவர்களுக்கு,



    வணக்கம். புதுயுகம் சேனல் பற்றி கூறியிருந்தீர்கள். புதுயுகம் மற்றும் மக்கள் தொலைக்காட்சிகளில் சிலபல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன . போதிய promo இல்லாததினால் வெகு ஜன பார்வையாளர்களை சென்றடைவதில்லை என்பது உண்மைதான்.

    எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து எனது படைப்புகளைப் பார்துப் கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
  16. ஹலோ! நண்பரே !
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    ReplyDelete

Related Posts with Thumbnails