Apr 12, 2014

பேசாத வார்த்தைகள் : சூப்பர் சிங்கர் , ட்வீட் , ச.இ.க.இ ...!



ட்வீட் !

சிவகங்கை தொகுதியில் நானே போட்டியிடுவதாக நினைத்து ஓட்டுப்போடவும் –ப.சிதம்பரம் பேட்டி.

அய்யய்யோ...! கிடைக்கப்போற ஒன்னு ரெண்டு ஓட்டுக்கும் வேட்டு வச்சுட்டாரே அப்பச்சி – கார்த்தி சிதம்பரம் - மைண்ட் வாய்ஸ் .

               **************************************************************************************

ச.இ.க.இ...!

மண் வாசனையை நுகராத நாசியும்
இடிச்சத்தம் கேளாத செவியும்
மின்னற் கீற்றைப் பார்க்காத கண்ணும்
பிறவிப்பயனடைவதே இல்லை ...!

எமது நாசியும்
செவியும்
கண்ணும்
இன்று பிறவிப்பயனடைந்தன  ...!

              **************************************************************************************

சூப்பர் சிங்கர்.

ஆரம்பித்துவிட்டார்கள் அடுத்த ரவுண்டை . இன்றைய தேதிக்கு நீயா நானாவையும் , சூப்பர் சிங்கரையும் சிலாகிப்பது என்பது ஒரு Style Statement போல ஆகிவிட்டது . முன்பெல்லாம் நீயா நானா புகழ் கோபிநாத் என்று போடுவார்கள் , இப்பொழுது நீயா நானா புகழ் அராத்து என்று பிளக்ஸ் வைக்கிறார்கள் . அதாகப்பட்டது நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு போய்விட்டதாம் .

சூப்பர் சிங்கர் இன்னும் கொஞ்ச நாளில் ஒரு பிராண்ட் ஆக உருவெடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை . Flat ல் நாங்கள் டிவி பார்க்கவில்லை எனிலும் முப்பத்தி சொச்ச வீட்டிலிருந்தும் கோரசாக வந்து விழுகின்றது சூப்பர் சிங்கர் ஒலி.

சொந்தமா சுச்ச்சூ போகத் தெரியாத குஞ்சு , குளுவானை எல்லாம் கூட்டி வந்து பாடு பாடுன்னு பாடுபடுத்துகின்றார்கள் நம் பாசத்திற்குரிய தமிழ் அம்மா , அப்பாக்கள் . ஒரு அம்மா வாய் நிறைய புன்னகையோடு சொல்லுது , காலை ஒன்பது மணி குரல் தேர்வுக்கு முதல் நாள் மாலையே வந்து இடம் பிடித்தோமென்று . இரண்டு வருடங்கள் வீட்டிற்கே தனி பயிற்சியாளர் வரவழைத்து பயிற்சி மேற்கொண்டோம் , இன்னொரு வாய்ப்பு கண்டிப்பாக தரவேண்டுமென்று மற்றுமொரு நிராகரிக்கப்பட குழந்தையின் அம்மா – சண்டை போடுகிறார் . டாக்டராக்க வேண்டும் , இஞ்சினியர் ஆக்கவேண்டும் என்ற தமிழ் பெற்றோர்களின் ஆசையில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பது சூப்பர் சிங்கராக்க வேண்டும் , சூப்பர் டான்சர் ஆகவேண்டும் என்ற ஆசையும் . போகிற போக்கை பார்த்தால் வீதிக்கு நாலு ரியாலிட்டி ஷோ பயிற்சி மையங்கள் வந்துவிடும்போல .


போட்டியில் அடுத்த ரவுண்டிற்கு போகவேண்டுமென்ற ஆதீதமான அழுத்தத்தை குழந்தைகளின் மேலே திணிக்கின்றார்கள் . திணிக்கும் திணிப்பில் எல்லாமே வாந்தியாகத்தான் வெளிவருகின்றது. ஓவியம் , பாட்டு , நடனம் போன்ற கலைகளெல்லாம் இயல்பாய் வெளிவந்தால் தான் சிறப்பே . நம்மாட்களுக்கு இது தெரிவதே இல்லை .


இது எங்கே போய் முடியுமென்று தெரியவில்லை . ரியாலிட்டி ஷோ தோல்வியின் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் பத்து வயது குழந்தை தற்கொலைன்னு செய்தி வரும் வரை  நாமளும் சரி , சேனல்சும் சரி திருந்தமாட்டோமென்றே நினைக்கின்றேன் .


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .



12 comments:

  1. ப.சி சூப்பரூ!
    ச.இ.க.இ. ரசனை.
    இதே எண்ணத்தில் தான் நானும் இந்த நிகழ்ச்சிஐ தவிர்க்கிறேன். நம்ம காலத்தில் மார்க்கு வாங்கலேன்னா கூட இப்படி அழுததில்லயே சகோ!? இந்த பெற்றோர்களை என்ன செய்யமுடியும்:((

    ReplyDelete
  2. ச.இ.க.இ...! - இன்னும் இங்கில்லை...

    ReplyDelete
  3. உண்மைதான் இந்த சூப்பர் சிங்கர் பார்த்து எனக்கும் அதுதான் தோன்றியது..

    ReplyDelete
  4. சூப்பர் சிங்கர்! கொடுமை! பாவம் குழந்தைகளை திறமைகளை வளர்க்கிறோம் என்று சாகடிக்கிறார்கள்! டிவிட் சூப்பர்!

    ReplyDelete
  5. பசிக்கு இந்தத்தடவை மகனின் தோல்வி ருசி நிச்சயம்..

    சூப்பர் சிங்கர் கொடுமை...

    ReplyDelete
  6. //ச.இ.க.இ//

    ஆஹா. கவித கவித.

    ReplyDelete
  7. ஆஹா!ம்ம்கவிதை சூப்பர்!

    ReplyDelete
  8. என் பசங்களை சூப்பர் சிங்கர் பார்க்க விடுறதே இல்ல. சின்ன குழந்தைங்க கூட ஆபாசப்பாடல்களைப் பாடுதுங்க.

    ReplyDelete
  9. முதல் பாலிலேயே சிக்ஸர்! ட்வீட் - ஐ சொன்னேன்! :)

    சூப்பர் சிங்கர் - இந்த நிகழ்ச்சிகள் பார்ப்பதே இல்லை!

    ReplyDelete
  10. கவிதையும் சூப்பர் சிங்கர் பற்றிய கருத்துக்களும் அருமை!!

    ReplyDelete
  11. நல்ல பதிவு நண்பரே...
    உங்கள் ஆருடம் பலிக்காமல் போக பிரார்த்தனைகள்

    ReplyDelete
  12. ரசித்த கவிதை! தேங்க்ஸ் bro :))

    ReplyDelete

Related Posts with Thumbnails