Dec 2, 2013

ஜன்னல் ஓரம்






நமக்கு மிகப் பிடித்தவர்களின் நிகழ்ச்சிகளுக்கு, எப்படி நேரில் போய் சிறப்பிக்க வேண்டுமென்று நினைப்போமோ அதையொத்த நினைப்பின் காரணமாகத்தான் வெகு நாட்களுக்குப் பிறகு திரையரங்கத்திற்குப் போனேன் . பழனியப்பனின் அனைத்துபடங்களையும் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கின்றேன் –. சில படங்களை இரண்டு மூன்று முறைகூட . திரையரங்கில் போய் பார்க்கவேண்டுமென்று நினைத்தது பழனியப்பன் என்ற படைப்பாளிக்கு நான் கொடுக்க நினைத்த மரியாதை .

கதை :

யாரேனும் கதை சொன்னாலோ , எழுதினாலோ கேட்க பார்க்க பிடிக்கும் .மத்தபடி கதை எழுதுவதும் , சொல்வதும் பிடிக்காது & தெரியாது . So , அதை வேறிடங்களில் படித்துக்கொள்ளுங்கள் .

இயக்கம்  :

ரெம்பப் பிரமாதமாக சமைக்கத் தெரிந்தவர் , இம்முறை அடுத்தவர் சமைத்ததை பரிமாறியிருக்கிறார் , தப்பில்லை . பிரச்சனை சமைத்ததிலா இல்லை பரிமாறியதிலா  என்பது தான் எனது சந்தேகம் . ஒரிஜினல் பார்த்தவர்கள் தான் சொல்லவேண்டும்...! பழனியப்பனுக்கு நல்ல வாசிப்பனுபவம் உண்டு .அவரது முந்தைய படங்களும் , பேட்டிகளுமே அதற்கு சாட்சி . பிறகு ஏன் அடுத்தவர் சமைத்ததை  பரிமாறவேண்டும் ..? ஒரிஜினல் ஏதோ ஒரு வகையில் அவரை ஈர்த்திருக்கிறது போல.. என்னைத்தான் ஈர்க்கவில்லை ....!

பேருந்து , மலைப்பயணம் , பண்ணைக்காடு ன்னு அருமையான தளம் . வில்லன் , காமெடியன் , ஹீரோன்னு தனித்தனியாக யாரும் இங்கு இல்லை . எல்லோருக்குள்ளும் எல்லோரும் இருக்கிறார்கள் ங்குற எதார்த்தத்தை பிரதிபலிக்கும் பாத்திரப்படைப்பு . எளிமையான மனிதர்களின் இயல்பான கதை ன்னு அட்டகாசமான அம்சங்கள் . ஆனாலும் , படம் ஈர்க்கவில்லையே ... எங்கே ,எதை தவறவிட்டார்கள் ன்னுதான் தெரியலை . ஈரமான, மண்ணையும் மனிதர்களையும் அப்டியே பார்ப்பவர்களின் மனசுக்குள் புகுத்தியிருக்க வேண்டாமா ...? நம்மையும் பேருந்திற்குள் இருத்தியிருக்க வேண்டாமா... ? பெரும்பாலான காட்சிகளை பார்கும்பொழுது அவுட்டோரில் எடுக்கப்பட்ட நாடகத்தை பார்க்கும் உணர்வு ...!

இப்பொழுதெல்லாம் குடும்பத்தோடு யாரும் படத்திற்கு வருவதில்லை என்கின்ற எண்ணம் மந்திரப்புன்னகையிலேயே இயக்குனருக்கு வந்துவிட்டது . அந்த எண்ணம் இதில்  வலுப்பெற்றுள்ளது தெரிகின்றது . ம.பு யில் பழனியப்பன் தூக்கிய ஆயில் பாட்டிலை ஜ.ஓ வில் பார்த்திபன் , கிருஷ்ண மூர்த்தி , சிங்கம் புலி , விதார்த் ன்னு சிக்கியவர்கள் கையிலெல்லாம் திணித்திருக்கிறார் . பார்த்திபன் ஸ்டியரிங்கை பிடித்திருக்கும் நேரத்தை விட ஆயில் பாட்டிலைத்தன் அதிகம் பிடித்திருக்கிறார் .

பழனியப்பனின் அடையாளமே வசனங்கள் தான் . கவிதை , காதல் , அரசியல்  , நக்கல் ன்னு எல்லாவற்றையும் வசனங்களிலேயே சொல்லிவிடுவார் . இதிலும் வசனங்கள் இருக்கு , பெரும்பாலும்  சந்தானத்திற்கு எழுதியது போலவே .... ஒன்லைனர்ஸ் ....!

நீ என்ன கலர் சட்டை போட்டிருக்கேன்னு கேட்டா கீழ குனிஞ்சு பார்க்காம என்னால் சொல்லமுடியாது – இது தான் நம்ம ஞாபகசக்தி ... கொஞ்சம் யோசிச்சு பார்த்த ரெண்டு மூணு வசனங்கள் நினைவிற்கு வருகிறது ....

“வயசானவங்க சொல்றது வார்த்தையில்லை வாழ்க்கை” .

“கஷ்டத்தையே நெனச்சுட்டு இருந்தா கக்காகூட போகமுடியாது”.

கடவுளிடம் வேண்டியது நடப்பதற்கு முன்பே, நேர்த்திகடனை நிவர்த்தி செய்யும் ராஜேஷ் சொல்லும் வசனம் ...

“டீல் முடிஞ்சா பைசல் பண்றதுக்கு நாமென்ன கடவுள்கிட்ட பிசினசா பேசுறம் ... நம்பிக்கைதான்யா ...!”

ஆஆஆஆஅச்சர்யம் !!!! கரு . பழனியப்பன் படங்களில் இத்தனை இரட்டை அர்த்த வசனங்களா .....? முன்னோட்டம் & முன்பதிவு – இதெல்லாம் குறியீடா ....? என்னமோ போங்கண்ணே .....!


நடிகர்கள் :

பிரிக்க முடியாதது ல – நக்கலும் பார்த்திபனும் முக்கியமான ஒன்னு . இதிலும் அஃதே ...! என்ன, ஒரு வித்தியாசத்திற்காக நெல்லை ஸ்லாங்கில் பேசுகிறார் ... எனகென்னமோ பிடிக்கவே இல்ல .

விமல் – விமலுக்கு போட்டி வேறு யாருமில்ல – களவாணி அறிக்கி தான் – . பார்த்து பார்த்து செதுக்கிய ஒரு பாத்திரத்தை விமல் பிரம்மாதமா செய்வார் . சுமாரான பாத்திரங்களை ரெம்ப சுமாராவே செய்வார்  . மோசமாக வீசப்பட்ட பந்தை எல்லைக்கோட்டிற்கு பறக்க விடுவது பெரிய சாதனையில்லை பாஸ்  , துல்லியமாக வீசப்பட்ட பந்தை எல்லைக்கோட்டிற்கு பறக்கவிடணும்..!

விதார்த்– விதார்த் மைனா பார்ட் டூ ..?

மனீஷா – பாவாடை தாவணியில் லோஹிப் காட்டி லோ லோன்னு அலைய வைக்கிறார் முறையே விமலையும் ஓரிரு காட்சிகளில் நம்மையும் J . பழனியப்பண்ணேன் இந்தப் படத்துக்கு இந்தப்பொண்ணு எதுக்குண்ணேன் ....?

பூர்ணா – பரிபூரணம் – சேலையில் அவ்வளவு பாந்தம் .


இசை :
            “என்னடி என்னடி ஓவியமே “ ஏற்கனவே ஹிட் . மற்ற பாடல்களும் படத்தோடு பார்க்கும்போது பரவாயில்லை ...! ஆல்பத்துல இருந்த பொம்மலாட்டம் பாட்டுக்கு கத்திரி  ....!

ஒளிப்பதிவு :
               மலைக்கிராம்ன்னாலே மைனாவும் , கும்கியும் தான் நினைவிற்கு வருகிறது . அது ஒரு Benchmark . அது இன்னும் தொடப்படாமலே உள்ளது ...!



வழக்கமா, பழனியப்பனின் படங்கள் பார்த்து முடித்த பின் அருமையானதொரு புத்தகம் வாசித்த உணர்வு ஏற்படும்  . இந்த முறை FACEBOOK STATUS படித்தது போன்றதொரு உணர்வு .


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .


28 comments:

  1. பார்ரா ஜீவன் சுப்பு விமர்சனம் எல்லாம் போடுறாரு

    //வழக்கமா, பழனியப்பனின் படங்கள் பார்த்து முடித்த பின் அருமையானதொரு புத்தகம் வாசித்த உணர்வு ஏற்படும் . இந்த முறை FACEBOOK STATUS படித்தது போன்றதொரு உணர்வு .// பைனல் பஞ்ச் அருமை தலைவரே...

    நிச்சயம் பார்க்க வேண்டும் என்று நினைதிருந்தேன்.. பாழாய்ப் போன விமர்சனங்கள் அந்த முடிவை மாற்றியமைத்துவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. நீங்க மட்டுந்தான் விமர்சனம் போடுவீங்களா நாங்களும் போடுவோம்ல :)

      Delete
  2. சமீப காலமாய் கரு.பழனியப்பனை வெகுவாய் பிடித்துள்ளது.. நீங்கள் கூறுவது மிகச் சரி மிகுந்த வாசிப்பனுபவம் உள்ளவர். முதிர்ந்த தெளிவான நிதானமான பேச்சு... இவரது பேச்சிற்கு ரசிகனாகி விட்டேன்... மண் மனம் மாறாத தமிழ்

    ReplyDelete
    Replies
    1. யூ டியூப்ல அவர் பேசிய சில பகுதிகள் கிடைக்கிறது ... கேட்டு பார் சீனு , என்ன கொஞ்சம் உணர்ச்சியா பேசுவாரு ஆனால் நிதானத்தை இழக்க மாட்டாரு ...!

      Delete
  3. //வழக்கமா, பழனியப்பனின் படங்கள் பார்த்து முடித்த பின் அருமையானதொரு புத்தகம் வாசித்த உணர்வு ஏற்படும் . இந்த முறை FACEBOOK STATUS படித்தது போன்றதொரு உணர்வு .// Nice

    ReplyDelete
  4. // அடையாளமே வசனங்கள் தான் // என்னவொரு உன்னிப்பு...!

    ரசிக்க வைக்கும் விமர்சனங்கள் தொடர வேண்டுகிறேன்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. //ரசிக்க வைக்கும் விமர்சனங்கள் தொடர வேண்டுகிறேன்..//

      போக வர போக்குவரத்து செலவுக்கும் சேர்த்து வாராவாரம் ரூபாய் இருநூறு மணியாடர் பண்ணிவைக்க வேண்டுகிறேன் :)

      Delete
    2. // போக வர போக்குவரத்து செலவுக்கும் சேர்த்து வாராவாரம் ரூபாய் இருநூறு மணியாடர் பண்ணிவைக்க வேண்டுகிறேன்... //

      அப(விப)ரீத வளர்ச்சி... வாழ்த்துக்கள் பல...

      (தகவல் சொன்ன நண்பருக்கு நன்றிகளும் பல)

      Delete
  5. நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. இதெல்லாம் சினிமாவை ரசிப்பவர்கள் பண்ணும்வேலை. நாமளாம் படிக்க மட்டுமே!

    ReplyDelete
    Replies
    1. யக்கா நாங்களும் ரசிப்போம் ...!

      Delete
  6. விமர்சனம் அருமை..
    கடைசி வரி நச்...

    ReplyDelete
  7. அடடே, விமர்சனம் வித்தியாசமா இருக்கே... இதுதான் ஜீவன்சுப்புவின் ஸ்டைலோ?

    ReplyDelete
    Replies
    1. .அண்ணா சாப்ப்டீங்களாண்ணா ?அண்ணா சாப்ப்டீங்களாண்ணா ? ன்னு கேக்குற மாதிரி

      ஆடிக்கொரு டைம் அம்மாவாசைக்கு ஒரு டைம் வந்து .. இதுதான் ஜீவன்சுப்புவின் ஸ்டைலோ?இதுதான் ஜீவன்சுப்புவின் ஸ்டைலோ? கேட்டு ரவுசு பண்றீருயா நீர் ...!

      Delete
    2. ஐயோ பாவமேன்னு (!) கமென்ட் போட்டா பதிலுக்கு கலாய்க்கிறீரோ? போயா யோவ், உன் பேச்சு கா...

      Delete
  8. ஜன்னல் ஓர சீட் கிடச்சும் கூட பழனியப்பன் ஏன் ரசிக்கலையோ ?
    த.ம 3

    ReplyDelete
  9. யோவ்..எல்லா டிப்பார்ட்மென்டிலயும் உள்ள வரப்படாது.. உம்ம எல்லை உமக்கு.. என் எல்லை எமக்கு.. (உம்ம ன்னு எழுதினத உம்மா ன்னு படிக்கப்படாது.. :) )

    ReplyDelete
    Replies
    1. (உம்ம ன்னு எழுதினத உம்மா ன்னு படிக்கப்படாது.. :) )

      சாமீ சரணம் ...!

      Delete
  10. கடைசி ரெண்டு வரியை மட்டும் படிச்சிருந்தாப் போதுமேன்னு முழுசாப் படிச்சு முடிச்சதும் தோணிச்சுப்பா! நல்லாத்தேங் சினிமா விமர்சனமும் பண்றே!

    ReplyDelete
  11. நல்ல நல்ல படங்களை கொடுத்தவர் .தலைப்பும் கவிதை மாதிரி இருக்கேன்னு நெனச்சேன் .அட பாவமே good homer sometime nods ஆ ?

    ReplyDelete
    Replies
    1. யானைக்கும் அடிசறுக்கும் .OK யா ?

      Delete
  12. //good homer sometime nods ஆ ?//

    இது ஏதோ பழமொழி மாத்ரி தெரியறது ...! கொஞ்சம் தமிழ்ல விம் போடுங்களேன் ப்ளீஸ் :)

    ReplyDelete
  13. நல்ல விமர்சனம் ஜீவன் சுப்பு. நீங்கள் சொல்வது உண்மைதான் இப்படத்தில் ஏதோவொன்று மிஸ்ஸிங்.. கரு பழனியப்பன் படங்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும். மலயாள ஒரிஜினல் பார்த்திருக்கிறேன்.

    அதில் இதைவிடவும் ஒரு ஈர்ப்பும் சுவாரசியமும் இருக்கும்.

    //ஈரமான, மண்ணையும் மனிதர்களையும் அப்டியே பார்ப்பவர்களின் மனசுக்குள் புகுத்தியிருக்க வேண்டாமா ...?// நிச்சயமாக ஆனால் மலயாளத்தில் அந்த ஈர்ப்பு எனக்குப்பட்டது.

    ReplyDelete

Related Posts with Thumbnails