Oct 2, 2013

“மினி” பதிவர் சந்திப்பு ...!






தலைப்புக்காக மட்டுமே இங்க வந்திருக்கும் அந்த நாலு நல்லுள்ளங்களுக்கு நாலுவாட்டி நன்றி ...!

இரண்டு, மூன்று முறை தள்ளிப்போன “கோவை ஆவி”யுடனும் , “பாலுஜி”யுடனுமான  சந்திப்பு , சென்ற மாதத்தின் ஒரு சுபயோக சுபதினத்தன்று சுபமானது . பஜ்ஜி , சப்ஜி தெரியும் அது என்ன பாலுஜி அப்படின்னு கேக்குறீங்களா…! அவர்தாங்க  நம்ம “மின்னல் வரிகள் பாலகணேஷ்” ஜி ...!
(எப்பேர்ப்பட்ட “பெரிய” மனிதர்களை சந்திச்சுருக்க , இதப்போயி “மினி” பதிவர் சந்திப்புன்னு சொல்ற, ACTUALLY இத நீ “மெகா” பதிவர் சந்திப்புன்னு தானே சொல்லனும்னு நீங்க கேட்குறது புரியுது யுவர் ஆனர்...! ).

சரியாக ஐந்து மணிக்கு சிங்கை SIGNAL க்கு  வருகிறேன் என்று உறுதியளித்து , சொன்னபடியே மிகச்சரியாக ஆறுமணிக்கு சென்று என் உறுதியை அழித்தேன் .  JUNCTION நடைபாதையில் நின்னு நாலு பக்கமும் சுழன்று சுழன்று பார்த்தாலும் கண்ணுக்கெட்டுன தூரம் வரை நம்ம ஜீவன்களை  காணவில்லை ...! கண்ணுக்கு தெரியாத உருவங்கள் இல்லையே நம் ஜீவன்கள் , எங்க போனாங்க ...! சரி, போஃனிப்பார்க்கலம்னு , போஃனெடுத்து அல்லோ...! அல்லோ...! அல்லோ...! ன்னு கூவுனா , நடைபாதை கடைக்காரர் , யாரடா இவன்...? ஜெபக்கூட்டத்துல சொல்ல வேண்டியத JUNCTION ல நின்னு சொல்லிட்டு இருக்காங்குற மாதிரி பார்த்தார் ...! நல்ல வேளை “அல்லோ ஆவின்னு” கூப்பிடல , இல்லாங்காட்டி எதிர்த்தாப்புல இருந்த A 3 POLICE STATION ல  தள்ளிருப்பாங்க ....! நல்லா வைக்குறாங்கய்யா பேரு “ஆவி” , “ஸ்கூல் பையன்”னு ....!

கொஞ்சம் தள்ளி நின்னு மறுபடி கூவ ஆரம்பிச்சேன் , சத்த நேரத்துல “யோவ் யோவ்” ன்னு அன்பான!? ஒரு குரல் ....! கடைக்காரர் தான் கான்ட்டாயிட்டோரோன்னு திரும்பி பாத்தா... அட நம்ம “பாலுஜி” ...! மகிழுந்தில் இருந்து அகமகிழ்ந்து அடியேனை அழைத்துக்கொண்டிருந்தார். அதிவேகத்துல போயி அண்ணேன் எப்புடி இருக்கீக ன்னு ஜன்னல் வழியே கைநீட்டி  , அப்டிக்கா தலையையும் சேர்த்து ஓட்டுனர் சீட்டுல இருந்த ஆவிக்கும் நீட்ட, ஆவி அரண்டுபோயிட்டார். யோவ் மொதல்ல வண்டில ஏறுய்யா ...இல்லாங்காட்டி வண்டியோட சேர்த்து மாநகராட்சி ரதத்துல ஏத்திருவாய்ங்க....! (சொந்த வண்டி வச்சுருக்கவனுக்கு மட்டுமே தெரியும் ட்ராபிக் போலீசின் அருமை ....! ) ஆவியின் ஆணைக்கிணங்க வண்டி ஏறினேன் .

வண்டில ஏறுன பிறகு, ஆவி மட்டும் ரெண்டு வாட்டி என்னைய திரும்பி, திரும்பி பார்த்தாப்புல ...!
என்னய்யான்னு கேட்டா ... இல்ல புரோபைல் போட்டோவுல வேற மாதிரி இருந்தீரு ... அதான்ன்னு இழுத்தார்  ...! போதாக்குறைக்கு நா வேற மங்கூஸ் கட்டிங் போட்டுகினு , மீச , தாடியெல்லாம் வளிச்சுட்டு நாதஸ்வரம் வாசிக்குற ட்ரூப்புல இருந்து தப்பி வந்த மாதிரியே இருந்தனா ... பயபுளைக்கு, உண்மையிலே இவன் அவன்தானான்னு டவுட்டு ...! இப்டில்லாம் டவுட்டு படுவாருன்னு தெரிஞ்சுருந்தா கையோட ஒரு நசிரியா படம் எடுத்துனு போயிருந்துருப்பேன் ....!

அல்லோ ஆவி ...! புரோபைல் படத்த வச்சுக்கினு ஆளுகள அடையாளம் காணமுயற்சி செய்றதுங்கறது   , கம்ப்யூட்டர்ல வரஞ்ச படத்த வச்சுக்கினு தீவிரவாதிய தேடுறமாதிரி ...! நம்மளால கண்டே புடிக்கமுடியாது , அவனா வந்து மாட்டுனாதான் உண்டு ....! என்ன புரிஞ்சுதா ...?

தொடர்ந்த பயணத்தின் வழியில் “நாயகன்” பட வசனத்தை எம்மிடம் கேள்வியாக வைத்த ”பாலுஜி” க்கு “ஆளவந்தான்” பட வசனத்தை பதிலாக உரைத்தேன் .

“ஆவி வீட்டுக்கு” போனவுடன் , ஆவி பறக்க காஃபி இல்லாட்டி குளிர்பானம் தருவாருன்னு பார்த்தா, மனுஷன் லேப்டாப்ப தொறந்து நசிரியா பாட்ட போட்டுட்டு , பாருங்க பாஸ்  ரெம்ப அழகா இருக்கும்குறாப்புல  ....! அட ஆண்டவா  ...! என்ன மாத்த்ரி சம்மூகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம் ....?

ஆவி & பாலுஜி - ஒரு சிறு குறிப்பு : 

                            ACTUALLY இருவருக்கும் “பெரிய” குறிப்பு தான் எழுதணும் . BUT, நம்மளால “தி.கொ.போ.சீ” அளவுக்கெல்லாம் “விலா”வாரியா எழுதமுடியாது  . SO, “விரல்”வாரியா ஒரு சிறு குறிப்பு ....! J

இடி இடிக்கும் சிரிப்பு
வெடி வெடிக்கும் பேச்சு
குறுகுறுக்கும் பார்வை 
தததடக்கும் வேகம்...
இதுதான் ஆவி ....!

ஆவியை போலவே அவர் மனசும் ரெம்ப ...... . ஆவியிடமிருந்து மிக விரைவில் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை எதிர்பார்க்கலாம் ...கலாம் ...லாம்...ம் ...!

பாலுஜி – அவர் எழுத்தை வா”சிக்காம” ஆளை மட்டும் பார்த்திருந்தா கொஞ்சம் அரண்டு போயிருப்பேன் ....! என்னா “LOOK”க்க்க்கு...! மனுஷன் LOOKக்க பார்க்கும்பொழுது திக்கான டிக்காஷன் மாதிரி இருந்தாலும் , பேச்சுல  , பசுமாட்டு பால் மாதிரி அப்டி ஒரு வெள்ளந்தித்தனம்  ...!

பொன்னியின் செல்வனிலிருந்து ஒரு வசனத்தை பேசிக்காட்டினாரு பாருங்க ....! சான்சே இல்ல ....! AAAAAWESOME...! ஒருவேள உண்மையாகவே இப்டிதான் இருந்திருக்குமோ ங்குற அளவு அட்டகாசம் ...! பதிவ இயக்குனர்களே ...! அருமையான குணச்சித்திர நடிகரை மிஸ் பண்ணீடாதீங்க ....!

பொன்னியின் செல்வனை ஒலிச்சித்திரமாக கொண்டுவரலாம் என்ற பழைய பேச்சுவார்த்தை  பேச்சாகவே இருக்கின்றது என்று  பரஸ்பரம் ஆவியும் , பாலுஜியும் பேசிக்கொண்டபோது தெரிந்து கொண்டேன். ஆகப்பெரிய மெனக்கெடலும் , ஆர்வமும் , பயிற்ச்சியும் , நேரமும் தேவைப்படும் ஒரு சவாலான விஷயம் அது . பாலுஜி , ஆவி , தி.கொ.போ.சீ , பிபி , ஸ்.பை ,DDD ,ரூபக் , அரசன் ..... SO & SO..... இவர்களைப்போன்ற ஆர்வமும் , திறமையும் கொண்டவர்கள் முயற்சி செய்தால்  ஒலிச்சித்திரத்தை ஒலிக்கவிடலாம் . நிச்சயம் அது பதிவர்களின் திறமையை பறைசாற்றும் விதமாக அமையும் ...! 


OKAY ….! இப்பவே ரெண்டு பக்கத்த தாண்டிடுத்து ...! எல்லை தாண்டிய தீவிரவாதம் நல்லதுக்கில்லை என்பதால் இத்தோட பதிவர் சந்திப்பு முடியுது ....! முடியுது ...! மூணாவதா நீங்களே சொல்லிக்குங்க பாஸ் .....!

டிஸ்கி(!?) : நகைச்சுவையும் , திகிலும் கலந்த ஒரு CRIME நாவல் எழுதுவது சம்பந்தமாக பாலுஜியும் , ஆவியும் தீவிரமாக பேசிகொண்டிருந்தார்கள் . ஊரோடு ஒத்து வாழ்வது தானே உத்தமம் ....! செரி, நாமளும் CRIME தொடர் எழுதலாம்னு நினைக்கும்போதே , மனஸ் மண்டையிலே தட்டி சொல்லுது ..... மகனே நீயெல்லாம் எழுதுறதே CRIME தான் ... இதுல தனியா வேறயாக்கும்னு .....! OKAY ன்னு அப்டியே விட்டுட்டேன் ....! NO NO .... எழுதச்சொல்லி போராட்டம்லாம் நடத்தப்புடாது ..ப்புடாது ...! ப்புடாது...!

ஏன்னா....!

நானெல்லாம் மனச்சாட்சியோடு வாழ்பவன் .....!


என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .


Sep 27, 2013

ஒரே வார்த்த ...!






ஒரே வார்த்த ...!

காதலியாக சொல்லும்போது , ஜில்லென்று உச்சி குளிர்வது
மனைவியாக சொல்லும்போது , ஜிவ்வென்று உச்சி சூடேருகின்றது ....!

// எரும்ம மாடு.... //



என்றென்றும் புன்னகையுடன் :)
ஜீவன்சுப்பு .




Sep 24, 2013

ராஜா ராணி ...!






ரெம்ப FRESH ஆன ஒரு FEEL GOOD ALBUM ஜீ.வி.பி. யிடமிருந்து ...!

ஆல்பத்தோட ஆரம்பம்   “A LOVE FOR LIFE”  மியூசிக் கேக்கும்போதேல்லாம் “செல்வராகவன்” படம் பாக்குற ஒரு FEEL . VERY SOOTHING COMPOSITION . அனேகமா டைட்டில் SONG ஆக இருக்கலாம் .


அடுத்து, ஆல்பத்தோட ராணி ...! “அஞ்ஞ்சாடே(?) , அஞ்ஞ்சாடே”   . பாடலின் சிறப்பு சக்திஸ்ரீயின் கிறக்கமும் , குழைவும் கலந்த குரல் & பா.விஜயின் வரிகள்  . பொதுவா ஆணின் பார்வையில் சொல்லப்படும் காதலின் தாக்கத்தை பெண்ணின் பார்வையில் சொல்லியிருக்கின்றார்கள் . தங்கள்  உள்ளம் கொள்ளை கொண்ட கள்வர்களின் அழைப்புக்கு காதலிகள் காலர் ட்யூனாய் வைக்க ஏற்ற பாடல் .

“மிளகாப் பூப்போல என்னுள்ளே அழகாப் பூக்க விட்டானே .
வெக்கத்துல விக்க வச்சானே , வெப்பத்துல சிக்க வச்சானே “. வரிகள் செம்ம ....!

ஹெட் போன்ல கேக்கும்போது மட்டுமே பாடல் வரிகளை தெளிவாக கேட்கமுடியும் .


அடுத்து , “ஜில்லென ஒரு மழைத்துளி  “ கடற்கரை சாலையில் காதலியைக் கட்டிக்கொண்டு காற்றோடு பைக்கில் பறப்பது போல ஆரம்பிக்கும் பாடல் , போகப்போக ட்ராபிக் கான்ஸ்டபிளை பார்த்த லைசென்ஸ் இல்லாதவன் போல திணறி மீண்டும் பறக்கின்றது . கிளிண்டன் , V.T.V அல்போன்ஸ் , சூப்பர் சிங்கர் அல்கா பாடியிருக்கின்றார்கள் .


NEXT , “ஹே பேபி” ஆரம்பத்துல வர்ற மியூசிக் ( சாக்ஸாபோன்..?) அட்டகாசம் . ஜி.வி.யோட ஜில்- குரல்ல தொடங்குவது கானா பாலாவோட கர கர CONTRAST குரல்ல முடியுது .


அடுத்து , “இமையே , இமையே” , “ஒரு பாதி கதவு” போல் இல்லாவிட்டாலும் அருமையான மென் மெலோடி . ஜி.வி . யும் சக்திஸ்ரீ யும் பாடியிருக்கின்றார்கள் . வழக்கமாக பாடும் பார்ட்னருக்கு ரெஸ்ட் போல ....!


NEXT , ஓ(டு)டே ஓ(டு)டே ...! அதிர அதிர இசைத்தாலும் , திமிர திமிர வெளிப்படும் குரலுக்கு சொந்தக்காரரான நாம “விஜெய் பிரகாஷ்” & இன்னும் இருவர் பாடியிருக்கின்றார்கள் . “உன்னிமேனனுக்கும்” அப்புறம் ரெம்ப ஸ்பஷ்டமா வார்த்தைகளை பாடுவது அனேகமா நம்ம வி.பி யாத்தானிருக்கும் .


அடுத்து , குட்டியா , க்யூட்டா வந்தனா ஸ்ரீனிவாசின் குரலில் “உன்னாலே”.



டிஸ்கி :        டீசர் & டிரைலர பார்க்கும்போது , காட்சிகளும் , COSTUMES ம் கண்ல ஒத்திக்குற மாதிரி கலக்கலா இருக்கு. படம் எப்டி இருக்கப்போகுதோ தெரியல . ஆனா, கண்ணுக்கும், காதுக்கும் குளிர்ச்சியா , VISUAL & MUSICAL TREAT இருக்கும்னு நம்பலாம் ...!



என்றென்றும் புன்னகையுடன் :)

ஜீவன்சுப்பு .


Sep 17, 2013

பிளாக்குல ட்வீட்டு ...!






மாதச் சம்பளம் வாங்குபவனுக்கு மல்லிகைப்பூகூட  ஆடம்பரப் பொருள்தான்...!  ஒரு முழம் அறுபது ரூவாயாம்  ...!  // மல்லி இப்போ வில்லி...  //    

**********************************************************************************************************************************************************

பெண்கள் பூ வைப்பது OUT OF FASHION என்றும் , தலையில் பூ வைத்தால் பேணும் ஈரும் பெருகும் என்று சொன்னவன் நிச்சயம் ஒரு திருமணம் ஆன ஆடவனாகத்தான் இருக்கக்கூடும் ...! அந்த ஜீவன் எங்கிருந்தாலும் வாழ்க ....! // பாம்பின் கால் பாம்பறியும் //
         
**********************************************************************************************************************************************************

அதென்னமோ தெரியல சேச்சிகள பிடிக்கும் அளவுக்கு சேட்டன்களை பிடிப்பதே இல்லை ....!
// திரு(மதி)வோணம் வாழ்த்துக்கள் by ரெம்ப ரெம்ப நல்லவன் //

**********************************************************************************************************************************************************

மியூசிக் கேக்குறது பிடிக்குதோ இல்லையோ , மியூசிக் கேக்குறது பிடிக்கும்னு சொல்லிட்டு திரியுறது ரெம்பப் புடிச்சுருக்கு - // ஒரு வெளம்பரம் //

**********************************************************************************************************************************************************

காசு கொடுத்து வாங்குற ஜவுளி ரெம்ப நாள் தாங்காட்டியும் பரவா இல்ல , ஓசில வாங்குற கட்டப்பையி ரெம்ப நாள் தங்கணும் ...! // தமிழனின் பர்ச்சேஸ் உத்தி – நான் தமிழன் //

**********************************************************************************************************************************************************

சமீப காலங்களில், தமிழக மக்கள் பேசிப் பேசி சலித்துப்போன இரு ஆங்கில வார்த்தைகள்
B.E & SOFTWARE .

**********************************************************************************************************************************************************










என்றென்றும் புன்னகையுடன் .

ஜீவன்சுப்பு .



Sep 6, 2013

வணக்கம் சென்னை – AWESOME MUSIC BY ANIRUDH…!







முதல் முறை கேட்டு அவ்வளவாக பிடிக்கவில்லை . பதிவர் கே.கே ( கானல்நீர் கருப்பையா ) வோட பதிவை படித்த பின் மறுபடியும் இரவில் கேட்கும் பொழுது ரெம்பப்பிரமாதமா இருந்தது . ராப் , folk , மெலடி ன்னு கலந்து கட்டி அட்ச்சுருக்காப்புல அனிருத் . பாடகராகவும் அசத்தியிருக்கின்றார் . மொத்தம் ஆறில் ஐந்தில் அனிருத் பாடியிருக்கிறார் .

“ஒசக்கா” & “ஐலசா” பாடல கேக்கும் போது, ரஹமான் கடல்ல இன்னொரு பாட்டு போட்ருந்தா இப்டிதான் வந்துருக்குமோங்குற அளவு பிரமாதம் . “ஒசக்கா” வோட  ஸ்லோ வெர்சன் “ஐலசா” அதவிட சூப்பர் . ஹீரோ சிவா வ நெனச்சாதான் கொஞ்சம் கலவரமா இருக்கு , மனுஷன் என்ன பண்ண போறாரோ .

“எங்கடி பொறந்த பாடல்” ஆரம்பத்துல சோக பாட்டு தொனில இருந்தாலும் போகப்போக சூப்பர் . குறிப்பா பாடல் வரிகள் . சச்சின் நீ , அக்தர் நான் ; ஒசாமா நீ , ஒபாமா நான் ; ஆண்டனி நீ ,  பாட்சா நான் .... பாட்சா நான்... செம ரகள ...!

“ஹே” , மற்றும் “ஓ பெண்ணே”  அப்புறம் “சென்னை ராப்” எல்லாமே எக்சலன்ட் ....! . வணக்கம் சென்னை பாடல்கள் கேட்டா பிடிக்காது கேக்க கேக்க தான் பிடிக்கும் .

ஷ்யூர் ஹிட் : ஒசக்கா & ஐலசா .“ஓ பெண்ணே”.









 


என்றென்றும் புன்னகையுடன் ...
ஜீவன்சுப்பு .