டூரர் பைக்
மெளனம் பேசியதே படம் பார்த்ததில் இருந்து, கட்டுனா அவள கட்டனும்டா ங்குற மாதிரி ,வாங்குனா
டூரர் பைக்தான் வாங்கனும்னு ஓர் ஆசை. நிதர்சனத்தில் ,ஸ்ப்ளெண்டர செண்டர் ஸ்டான்ட் போடுறதே நம் ஆண்மைக்கு
விடப்பட்ட சவால் தான் என்பது வேறு விஷயம் J . நன்பேண்டாக்கள் கிட்ட மேற்படி டூரர் பைக்
ஆசையை பகிர்ந்தபோது , தம்பு...! முதல்ல பில்லியன்ல தைரியாமா உட்காரப் பழகு , அப்புறம்
பைக் பத்தி பேசலாமென பல்ப்பு தான் பதிலாக கிடைத்தது. வருடங்களுக்கு முன் பஜாஜ்
ஷோரூம் போய் அவென்ச்சர் பைக் விலை பற்றி விசாரித்தேன் சொன்ன விலையையும் , மைலேஜ்ஜயும்
கேட்டால் எச்சிலை கூட விழுங்க முடியவில்லை அவ்வளவு வறட்சி . அப்றமென்ன டூரர் பைக்
ஆசையை தூர கடாசிவிட்டு .......க்கேத்த கோவணத்தை வாங்கியாயிற்று . ஆனாலும்
அவ்வப்போது டூரர் பைக் ஆசை கிளர்ந்தெழுவதை தவிர்க்கமுடியவில்லை . எங்காவது பயணத்தின்
போது டூரர் பைக்கர்கள் லெதர் ஜெர்க்கினும் , விண்டேஜ் ஹெலம்ட்டுமாக போவதை
பார்க்கும் போது கண்டெய்னர் கணக்கில் கழிவிரக்கம் வந்து அப்பிக்கொல்கிறது .
வாழ்க்கையில் நிறைய விசயங்கள் பிடிக்கும்போது கிடைப்பதில்லை , கிடைக்கும்பெறும்போது
பிடிப்பதில்லை.
ஆமா இப்ப எதுக்கு டூரர் பைக் புராணம் ...?
நேற்று ஒரு டிவி கமர்ஷியல் பார்த்தேன் . பஜாஜ் அவென்ச்சர் பைக்கிற்க்கானது .
அவ்வளவு அழகாவும் கம்பீரமாவும் இருக்கு விளம்பரம் . FEEL LIKE GOD ...!
என்னம்மா இப்டி
பண்றீங்களேம்மா ...?
கட்சிக்கு ஆள் சேர்க்குறாங்களா
இல்ல ரியாலிட்டி ஷோவிற்க்கு ஜட்ஜுங்க செலக்ட் பண்ராங்களான்னே புரியலையே ....!
காயத்ரி ரகுராம்
கங்கை அமரன்....
இன்னும் ஒருத்தர்
மட்டுந்தேன் பாக்கி. அப்புறம் என்ன ஸ்ட்ரெயிட்டா ஷூட்டிங் தான் ...! ஏய் விசய் டிவி பீ கேர்புல்...!
தட் வட போச்சே மொமெண்ட்..!
தாய்லாந்தில் திருமணம்
செய்துகொள்ள விரும்பும் இந்திய ஜோடிகளுக்கு போக்குவரத்து செலவு உள்பட அனைத்தும் இலவசம்
– தினமலர் செய்தி .
கொஞ்சம்
அவசரப்பட்டுட்டோமோ ...?
வரும் வாரம் ஆராவாரம் ....!
அடுத்த இரண்டு
வாரத்திற்கு விகடன் மேடையில் மிஷ்கின் சாராம் – இந்த வாரம் வலைபாயுதேக்கு
மட்டும் நாலு பக்கத்த ஒதுக்கிருங்க மிஸ்டர் விகடன் தாத்தா .
NEW YEAR RESOLUTION
எந்த RESOLUTION ம் எடுக்கக்கூடாதென்பதே இந்த
NEW YEAR RESOLUTION.
என்றென்றும்
புன்னகையுடன்
ஜீவன்சுப்பு