Aug 23, 2013

தேசிங்கு ராஜா ..!




“தேசிங்கு ராஜா” – “மனம் கொத்திப் பறவைக்கு” பிறகு டி .இமான் மற்றும் எழில் கூட்டணியில் மீண்டுமொரு ஆல்பம் .

நிலாவட்டம் நெத்தியிலே , நெஞ்சுக்குழி மத்தியிலே ,முத்தம் ஒன்னு தந்துவிடு கோசலை “ . கேட்ட மாத்திரத்தில் பிடித்துப்போகும் பாடல். மென் மெலடிகளுக்கு பெயர் பெற்ற உன்னிக்கிருஷ்ணனும் , ஹரிணியும் அட்டகாசமா ஒரு FOLK SONG பாடியிருப்பது ஆச்சர்ய அழகு .

“மலர்களே மலர்களே” பாடுன உன்னி தான் இந்த பாட்ட பாடிருக்காருன்னு சொன்னா  நம்பவே முடியாது . யுகபாரதியின் எளிமையான , நக்கலான அதே சமயம் அழகான வரிகள் . ட்ரைலர் ல பார்க்கும்போது, ஆட்டம் கூட நல்லாத்தான் இருக்கு . அடுத்த சில வாரங்களுக்கு, FM மற்றும் MUSIC CHANNEL களின் FAVOURITE பாடலாக ஒலி(ளி)க்கும் வாய்ப்பு அதிகம் .

அம்மாடி , ஐயோடி” ன்னு நம்ம தானைத்தலைவி ஸ்ரேயா கோஷல் அடுத்தபாடலில் உருகி நம்மையும் உருக்குகிறார் . BUTTER ல பயணிக்கும் கத்தி போல குரல் அவ்ளோ ஸ்மூத். SUSTAIN பண்ணி அடுத்தடுத்த வரிகளை கோர்த்து பாடும்பொழுது நமக்கு மூச்சடைக்குது. ஷ்ரேயா கோஷல் ரசிகர் நற்பணி மன்றம் தாராளமா ஆரம்பிக்கலாம் .ச்...சோ க்யூட் & ச்....ச்..சோ ஸ்வீட்....!

“ஒரு ஓரப் பார்வை” ல் பேவரைட் பாடகர்  பல்ராம் பாடியிருக்கார் . “என்னாடி என்னடி இப்புடி பாக்குற” விஜய் பிரகாஷ் பாடியிருக்கிறார் . ஆஹா வும் இல்ல அய்யோவும் இல்ல ஆவரேஜ் .ரெண்டு பாடல்களும் காட்சியோடு பார்க்கும் பொழுது பிடிக்கலாம் .

2013 லருந்து திடீர்னு 1983 க்கு போனமாதிரி ஒரு ஃபீலிங் எஸ்.பி.பி யோட யாருமே கேக்கவே இல்ல பாடலை கேட்கும்போது.

ஒரு சில இடங்கள்ல சின்ன சின்ன இசைக்கோர்வைகள் வேறெங்கேயோ கேட்ட மாதிரியே ஒரு ஃபீலிங் . குறிப்பா “ஒரு ஓர ஓரப் பார்வை” பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை , “அட்டகத்தி”யின் ஒரு பாடலின் இசையை நினைவு”படுத்துகின்றது”. சூப்பர் சிங்கர் குடும்பம் கோரஸ் பாடியிருக்கும் போல , குரல்கள் எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு . முதலிரண்டு பாடல்களும் ஷ்யூர் ஹிட் . பின்னது மூணும் கேட்க கேட்க பிடிக்கக்கூடும் . பிடிக்காமலும் போகக்கூடும் . ஆல்பத்தோட ஹைலைட் நிலாவட்டம்.

கும்கி , மைனா மாதிரி செஞ்சுரி அடிக்கலைன்னாலும் , செமி ஃபைனல்ல அம்பது ரன் அடிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்  . படத்துல பாட்டு வரும்போது தம் அடிக்க போறவங்க எண்ணிக்கை குறையலாம்  .





என்றென்றும் புன்னகையுடன் ...

ஜீவன்சுப்பு .


6 comments:

  1. நீங்க சொன்ன மாதிரி இரண்டு பாடல்களும் அருமை

    ReplyDelete
  2. அம்மாடி.... ஐயோடி...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. படம் தான் நல்லா இருக்குன்னு சொல்றீங்களோன்னு நினைச்சேன்.. தமிழ் சினிமா மறந்திருந்த ஆரஞ்சு, தக்காளி உருட்டும் சம்பிரதாயங்களை மீண்டும் இந்தப் படத்தில் துவக்கி விட்டனர். எழிலிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை..

    ReplyDelete
  4. அறிமுகத்துக்கு நன்றி இனித்தான் பாட்டு கேட்க வேண்டும்.

    ReplyDelete
  5. இன்றுதான் கேட்கிறேன்... பாடல்கள் அருமை...

    ReplyDelete
  6. அனைவருக்கும் நன்றி ...!

    ReplyDelete

Related Posts with Thumbnails