Oct 2, 2013

“மினி” பதிவர் சந்திப்பு ...!






தலைப்புக்காக மட்டுமே இங்க வந்திருக்கும் அந்த நாலு நல்லுள்ளங்களுக்கு நாலுவாட்டி நன்றி ...!

இரண்டு, மூன்று முறை தள்ளிப்போன “கோவை ஆவி”யுடனும் , “பாலுஜி”யுடனுமான  சந்திப்பு , சென்ற மாதத்தின் ஒரு சுபயோக சுபதினத்தன்று சுபமானது . பஜ்ஜி , சப்ஜி தெரியும் அது என்ன பாலுஜி அப்படின்னு கேக்குறீங்களா…! அவர்தாங்க  நம்ம “மின்னல் வரிகள் பாலகணேஷ்” ஜி ...!
(எப்பேர்ப்பட்ட “பெரிய” மனிதர்களை சந்திச்சுருக்க , இதப்போயி “மினி” பதிவர் சந்திப்புன்னு சொல்ற, ACTUALLY இத நீ “மெகா” பதிவர் சந்திப்புன்னு தானே சொல்லனும்னு நீங்க கேட்குறது புரியுது யுவர் ஆனர்...! ).

சரியாக ஐந்து மணிக்கு சிங்கை SIGNAL க்கு  வருகிறேன் என்று உறுதியளித்து , சொன்னபடியே மிகச்சரியாக ஆறுமணிக்கு சென்று என் உறுதியை அழித்தேன் .  JUNCTION நடைபாதையில் நின்னு நாலு பக்கமும் சுழன்று சுழன்று பார்த்தாலும் கண்ணுக்கெட்டுன தூரம் வரை நம்ம ஜீவன்களை  காணவில்லை ...! கண்ணுக்கு தெரியாத உருவங்கள் இல்லையே நம் ஜீவன்கள் , எங்க போனாங்க ...! சரி, போஃனிப்பார்க்கலம்னு , போஃனெடுத்து அல்லோ...! அல்லோ...! அல்லோ...! ன்னு கூவுனா , நடைபாதை கடைக்காரர் , யாரடா இவன்...? ஜெபக்கூட்டத்துல சொல்ல வேண்டியத JUNCTION ல நின்னு சொல்லிட்டு இருக்காங்குற மாதிரி பார்த்தார் ...! நல்ல வேளை “அல்லோ ஆவின்னு” கூப்பிடல , இல்லாங்காட்டி எதிர்த்தாப்புல இருந்த A 3 POLICE STATION ல  தள்ளிருப்பாங்க ....! நல்லா வைக்குறாங்கய்யா பேரு “ஆவி” , “ஸ்கூல் பையன்”னு ....!

கொஞ்சம் தள்ளி நின்னு மறுபடி கூவ ஆரம்பிச்சேன் , சத்த நேரத்துல “யோவ் யோவ்” ன்னு அன்பான!? ஒரு குரல் ....! கடைக்காரர் தான் கான்ட்டாயிட்டோரோன்னு திரும்பி பாத்தா... அட நம்ம “பாலுஜி” ...! மகிழுந்தில் இருந்து அகமகிழ்ந்து அடியேனை அழைத்துக்கொண்டிருந்தார். அதிவேகத்துல போயி அண்ணேன் எப்புடி இருக்கீக ன்னு ஜன்னல் வழியே கைநீட்டி  , அப்டிக்கா தலையையும் சேர்த்து ஓட்டுனர் சீட்டுல இருந்த ஆவிக்கும் நீட்ட, ஆவி அரண்டுபோயிட்டார். யோவ் மொதல்ல வண்டில ஏறுய்யா ...இல்லாங்காட்டி வண்டியோட சேர்த்து மாநகராட்சி ரதத்துல ஏத்திருவாய்ங்க....! (சொந்த வண்டி வச்சுருக்கவனுக்கு மட்டுமே தெரியும் ட்ராபிக் போலீசின் அருமை ....! ) ஆவியின் ஆணைக்கிணங்க வண்டி ஏறினேன் .

வண்டில ஏறுன பிறகு, ஆவி மட்டும் ரெண்டு வாட்டி என்னைய திரும்பி, திரும்பி பார்த்தாப்புல ...!
என்னய்யான்னு கேட்டா ... இல்ல புரோபைல் போட்டோவுல வேற மாதிரி இருந்தீரு ... அதான்ன்னு இழுத்தார்  ...! போதாக்குறைக்கு நா வேற மங்கூஸ் கட்டிங் போட்டுகினு , மீச , தாடியெல்லாம் வளிச்சுட்டு நாதஸ்வரம் வாசிக்குற ட்ரூப்புல இருந்து தப்பி வந்த மாதிரியே இருந்தனா ... பயபுளைக்கு, உண்மையிலே இவன் அவன்தானான்னு டவுட்டு ...! இப்டில்லாம் டவுட்டு படுவாருன்னு தெரிஞ்சுருந்தா கையோட ஒரு நசிரியா படம் எடுத்துனு போயிருந்துருப்பேன் ....!

அல்லோ ஆவி ...! புரோபைல் படத்த வச்சுக்கினு ஆளுகள அடையாளம் காணமுயற்சி செய்றதுங்கறது   , கம்ப்யூட்டர்ல வரஞ்ச படத்த வச்சுக்கினு தீவிரவாதிய தேடுறமாதிரி ...! நம்மளால கண்டே புடிக்கமுடியாது , அவனா வந்து மாட்டுனாதான் உண்டு ....! என்ன புரிஞ்சுதா ...?

தொடர்ந்த பயணத்தின் வழியில் “நாயகன்” பட வசனத்தை எம்மிடம் கேள்வியாக வைத்த ”பாலுஜி” க்கு “ஆளவந்தான்” பட வசனத்தை பதிலாக உரைத்தேன் .

“ஆவி வீட்டுக்கு” போனவுடன் , ஆவி பறக்க காஃபி இல்லாட்டி குளிர்பானம் தருவாருன்னு பார்த்தா, மனுஷன் லேப்டாப்ப தொறந்து நசிரியா பாட்ட போட்டுட்டு , பாருங்க பாஸ்  ரெம்ப அழகா இருக்கும்குறாப்புல  ....! அட ஆண்டவா  ...! என்ன மாத்த்ரி சம்மூகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம் ....?

ஆவி & பாலுஜி - ஒரு சிறு குறிப்பு : 

                            ACTUALLY இருவருக்கும் “பெரிய” குறிப்பு தான் எழுதணும் . BUT, நம்மளால “தி.கொ.போ.சீ” அளவுக்கெல்லாம் “விலா”வாரியா எழுதமுடியாது  . SO, “விரல்”வாரியா ஒரு சிறு குறிப்பு ....! J

இடி இடிக்கும் சிரிப்பு
வெடி வெடிக்கும் பேச்சு
குறுகுறுக்கும் பார்வை 
தததடக்கும் வேகம்...
இதுதான் ஆவி ....!

ஆவியை போலவே அவர் மனசும் ரெம்ப ...... . ஆவியிடமிருந்து மிக விரைவில் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை எதிர்பார்க்கலாம் ...கலாம் ...லாம்...ம் ...!

பாலுஜி – அவர் எழுத்தை வா”சிக்காம” ஆளை மட்டும் பார்த்திருந்தா கொஞ்சம் அரண்டு போயிருப்பேன் ....! என்னா “LOOK”க்க்க்கு...! மனுஷன் LOOKக்க பார்க்கும்பொழுது திக்கான டிக்காஷன் மாதிரி இருந்தாலும் , பேச்சுல  , பசுமாட்டு பால் மாதிரி அப்டி ஒரு வெள்ளந்தித்தனம்  ...!

பொன்னியின் செல்வனிலிருந்து ஒரு வசனத்தை பேசிக்காட்டினாரு பாருங்க ....! சான்சே இல்ல ....! AAAAAWESOME...! ஒருவேள உண்மையாகவே இப்டிதான் இருந்திருக்குமோ ங்குற அளவு அட்டகாசம் ...! பதிவ இயக்குனர்களே ...! அருமையான குணச்சித்திர நடிகரை மிஸ் பண்ணீடாதீங்க ....!

பொன்னியின் செல்வனை ஒலிச்சித்திரமாக கொண்டுவரலாம் என்ற பழைய பேச்சுவார்த்தை  பேச்சாகவே இருக்கின்றது என்று  பரஸ்பரம் ஆவியும் , பாலுஜியும் பேசிக்கொண்டபோது தெரிந்து கொண்டேன். ஆகப்பெரிய மெனக்கெடலும் , ஆர்வமும் , பயிற்ச்சியும் , நேரமும் தேவைப்படும் ஒரு சவாலான விஷயம் அது . பாலுஜி , ஆவி , தி.கொ.போ.சீ , பிபி , ஸ்.பை ,DDD ,ரூபக் , அரசன் ..... SO & SO..... இவர்களைப்போன்ற ஆர்வமும் , திறமையும் கொண்டவர்கள் முயற்சி செய்தால்  ஒலிச்சித்திரத்தை ஒலிக்கவிடலாம் . நிச்சயம் அது பதிவர்களின் திறமையை பறைசாற்றும் விதமாக அமையும் ...! 


OKAY ….! இப்பவே ரெண்டு பக்கத்த தாண்டிடுத்து ...! எல்லை தாண்டிய தீவிரவாதம் நல்லதுக்கில்லை என்பதால் இத்தோட பதிவர் சந்திப்பு முடியுது ....! முடியுது ...! மூணாவதா நீங்களே சொல்லிக்குங்க பாஸ் .....!

டிஸ்கி(!?) : நகைச்சுவையும் , திகிலும் கலந்த ஒரு CRIME நாவல் எழுதுவது சம்பந்தமாக பாலுஜியும் , ஆவியும் தீவிரமாக பேசிகொண்டிருந்தார்கள் . ஊரோடு ஒத்து வாழ்வது தானே உத்தமம் ....! செரி, நாமளும் CRIME தொடர் எழுதலாம்னு நினைக்கும்போதே , மனஸ் மண்டையிலே தட்டி சொல்லுது ..... மகனே நீயெல்லாம் எழுதுறதே CRIME தான் ... இதுல தனியா வேறயாக்கும்னு .....! OKAY ன்னு அப்டியே விட்டுட்டேன் ....! NO NO .... எழுதச்சொல்லி போராட்டம்லாம் நடத்தப்புடாது ..ப்புடாது ...! ப்புடாது...!

ஏன்னா....!

நானெல்லாம் மனச்சாட்சியோடு வாழ்பவன் .....!


என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .


39 comments:

  1. “விலா”வாரியா எழுதா விட்டாலும் “விழா"வாரியான எழுத்து நடை...! என்ன ஒரு படத்தை கூட காணாம்...? ஆவியின் தளத்தில் எதிர்ப்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்... ஒலிச்சித்திரத்தை ஒலிக்கவிட நான் ரெடி...

    ReplyDelete
    Replies
    1. இப்போதான் ஞாபகம் வருது.. அன்னைக்கு நாங்க படமே எடுத்துக்கலை..

      Delete
    2. @ DDD

      சீக்கிரமா ஆரம்பிச்சு வைங்க ...!

      Delete
  2. என்னை விட்டுட்டு எப்போ வந்தாங்க...

    ReplyDelete
    Replies
    1. மச்சி நீதான் திண்டுக்கல் கல்யாணத்துக்கு போயிட்டியே..

      Delete
    2. @ ஜீவா ...!

      பாஸ் இன்னொரு மீட் ஏற்பாடு பண்ணுங்க ...வந்துடலாம் ...!

      Delete
  3. //நல்லா வைக்குறாங்கய்யா பேரு “ஆவி” , “ஸ்கூல் பையன்”னு ....!//

    ஹா ஹா ஹா....

    ReplyDelete
    Replies
    1. ஸ்கூல் பையன் அவரே வச்சிகிட்டது.. என் பேரு எங்க அப்பா அம்மா வச்சது.. நான் பொறுப்பில்லே.. :-)

      Delete
    2. @ ஆவி ...

      ஆவின்னா பேரு வச்சாங்க ...? ஏன்யா ஏன் ...

      Delete
  4. //ஆகப்பெரிய மெனக்கெடலும் , ஆர்வமும் , பயிற்ச்சியும் , நேரமும் தேவைப்படும் ஒரு சவாலான விஷயம் அது . பாலுஜி , ஆவி , தி.கொ.போ.சீ , பிபி , ஸ்.பை ,DDD ,ரூபக் , அரசன் ..... SO & SO..... இவர்களைப்போன்ற ஆர்வமும் , திறமையும் கொண்டவர்கள் முயற்சி செய்தால் ஒலிச்சித்திரத்தை ஒலிக்கவிடலாம் . நிச்சயம் அது பதிவர்களின் திறமையை பறைசாற்றும் விதமாக அமையும் ...! //

    கண்டிப்பாக, இதை ஒரு Project என எடுத்துக்கொண்டு செய்தால் நிச்சயமாக முடியும்...

    ReplyDelete
    Replies
    1. அதுக்கும் ரெடியாயிட்டீங்களா? செம்ம..

      Delete
    2. @ ஸ்பை ...

      Project என எடுத்துக்கொண்டு செய்தால் சிரமம்தான் ...! love & Passion இருந்தாதான் முடியும்னு நினைக்குறேன் ....!

      Delete
    3. @ ஆவி ...

      அதுக்கும்னா ....?

      Delete
  5. //வண்டில ஏறுன பிறகு, ஆவி மட்டும் ரெண்டு வாட்டி என்னைய திரும்பி, திரும்பி பார்த்தாப்புல ...!//

    கலவரக்காரன் ன்னு தாடி எல்லாம் வச்சி சும்மா சே-குவாரா ரேஞ்சுக்கு போட்டோ போட்டுட்டு "காமேஸ்வரன்" கமல் மாதிரி முன்னாடி வந்து நின்னா மனுஷன் குழம்ப மாட்டானா?

    ReplyDelete
    Replies
    1. எப்ப பார்த்தாலும் நசிரியா நினைப்பாவே இருந்தா குழப்பமாத்தான் இருக்கும் ...!

      Delete
  6. //“ஆவி வீட்டுக்கு” போனவுடன் , ஆவி பறக்க காஃபி இல்லாட்டி குளிர்பானம் தருவாருன்னு பார்த்தா, மனுஷன் லேப்டாப்ப தொறந்து நசிரியா பாட்ட போட்டுட்டு//

    குளிர் பானத்தை விட ஜில்லுன்னு நஸ்ரியா படம் காமிச்சேனே.. என்றும் மக்களை குளிர்விக்கும் சேவையில் உங்கள் ஆவி..

    ReplyDelete
    Replies
    1. குளிர்விக்கும் சேவையில் உங்கள் "பாவி "- :(

      Delete
  7. //“தி.கொ.போ.சீ” அளவுக்கெல்லாம் “விலா”வாரியா எழுதமுடியாது . SO, “விரல்”வாரியா ஒரு சிறு குறிப்பு //

    ஹஹஹா

    ReplyDelete
  8. //ஆவியை போலவே அவர் மனசும் ரெம்ப ...... //

    தலைகீழா நின்னு கூட ஒசிச்சுட்டேன். அந்த டேஷ்ல என்ன போடறதுன்னு ஒரு பிடியும் கிடைக்கலையே.

    ReplyDelete
    Replies
    1. //ஆவியை போலவே அவர் மனசும் ரெம்ப ...... .//

      மென்மை-ன்னு போட்டுக்கோங்க... நான் பழகின வரையில் அப்படித்தான் தோணுது.... :)

      Delete
    2. நன்றி ஸ்.பை.. ஆனா பயபுள்ள உலகத்துக்கு வித்தியாசமா எதோ சொல்ல நினைக்குதுன்னு தோணுது.

      Delete
    3. பெரிசுன்னு சொல்ல வந்தேன்யா ....!

      @ ஸ்பை

      நல்லா பழகுறய்யா நீர் ...!

      Delete
  9. //நகைச்சுவையும் , திகிலும் கலந்த ஒரு CRIME நாவல் எழுதுவது சம்பந்தமாக பாலுஜியும் , ஆவியும் தீவிரமாக பேசிகொண்டிருந்தார்கள் .//

    தலைவரே, நம்ம கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொன்ன இந்தப் பயபுள்ளைக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.? :)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி... நாம எழுதுற நாவலையே படிக்கக் கொடுக்கலாம்...

      Delete
    2. @ ஸ்பை ...

      யோவ் உங்க அகராதியில தண்டனைனா தூக்கு தண்டனைதானா ....? y திஸ் கொலவெறி ....?

      Delete
  10. //இடி இடிக்கும் சிரிப்பு
    வெடி வெடிக்கும் பேச்சு
    குறுகுறுக்கும் பார்வை
    தததடக்கும் வேகம்...
    இதுதான் ஆவி ....!//

    ஒரு கணம் பழம்பெரும் நடிகர் ரங்காராவ் பத்திதான் சொல்றியோன்னு நினைச்சேன்.

    ReplyDelete
  11. //புரோபைல் படத்த வச்சுக்கினு ஆளுகள அடையாளம் காணமுயற்சி செய்றதுங்கறது , கம்ப்யூட்டர்ல வரஞ்ச படத்த வச்சுக்கினு தீவிரவாதிய தேடுறமாதிரி ..///
    :)
    //இடி இடிக்கும் சிரிப்பு
    வெடி வெடிக்கும் பேச்சு
    குறுகுறுக்கும் பார்வை
    தததடக்கும் வேகம்...
    இதுதான் ஆவி ....!
    //
    சாதரணா ஆ.வி ய புனித ஆவி யா மாத்திட்டீங்களே
    புன்னகையுடன் நீங்க பகிரும் உங்கள் பதிவுகளை புன்னகையுடன் படிக்க முடிகிறது... உங்க Sense of Humour என்றும் வாழ்க !!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, முடிவே பண்ணிட்டீங்களா பாஸ்!!

      Delete
    2. @ விஜயன் ...

      நன்றி தம்பு ....!

      Delete
  12. மினி சந்திப்பை மினியா அழகா சொல்லி முடிச்சிருக்கீங்க ஜி...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. மினி சந்திப்பு பற்றி மிகவும் ஸ்வாரசியமாக சொன்னதால் உங்களுக்கு ஒரு டஜன் நஸ்ரியா போஸ்டர்கள் கோவை ஆவி சார்பாக அனுப்பி வைக்கப்படுகிறது.....

    பாலுஜி வசனம் சொல்லி காண்பித்தாரா? சென்னையில் பலமுறை அவரை சந்தித்தபோதும் இந்த விஷயம் எல்லாம் செய்து காண்பித்ததில்லையே.... இருக்கட்டும்... அடுத்த சந்திப்பு அப்ப கவனிச்சுக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. //ஒரு டஜன் நஸ்ரியா போஸ்டர்கள் கோவை ஆவி சார்பாக அனுப்பி வைக்கப்படுகிறது..... //

      you too Bro....?

      //பாலுஜி வசனம் சொல்லி காண்பித்தாரா? // பயாஸ்கோப்பே காமிப்பாரு ...!

      Delete
  14. பொன்னியின் செல்வனை ஒலிச்சித்திரமாக கொண்டுவரலாம் என்ற பழைய பேச்சுவார்த்தை பேச்சாகவே இருக்கின்றது என்று பரஸ்பரம் ஆவியும் , பாலுஜியும் பேசிக்கொண்டபோது தெரிந்து கொண்டேன்

    சிறு சிறு பகுதிகளாக் யூட்யூப்பில் பதியலாமே..!

    ReplyDelete
    Replies
    1. பதியலாம் ....! யாராவது செல்ஃப்பெடுக்கணும் ....! பார்க்கலாம் ...

      Delete
  15. அடப்பாவி! காமெடியும் கிரைமும் கலந்து செய்தல் சரியா வருமான்னு பேசின கம்பெனி ரகசியத்தை சொல்லிட்டியே... அந்த கதையில் நீ தான்யா வில்லன்! நாங்க பெரிய பதிவர்கள் என்பது (உருவத்தில்) எல்லாருக்கும் தெரிந்தது தானே? கிண்டலாக்கும்? நீ சொன்னதை படிச்சு எந்தனை பேரு என்னை பொன்னியின் செல்வன் நடிக்க சொல்லி கேட்க போராங்களோ...? கடவுளே... இந்த அப்பாவி ஜீவனை அந்த தீவிரவாதி ஜீவன் கிட்ட இருந்து காப்பாத்து!

    ReplyDelete

Related Posts with Thumbnails