Dec 21, 2013

GOODBYE..!








ஆகிவிட்டது ஒரு வருடமும், சில மாதங்களும் வலையுலகத்திற்கு வந்து  . அது தான் இதுவென்று தெரியாமலே சில பல பதிவுகளை வாசித்திருக்கின்றேன் . அலுவல் நிமித்தமாக, KNITTING MACHINE DETAILS ஐ கூகிளில் தேடப்போய் அது டாலர் நகரம் என்னும் தொடரில் கொண்டு போய்விட்டது . இமைக்க மறந்து , ஒரே மூச்சில் அதுவரை வந்திருந்த பதினெட்டு அத்தியாயங்களையும் வாசித்து முடித்து , எழுதியவரை தேடுகையில் அது ஜோதிஜியின் தளத்தில் கொண்டுபோய்விட்டது . அதன்பின் ஆர்வக்குறுகுறுப்பில் தளம் ஆரம்பித்து , சீனுவின் உந்துதலில் பதிவெழுதி நானும் ஆகிவிட்டேன் பதிவர் .


வலையை அறிமுகப்படுத்திய ஜோதிஜிக்கும்  ,
எழுத உந்திய சீனுவுக்கும்  ,
வலை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்த DD அவர்களுக்கும் நன்றிகள் ....!


தற்சமயம் நான் வேலை பார்க்கும் நிறுவனம் மூலம் தான் எனக்கு கணிப்பொறி அறிமுகமானது . உபோயகப்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது . இன்று வரை அலுவலக இணைப்புதான் . அலுவலகத்தில் மிகச் சொற்பமான நபர்களுக்கு மட்டுமே இணைய இணைப்பு தரப்பட்டுள்ளது . அதில் நானும் ஒருவன் .

வேலைகளுக்கு இடயிடையே , அவ்வப்போது வலையில் வாசிக்க ஆரம்பித்து பின் அது ஒரு பழக்கமாகி , தினமும் மாலை வேலை முடிந்து இரண்டு மணி நேரம் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன் .தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரம் கணினியில் வேலை அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் வலை என கணிப்பொறி பார்த்து, பார்த்து  கண்கள் சீக்கிரமே அயர்ச்சியாகிவிடுகின்றது .போதாக்குறைக்கு , சமீபத்தில்  EDP துறையிலிருந்து ஒரு மின்னஞ்சல் , ஒட்டு மொத்த அலுவலத்திலேயே நான் அதான் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்று . ஆனால் , யாரும் எதுவும் கேட்கவில்லை , மின்னஞ்சலோடு சரி . எந்தக்கட்டுப்பாடுகளும் இல்லை ,தண்டனையும் இல்லை . ஆனால் , அதுதான் பயமாக இருக்கிறது .

  
சுதந்திரத்தைக் காட்டிலும் பெரிய கட்டுப்பாடும் இல்லை ,
நம்பிக்கையைக் காட்டிலும் பெரிய தண்டனையுமில்லை .

எட்டு வருட விசுவாசமான உழைப்பும் ,  திறமையும் அந்த நம்பிக்கைக்கும் , சுதந்திரத்திற்கும் காரணமாக இருக்காலம் . அதைத் தக்கவைத்துக்கொள்வது நல்லதென நினைக்கின்றேன் .

இதுவரை , மேம்போக்காக வாசித்தும் , காமாச் சோமாவென்று வலிந்து திணித்து எழுதிய வார்த்தைகளைக் கொண்டு எழுதியும் , வலையில் உலாவந்தேன் . இப்பொழுது விடைபெறுகின்றேன் . அடுத்தடுத்த செலவுகள் அணிவகுத்து நிற்பதினால் அடுத்த ஆறு , ஏழு மாதங்களுக்கு கணினி வாங்குவதற்கான வாய்ப்பு அறவே இல்லை . So சொந்தக்கணினியுடனும் , செறிவான கருத்துக்களுடனும் மீண்டும் வருகின்றேன் .

நிறைய புதிய விசயங்களை வாசிக்கத் தந்த அனைத்து வலைப்பதிவர்களுக்கும் நன்றி ...!


புத்தகக் காதலர்களுக்கு ஒரு வேண்டுகோள்...!

நாடி நரம்பெல்லாம் பணக்கார கனவு தெறித்த சமயத்தில் வாங்கிய “வெற்றி நிச்சயம்” , நாங்களும் படிப்போம்னு பெருமைக்காக, புத்தக சந்தை போய் வாங்கிய “கதாவிலாசமும்” ஆக மொத்தம் இதுவரை என் வாழ்க்கையில் மொத்தமிரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே வாங்கியிருக்கின்றேன் . வரும் புத்தாண்டு முதல், மாதம் ஒரு புத்தகம் வாங்கவேண்டுமென்று தீர்மானம் எடுத்திருக்கின்றேன் .( ஒரு நாள் முதல்வர் போலல்லாமல் ஐந்து வருட முதல்வர் போன்று இந்தத் தீர்மானம் உயிர்ப்போடு இருக்குமென்று நம்புகின்றேன் J).

முதல் புத்தகமாக, விருப்பமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் “உறுபசி” யைத் தேர்ந்தேடுத்திருக்கின்றேன் . படிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தையும் , புதிய சிந்தனையையும் கொடுக்கும் தமிழ் புத்தகங்களை புத்தகக் காதலர்கள் பின்னூட்டத்தில் சொல்லிச் செல்லவும் . அது , அடுத்தடுத்த மாதங்களுக்கான அனுபவக் கொள்முதலுக்கு உதவியாக இருக்கும் .
  

இப்புத்தாண்டில்
உங்கள் எண்ணங்கள் ஈடேற
வாழ்த்துகிறேன் உளமார ...!





என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .



  

13 comments:

  1. மீண்டும் பதிவில் சந்திப்போம் நிச்சயமாக.
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. வணக்கம்
    புதிய ஆண்டில் புதிய பதிவுடன் சந்திப்போம்...
    வாழ்த்துக்கள்.

    புதிய பதிவாக என்பக்கம் சிறுகதை...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. good bye என்ற தலைப்பை பார்த்து புத்தாண்டு பதிவு என்று கவனக்குறைவாய் இருந்து விட்டேன் .விரைவில் வெகு செறிவாக திரும்புவீர்கள் bro .but
    இதுவரை , மேம்போக்காக வாசித்தும் , காமாச் சோமாவென்று வலிந்து திணித்து எழுதிய வார்த்தைகளைக் கொண்டு எழுதியும் , வலையில் உலாவந்தேன்#இதெல்லாம் ஏற்றுக்கொள்ளமாட்டேன் .
    சமீபத்திய வாசிப்பில் நான் வெகுவாக ரசித்தது அப்துல் ரஹ்மான் "காக்கை சோறு "
    இப்புத்தாண்டில்
    உங்கள் எண்ணங்கள் ஈடேற
    நானும் வாழ்த்துகிறேன் உளமார ...!

    ReplyDelete
  5. good bye என்று சொல்லாதீர்கள் அது மீண்டு(ம்)வருவதை குறிக்காது . good bye for now என்று சொல்ல வேண்டும் .மீண்டும் உங்கள் அடுத்த பதிவில் சிந்திப்போம் bro .

    ReplyDelete
  6. மீண்டும் சந்திப்போம் ஜீவன்சுப்பு..... வெகுவிரைவில்!

    ReplyDelete
  7. Nice Post Wish you all the best by http://wintvindia.com/

    ReplyDelete
  8. Nice Post Wish you all the best by http://wintvindia.com/

    ReplyDelete
  9. //காமாச் சோமாவென்று வலிந்து திணித்து எழுதிய வார்த்தைகளைக் கொண்டு எழுதியும் , வலையில் உலாவந்தேன் // இது உங்களுக்கு நீங்களே போட்டுக்கொள்ளும் வட்டமோ...சதுரமோ ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இன்றைக்கு பெரிதாக இருக்கும் பிரச்சனை நாளை சிறு புள்ளியாகி விடும். கூடிய விரைவில் உங்கள் எண்ணங்கள் ஈடேரட்டும்...

    ReplyDelete
  10. வாசிக்கத் தொடங்கி விட்டீங்கள் எனில் உங்களை நீங்களே செதுக்கத் தொடங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

    ReplyDelete
  11. விரைவில் மீண்டும் வாருங்கள் .காவிரி மைந்தன் மூன்று பாகமும் வாங்கி வாசியுங்கள் மீண்டும் கல்கி வாழ்கின்றார் என்ற உணர்வைத்த்ரும்.

    ReplyDelete

Related Posts with Thumbnails