Jul 26, 2013

பிளாக்குல ட்வீட்டு ...!



                          



சாப்புடுற சாப்பாட்டுல உப்போ, சக்கரையோ அதிகமாயிட்டா, ச்சீ ச்சீ இத மனுஷன் சாப்புடுவானா ன்னு தூரப் போடுறோம் – குப்பை ன்னும் சொல்றோம்.

ஒடம்புல உப்போ, சக்கரையோ அதிகமாயிட்டா வியாதின்னும், வந்தவன நோயாளின்னும் சொல்றோம் .

ஆனா, அளவுக்கும், தேவைக்கும் அதிகமா மண்ணையும் , பொன்னையும் சேக்குரவன பணக்காரன்னும் , பொழைக்க தெரிஞ்சவன்னும் சொல்றோம் ...!”

நியாயமாஆஆரே......? இது.. நியாயமாஆஆரே......?



ஆரஞ்சு மிட்டாயும் , கோலி சோடாவும் இப்பல்லாம் கெடைக்கவே மாட்டேங்குது என்று அலுத்துக்கொள்ளும் என் அருமை அம்மாவுக்கு எப்படிப் புரியவைப்பேன் மன்மோகன் சிங்கின் மகத்துவத்தையும் , உலகமயமாக்கலின் உச்சத்தையும் ...! // BY அமெரிக்க இந்தியத் தமிழன் //.


தலயில சொட்டையும் , வயித்துல தொப்பையும் இல்லாதவர்கள் தான் எங்களுக்கு மாப்பிள்ளையாக வரவேண்டும் – இளம்பெண்கள் ஆசை // இதுக்குப்பேர் ஆசை இல்லங்க பே...ரா...சை...! //.


சீனிவாசனுக்கும் , ராசகொமாருக்கும் ஒரே ஒரு வித்தியாசந்தேன் . முன்னவர் POWER STAR, பின்னவர் POW”D”ER  STAR...! // யப்பா எம்பூட்டு பவுடரு ...! //


பெட்ரோல் டேங் FULL பண்ணுவதென்பது , நடுத்தரவர்க்கத்தின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது //// BY ரிசர்விலேயே வண்டி உருட்டும் மிடில்கிளாஸ் மாதவன் //





என்றென்றும் புன்னகையுடன் ...

ஜீவன்சுப்பு .



28 comments:

  1. Replies
    1. நியாத்தை முதல் ஆளாக ஆதரித்த அண்ணனுக்கு நன்றிகள் ...!

      Delete
  2. அந்த பேராசை வேண்டுமென்று தகவல் சொல்கிறது....

    POW”D”ER STAR... ஹா... ஹா...

    ReplyDelete
  3. ட்வீட்டுலாம் நச்

    ReplyDelete
    Replies
    1. நச் என்று பாராட்டிய மேடம்(ரா)ஜிக்கு நன்றி ...!

      Delete
  4. ஹா ஹா.... கணினி அனுபவம் என்னாச்சு?

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ...!
      கன்னி அனுபவம் ஓ சாரி கணினி அனுபவம் வரும் ஆனா ...ஆனாலும் வரும் ஸ்.பை ...!

      Delete
  5. யோவ் நீ எல்லாம் இந்த ஊர்ல இருக்க வேண்டிய ஆளே இல்லயா.... உடம்பு பூரா மூள

    ReplyDelete
    Replies
    1. அப்ப அமெரிக்கா போயிடவா ...? உமக்கு உடம்பு பூரா கொழுப்பு ...!

      Delete
  6. சூப்பர் கீச்சுகள்.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் கும்மாச்சி ஜி ...!

      Delete
  7. // ரிசர்விலேயே வண்டி உருட்டும் மிடில்கிளாஸ் மாதவன்//
    உமக்கு உடம்பு எல்லாம் கிட்னி

    ReplyDelete
    Replies
    1. //உமக்கு உடம்பு எல்லாம் கிட்னி//

      என்னய்யா நெனச்சுண்டு இருக்கீக .. ஒரு ஆளு ஒடம்பு பூர மூளைன்னு சொல்றான் , நீர் ஓடம்பெல்லாம் கிட்டுனிங்குற ...!

      Delete
  8. எல்லா ட்வீட்டுமே நல்லாருக்குன்னாலும் அந்த மன்மோகன்சிங் ட்வீட் படு யதார்த்தம். இது அமெரிக்க இளைஞனுக்கு மட்டுமல்ல இந்த தலைமுறை அனைத்துக்கும் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. யதார்த்தத்தை பாராட்டிய ஜோசப்ஜி க்கு நன்றி ...!

      Delete
  9. ரசித்தேன் அத்தனை ட்வீட்டுகளையும்......

    ReplyDelete
    Replies
    1. ரசித்த வெங்கட்ஜிக்கு நன்றிகள் ...!

      Delete
  10. பவுடர் ஸ்டார் மிகவும் கவர்ந்தது! பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ஆரஞ்சு மிட்டாயும் , கோலி சோடாவும் இப்பல்லாம் கெடைக்கவே மாட்டேங்குது என்று அலுத்துக்கொள்ளும் என் அருமை அம்மாவுக்கு எப்படிப் புரியவைப்பேன் மன்மோகன் சிங்கின் மகத்துவத்தையும் , உலகமயமாக்கலின் உச்சத்தையும் ...! // BY அமெரிக்க இந்தியத் தமிழன் //.

    ஹா...ஹா... அருமை.

    ReplyDelete
  12. உண்மைகளை உணர்த்தும் நகைச்சுவை..

    ReplyDelete

  13. //தலயில சொட்டையும் , வயித்துல தொப்பையும் இல்லாதவர்கள் தான் எங்களுக்கு மாப்பிள்ளையாக வரவேண்டும் – இளம்பெண்கள் ஆசை // இதுக்குப்பேர் ஆசை இல்லங்க பே...ரா...சை...! //. ///

    ஹா..ஹா.. ஆமா... செம..!

    அனைத்து டிவீட்டும் அருமை

    ReplyDelete

Related Posts with Thumbnails