Oct 22, 2013

விஜய் டீவி - மகாபாரதம் டூ ஆபிஸ் ....!

"திருமணமாகி சிங்கிள் பெட்ரூம்ல குடியிருக்குற ஓர் ஆண்மகனுக்கு மட்டும்தான் சீரியல் பார்ப்பதின் வலி தெரியும் ....!".

சீரியல் :

எல்லா சேனல்களிலும் ஜவ்வு மிட்டாயாக சீரியல்களை இழுக்க , விஜயில மட்டும் பஞ்சு மிட்டாயாக சீக்கிரம் கரைந்துவிடும் சீரியல்கள் ரெம்ப நல்லா இருந்தது . பட் இப்ப இங்கயும் ஜவ்வா இழுக்க ஆரம்பிச்சுட்டாங்க .

சரவணன் மீனாட்சி :

கல்யாணத்துக்கு ஒரு வருஷம் , அப்புறம் குழந்தை பிறக்குறதுக்கு அடுத்த ஒரு வருசம்னு இழுத்தடிச்சவுங்க இரெண்டே எபிசோடுல இருவது வருசத்த தாண்டினது பெரிய சோ(சா)தனை .
(சரவணன் & மீனாட்சி மகனுக்கு பொண்ணு பார்க்குறாங்கப்பா ... மிடில ...). வெகு விரைவில் முடியபோகுதாம் . அப்பாடா ....!

தாயுமானவன் :

அஞ்சு பொண்ணுங்க ஒரு அப்பா ...! வாரா வாரம் ட்விஸ்ட் & டர்ன் ன்னோட பரவா இல்லாம போயிட்டுருக்கு . பாரதி ன்னு ஒரு கேரக்டர் எ.எ ஜெய் மாதிரி அஞ்சு மடங்கு அப்பாவி & அப்புறம் ஒரு அழுகாச்சி அப்பா ..! மகா & கல்யாணி நல்ல நடிப்பு .

ஆபீஸ்  :

மரண மொக்கையான ஒரு நாடகம் ....! எந்தெந்த கலர்களில் பிளைன் சர்ட் மார்க்கெட்ல இருக்கும்னு இந்த நாடகத்த பார்த்தா தெரிஞ்சுக்கலாம் . ஆண்கள் எல்லாம் ஏசியன் பெயின்ட் விளம்பர மாடல் மாதிரியே சுத்தினு திறியுராங்கப்பா ....!

மகாபாரதம் :

சின்ன வயசுல பிளாக் அன்ட் ஒயிட்ல  டி.டி ல பார்த்தது . இப்பொழுது ரெம்ப கலர்ஃபுல்லா விஜய் ல ஆரம்பிச்சுருக்காங்க . ரிச்சான ஒளிப்பதிவு , சூப்பரன கிராஃபிக்ஸ், நல்ல நடிகர்கள் , அருமையான லொக்கேசன்ஸ் & செட்ஸ் , அழகான தமிழ் வசனம்னு ரெம்பவே நல்லா போயிட்டுருக்கு . என்ன ஒன்னு ஏழு மணிக்கு போடுறாங்க ....! நெறைய நாள் பார்க்க முடிவதில்லை . எட்டு , எட்டரை மணிக்கு மேல போட்டா பரவா இல்ல , இன்னும் நெறைய பேரு பார்க்கலாம் ....!

ஆச்சி தமிழ் பேச்சு :
                        ரெம்ப நல்ல நிகழ்ச்சி . தமிழ்ல பேசுறதுனா தூய தமிழ்ல்ல தான் பேசணும்னு நினைக்குறவங்களுக்கு நெல்லை கண்ணன் அவர்கள் பேசும் ஆங்கில கலப்பில்லா எளிய பேச்சுத்தமிழ் நல்ல உதாரணம் . அடுத்தடுத்து அவர் மேற்கோள் காட்டும் குறள் , கவிதை , சங்க இலக்கியம் , சமகால நிகழ்வுகளின் நக்கல்கள்  ன்னு நிகழ்ச்சியின் ஆதாரமே அவர்தான் . தமிழ் கடல்னு ரெம்ப சரியாத்தான் பட்டம் கொடுத்துருக்காங்க . பங்கேற்பாளர்கள் கூட அவர்மேல அளவுகடந்த மரியாதையையும் , அன்பையும் வைத்திருக்கின்றார்கள் . பாராட்டோ , திட்டோ உணர்வுகளை உடனே வெளிப்படுத்திவிடுவது அவரது மற்றுமொரு சிறப்பு .

என்னாச்சுன்னு தெரியல கடந்த இரண்டு வாரமா நெல்லை கண்ணன் அவர்களுக்கு பதிலாக தமிழச்சி தங்கபாண்டியனும் & வழக்கறிஞர் அருள்மொழியும் நடுவர்களாக வந்திருக்கின்றார்கள் . நடுவர்கள் ஆங்கில கலப்போடு பேசுவது நிகழ்ச்சியின் முரண் . நிச்சயமா நெல்லை கண்ணன் ஐயா இல்லாமல் நிகழ்ச்சி கொஞ்சம் இல்ல நல்லாவே தடுமாறுது  .......! தமிழ் கடலுக்கு இணையா வேறு யாரை போட முடியும் ..?

தொகுப்பாளர் சூர்யா அழகான கவிதை, நாசூக்கான கேள்விகள் னு இப்ப அசத்த ஆரம்பிச்சுருக்கார். .
ஜோடி :
         குடும்பத்தோட பார்க்கும் நிகழ்ச்சின்னு விளம்பரத்துல சொல்றாங்க . ஆனா குடும்பத்துல இருக்குறவங்க எல்லாம் தனித்தனியாத்தான் பார்க்கணும் அவ்ளோ அசிங்கமான அசைவுகள் & இரட்டை அர்த்தம்  . ரோபோ சங்கர் பண்றதெல்லாம் டான்ஸ் இல்ல அதுக்கு பேரு ..............................!

சூப்பர் சிங்கர் :

சூப்பர் சிங்கர் - தமிழகத்தின் தூக்க மாத்திரை ...!

கொஞ்ச நாளா ஒதுக்கி வச்சுருந்த நெஞ்ச .........ற செண்டிமென்ட்ஸ் ஸ மறுபடியும் அரம்பிச்சுட்டாங்க. சூப்பர் சீனியர் அல்கேட்ஸ் ஐ நல்ல மரியாதையோடு (டைரக்ட் வைல்ட் கார்டு வாய்ப்போடு ) போட்டியில் இருந்து நீக்கியது பாராட்டுக்கு உரியது .

ரெண்டு வாரத்திற்கு முன் நடந்த பக்திப்பாடல்கள் சுற்று நல்லாருந்துச்சு , பட் போன வருஷம் ஜூனியர்ஸ் பாடுனபோது இருந்த வைப்ரேசன் இந்தவருசம் மிஸ்ஸிங் . இந்த வாரம் ராஜா ஹிட்ஸ் .

MY WISH LIST …

திவாகர் .
ஆந்திராகாரு .
பார்வதி .
தீப்தி .
அல்கேட்ஸ் / ரமேஸ் .

போட்டியில் ஜெயித்தாலும் , தோற்றாலும் திவாகரின் குரலை அடுத்த தலைமுறை நடிகர்களின் ஒப்பனிங் சாங்கில் கேட்கலாம் .

என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .

Oct 14, 2013

ஒரே ஞாபகம் – AWESOME டீசர் & ஐயர் சிஸ்டர்ஸ் HONEY VOICE & SHNKAR TUCKER’S SOOTHING CLARINET...!

இசை அறிவோ , INSTRUMENT’S & திரை மொழி அறிவோ இல்லாத ஒரு C செண்டருக்கும் கீழே உள்ள ரசிகன் தான் நான் . எங்கேயாவது எப்பயாவது அட போடும் பாடல்களையோ , படங்களையோ பார்த்தால் , கேட்டால் அதை சலிக்கும் வரை திரும்ப திரும்ப பார்க்கும் & கேட்கும் பழக்கம் உள்ளவன் . அப்படி அட போட வைத்த மூன்று பாடல்கள் & ஒரு டீசர்  இங்கே ....!

லோக்கல் சேனலில் கடந்த சில நாட்களாக இரண்டு பெண்கள் பாடும் ஆடியோ மேக்கிங்கை பார்க்கவும் , கேட்கவும் நேர்ந்தது ... BUT , யாரு என்ன படம்னு ஒன்னும் தெரியல... எப்டி தேடுவதுன்னு தெரியாமல் அப்டியே விட்டுட்டேன் . இன்று வே.மதிமாறன் அவர்களின் ஒரு பதிவை படிக்கும் போதுதான், அவர்கள் வித்யா & வந்தனா ( ஐயர் சிஸ்டர்ஸ் ) ங்குறது தெரிஞ்சு யூ டியூப்ல தேடிப்பிடித்தேன் .....!

தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது முதலில் வசீகரித்து நிலவு போன்ற வட்ட முகம்தான்...OMG...! இரண்டு பாடல்களை கேட்டேன் முதல்ல மீசை கவிஞனின் “ஆசை முகம் மறந்தேனடி” தமிழ் உச்சரிப்பு ரெம்ப மோசம்னு மதி-ஜி எழுதியிருந்தபடி  ஆஸ்சை முகமென்று ஆரம்பிக்கின்றார்கள் . BUT அழகான பெண்கள் (தமிழ் )கொலை செய்தால் கூட கொஞ்சுவது போலதானே...? எனக்கு கொஞ்சுவது போல தான் உள்ளது  ....!

இரண்டாவது பாடல் “நீ நினைந்தால் ஆகாததும் உண்டோ “ அடடா என்ன ஒரு SOOTHING ஆனா இசைகோர்ப்பு ....! பாடல் வரிகள் யாரென்று தெரியவில்லை . இசை – பெரியசாமி தூரனாம் . வாழ்த்துக்கள் அவருக்கு .

ரெண்டு பாடல்களிலும் மிக முக்கியமான ஒருவருக்கு பங்குண்டு அவர் – SHANKAR TUCKER அமெரிக்கன் CLARINET & MUSIC COMPOSER. நம்மூர் நாதஸ்வரம் மாதிரியான ஓர் இசைப்பானை ஊதுகிறார் பாருங்க .....அட அட அட டா .... AWESOME ...AWESOME.....! பேரைபோலவே சங்கர் டக்கர்யா  ...!

சங்கர் டக்கர் , இயக்குனர் ராதாமோகனின் அசிஸ்டன்ட்  விக்னராஜன் இயக்கிக்கொண்டிருக்கும் “ஒரே  ஞாபகம்” படத்தின் மூலம் தமிழ் படங்களுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் . ஜி.வி & அனிருத் அலர்ட்டா இருங்கப்பா .....!

ஒரே ஞாபகம் டீசர் ஐ தேடிப்பிடித்து பார்த்தேன் . அட்டகாசமான விஷுவல்ஸ் ...! அழகு ....! அழகு ....! டீசர் பார்த்தா எதிர்பார்ப்பு எகிறுது .... படத்தில் பெரும்பாலும் புதுமுகங்கள்  ...!  CINEMATOGRAPHY A.M EDWIN SAKAY இவர் எந்திரன் மேக்கிங்கின் ஒளிப்பதிவாளராம். வாழ்த்துக்கள் எட்வின் & ஒரே ஞாபகம் டீம் .

என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு ....!

Oct 10, 2013

வலைப்பூ திறப்பு விழா அழைப்பிதழ் ....!

ஜீவன் பேஷன் ஸ்டுடியோ ங்குற பேர்ல புதிதாக ஒரு வலைப்பூ ஆரம்பித்திருக்கின்றேன் ....! அனைவரும் அவ்வப்போது வந்து போகவும் ...!

என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .

Oct 7, 2013

ட்வீட்ஸ் - ரிசல்ட், பரத் , ஆயுத பூஜை , தமிழ்மணம் , கவிதை , தமிழ் , கிரிக்கெட் .

அரியர் வைக்காதவனெல்லாம் அறிவாளியுமல்ல , அரியர் வச்சவனெல்லாம் முட்டாளுமல்ல.
// FACTட்டு ...! FACTட்டு ...! RESULTட்டு ...! RESULTட்டு ...!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

“HARD WORK (N) EVER FAILS” – அருண்விஜய், ஆதி, பரத், ஷ்யாம். // உதாரண புருஷர்கள் //

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தை அப்பிடியே “டமில்”படுத்துவதுதான் தமிழாக அறியப்படுகின்றது.  // “வாட் எ கொடும சார்” ...? //

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கிரிக்கெட் தெரிந்த பெண் மனைவியாக வாய்க்கப்பெற்றவர்களெல்லாம் வரம் வாங்கி வந்தவர்கள்.
// முழுசா ஒரு ஓவர் கூட பார்க்க முடியல யுவர் ஆனர்ஸ் //

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மூன்று புள்ளி ஓர் ஆச்சர்யக்குறி ...!
முரண் –
பிரதமர்
சுதந்திர தின உரை
கூண்டுக்குள்...!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த வருஷ ஆயுத பூஜை ஞாயிற்றுக்கிழமையில் . // அடடா ...! லீவு போச்சே...! //

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பதிவை தமிழ்மணத்தில் இணைத்து முடித்தவுடன் , “சன்னலை மூடு” என்று வரும் தகவல், நீ என்னெத்த பெரிசா எழுதி கிழிச்சுட்ட “......... போடான்னு” சொல்ற மாதிரியே ஒரு ஃபீலிங் .....!
// நாங்களும் அவதானிப்போம்ல...! //

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

FACE BOOK STATUSக்கு, பின்னூட்டமாக வரும் TEXT COMMENTஐ விட, PICTURE COMMENT அதகளமா இருக்கு....! பிளாக்குலயும் PICTURE OPTION கொண்டுவாங்க ராசா நல்லாருப்பீங்க..!// ரிக்வொர்ஸ்ட்டு//

என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .