Jun 22, 2013

ஸ்ரீராம் பார்த்தசாரதி மீட்டும் ஆனந்த யாழ் ...!




ஆயிரக்கணக்கான திரைப்பாடகர்கள் இருந்தாலும் ஒரு சிலருக்கு ஒரு சில குரல்கள் மட்டும் ரெம்பப்பிடிக்கும் . அப்படி எனக்கு ரெம்பப்பிடித்த இருவரில் ஒருவர் “ஸ்ரீராம் பார்த்தசாரதி” மற்றொருவர் “பல்ராம்” . இருவருக்குமே தனித்தன்மையான குரல் . ஏதோ ஒரு வகையில் என்னைக்கட்டிபோட்டுவிடும் குரல்கள் இருவருடையதும்.

ஸ்ரீராம் குரலை எங்கு எப்பொழுது கேட்டாலும் எனக்கு பழைய அல்லது பால்ய நினைவுகள் தான் வந்து வருடும் . ஆங்கிலத்தில் NOSTALGIA என்று சொல்வார்கள் அதேபோலத்தான்  . அந்த நினைவுகளில்  சந்தோசம் , துக்கம் எல்லாம் கலந்தே வரும் , அது ஏனென்றே தெரியவில்லை . ஆனால் ரெம்பப்பிடிக்கும். அதனால் தெரிந்துகொள்ள ஒருபோதும் விரும்பியதில்லை ..

ஸ்ரீராம் குரல்ல எப்பவுமே ஓர்  Ancient Touch இருப்பதாகத்தான் எனக்குத்தோன்றுகின்றது . அது எந்தவகையான பாடல்களாக இருந்தாலும் சரி . “அதைக்கூடவா” என்று தொடங்கும் ஜெயம்கொண்டான் படத்தில் வரும் பாடல் , கஜினியில் “சுட்டும் விழிச் சுடரே” , கோ படத்தின்  – “வெண்பனியே” , பிதாமகனில் – “இளம்காத்து வீசுதே” என ஸ்ரீராம் பாடிய பாடல்கள் எல்லாமே கடும்குளிருக்கு இதமாய் இருக்கும் கம்பளி போல் அவ்வளவு பிடிக்கும் .

நேற்றுதான் முதல்முறையாக ராமின் “தங்கமீன்கள்” கேட்டேன் . யுவனின் ஆன்மாவிலிருந்து இசை என்று போட்டிருந்தார்கள் . உண்மைதான் மிகையில்லை . ஆல்பத்தில் மொத்தம் நான்கு பாட்டுகள் என்று நினைக்கின்றேன் . “ஆனந்த யாழ்” ஒரே ஒரு பாடல்தான் கேட்டேன் , கேட்கிறேன் , கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் . மற்ற பாடல்கள் கேட்கவே இல்லை . ஒன்றே  போதும் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றது  .

அப்பா தன் மகளை பற்றிப்பாடும் பாடல் . நிச்சயமாக அப்பாக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ரெம்ப்பப்பிடிக்கும் .. மிக எளிமையான , ரசனையான வரிகள் , அதிராத இதமான இசை இதையெல்லாம் விட ஸ்ரீராமின் மயிலிறகான குரல் .

இந்தப்பாடலை ராம் எப்படிக்காட்சிப்படுத்தப்போகிறார் என்று தெரியவில்லை . பறவையே எங்கு இருக்கிறாய் “ என்று கற்றது தமிழ் –ல் வரும் பாடல் காட்சியமைப்பு, நிச்சயமாக நான்றாகவே செய்வார் என்ற நம்பிக்கையை விதைக்கின்றது .


இதுவரை இந்த பாடலை கேட்கவில்லை என்றால் நிச்சயமாக் கேட்டுப்பாருங்கள் ....! ஒன்று உங்கள் குழந்தையின் நினைவுகள் வந்து போகும் இல்லை உங்கள் பால்யத்தின் அப்பாவுடைய  நினைவுகள்  உள்மனதில் வந்துமோதும் .

பாடல் வரிகள் இணையத்திலிருந்து ....

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

இரு நெஞ்சம் இணைத்து பேசிட,
உலகில் பாஷைகள் எதுவும் தேவை இல்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்,
மலையின் அழகோ தாங்கவில்லை.

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

தூரத்து மரங்கள் பார்க்குதடி,
தேவதை இவளா கேக்குதடி,
தன்னிலை மறந்தே பூக்குதடி,
காற்றினில் வாசம் தூக்குதடி அடி
கோவில் எதற்கு ? தெய்வங்கள் எதற்கு ?
உனது புன்னகை போதுமடி !

இந்த மண்ணில் இது போல் யாரு இங்கே,
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் பூசுகிறாய் !

உன் முகம் பார்த்தால் தோணுதடி,
வானத்து நிலவு சின்னதடி,
மேகத்தில் வரைந்தே பார்குதடி,
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,

அதை கையில் பிடித்து ஆறுதல்
உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி !

இந்த மண்ணில் இது போல் யாரும்
இங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் !

நா.முத்துக்குமார் .

பாடல் ...



என்றென்றும் புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு .



27 comments:

  1. உண்மைதான் அற்புதமான குரல் வளம் படைத்தவர் ஸ்ரீராம்.
    காற்றின் மொழி பாடிய பலராமின் குரலோ மென்மையோ மேன்மை.
    ஏற்கனவே கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலை. மனதை வருடும் பாடல் என்பதில் ஐயமில்லை

    ReplyDelete
    Replies
    1. //காற்றின் மொழி பாடிய பலராமின் குரலோ மென்மையோ மேன்மை. //

      ரெம்பச்சரியா சொன்னீங்க .. நன்றி ...!

      Delete
  2. அருமையான பாடல் எனக்கும் பிடிக்கும்.... ஆனால் டிரைலரைப் பார்க்கும்போது இயக்குநர் தியேட்டரில் நம்மை அழவைத்து விடுவார் என்றே தெரிகிறது...

    ReplyDelete
  3. //கடும்குளிருக்கு இதமாய் இருக்கும் கம்பளி போல் //

    யோவ், இங்க கண்ட இடமெல்லாம் வேர்க்குது. காலத்துக்கு ஏத்த மாதிரி உவமை சொல்லுறது தான...

    ReplyDelete
  4. ரசிப்பது அஸ்திவாரம்
    யோசிப்பது கட்டிடம்
    பகிர்வது உள் அலங்காரம்
    எழுதக் கற்றுக் கொண்டது விருந்தோம்பலுக்கு அழைப்பது.

    உங்களுக்கு நான்கும் கைகூடியுள்ளது. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வீடு கட்டி அடிக்குறீங்க அண்ணா ...!சூப்பர் ...!

      Delete
  5. ஒரு சிறிய இடைவேளைக்கு பின் உங்களை பதிவுலகில் காண்பதில் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே மகிழ்ச்சியா ...? இல்ல உள்குத்தா ...?

      Delete
  6. இனிமையான பாடலை அழகாக பகிர்ந்தவிதம் ரசிக்கவைத்தது ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. பாடலின் வரிகள் ரசிக்க வைக்கின்றன. எனக்கு ஏசுதாஸின் குரல் நீ சொன்னது போல சிலிர்ப்பூட்டும் தம்பி. இந்தப் பாடலையும் கேட்டு ரசிக்கிறேன். நல்லதொரு பகிர்வுடன் வந்திருக்கும் ஜீவனுக்கு ரெட் கார்ப்பெட் வெல்கம்!

    ReplyDelete
    Replies
    1. ரெட்கார்ப்பெட் வெல்கம்க்கு ரெம்ப நன்றிண்ணா ...!

      Delete
  9. Hello, i think that i noticed you visited my blog thus i came to go back the
    choose?.I'm trying to find things to enhance my web site!I assume its adequate to use a few of your ideas!!

    Review my homepage - animated desktop wallpaper for windows 8 ()

    ReplyDelete
  10. Great beat ! I wish to apprentice while you amend your web site, how can i subscribe for a blog website?

    The account helped me a acceptable deal. I had been tiny bit acquainted of this your
    broadcast provided bright clear idea

    Have a look at my web page; computer wallpaper desktop background hd free download [http://tdcommunity.guptatechnologies.com/]

    ReplyDelete
  11. Thank you for any other informative blog. The place else
    may I get that type of info written in such a
    perfect manner? I have a mission that I am simply now operating on, and I have been at the look
    out for such info.

    My weblog; wallpapers for macbook pro 13 ()

    ReplyDelete
  12. அருமையான பாட்டினை அறிமுகம் தந்ததுக்கு நன்றிகள் சார்!

    ReplyDelete
  13. உன் முகம் பார்த்தால் தோணுதடி,
    வானத்து நிலவு சின்னதடி,

    மேகத்தில் மறைந்தே பார்குதடி,
    உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,

    அதை கையில் பிடித்து ஆறுதல்
    உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி !

    கேட்டவுடன் சொக்க வைத்த வரிகள், நா முத்துகுமாரால் தான் இது போன்ற வரிகளை அசால்டாக எழுதி விட முடியும், அதற்கும் யுவனால் தான் அற்புதமாக இசை அமைத்து விட முடிகிறது...

    7ஜி ரெயின்போ காலனியில் " ஒருமுறை தான் பெண் பார்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை" என்று எழுதிய அதே முத்துகுமார் ,

    அப்பா தன் மகளை நிலவுடன் ஒப்பிட்டு பாடுவது போல் எழுதபட்ட அந்த வரிகள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது

    ReplyDelete
  14. முதல்முறையாக உங்கள் தளத்தில்தான் இந்தப் பாடலைக் கேட்டேன். மிக மிக இனிமை. பாடல் வரிகள், இசை, ஸ்ரீராமின் குரல் எல்லாமே இதம்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்த ரஞ்சனி மேடம்ஜிக்கு நன்றிகள் ...!

      Delete

Related Posts with Thumbnails