Showing posts with label பதிவர் சந்திப்பு .. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு .. Show all posts

Nov 28, 2013

நிலாச்சோறு – பதிவர் சந்திப்பு , நான் ஈ , பண்ணையார் & பத்மினி - இசை , டிக்கெட் & ட்வீட் .





பதிவர் சந்திப்பு :

INDIBLOGGERS அமைப்பின் மூலம் கோவையில், கோவை வாழ் பதிவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். நிகழ் தேதி – 15.12.2013 . நிகழ்விடம் – கோவை – ஆர்.எஸ்.புரம். மேலதிக தகவல்களுக்கு .. http://www.indiblogger.in/bloggermeet.php?id=237.

மேற்படி நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவுமில்லை . ஆனால், முன் கூட்டியே இருக்கையை உறுதி செய்யவேண்டும் . நானும் ஒரு துண்டு போட்டிருக்கிறேன்  J .

சினிமா

திரைப்படங்களில், சாகடிக்கப்பதற்காகவே சில கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கும் . முறையே நம்மையும் , சமயங்களில் அந்த கதாபாத்திரத்தையும்.  முதல் வகையை தவிர்த்து இரண்டாம் வகையில் சாகடிக்கப்படும் (கதையின் திருப்பத்திற்காக) கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நம்மை சலனப்படுத்துவதில்லை . ஆனால் , ஒரு சில படங்களின் ஒரு சில சாகடிப்புகள் மட்டும் என்னவோ செய்துவிடும் , எவ்வளவு நாட்களாயினும்  ....! சமீப காலங்களில் அப்படி சலனப்படுத்திய  இரண்டு கதாபத்திரங்கள்  ...

“கோ” படத்தில் பியாவின் சாகடிப்பு – அழுகாச்சியே வந்துடுச்சு ... பாதிலேயே எழுந்து வந்துடலாமான்னுகூட யோசிச்சேன் ....!

மற்றொன்று,

“நான் ஈ” படத்தில் “நானி”யின் சாகடிப்பு – “நான் ஈ” படக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் ஒரே ஒரு எண்ணம் தான் தோன்றும் ....

“நானி”யை சாகடிக்காம அப்படியே ஒரு அழகான காதல் கதையாவே சொல்லியிருக்கலாமே......?


இசை  :

பண்ணையாரும் பத்மினியும் – இரண்டு நாட்களாக கணினியில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது . ஜி.வி.பி , அனிருத் வரிசையில் அடுத்த இசைப்பாலகன் – ஜஸ்டின் பிரபாகரன் . படத்தின் தளத்திற்கும் , படம் நடக்கும் காலத்திற்கும் JUSTICE பண்ணியிருக்கிறார் என்றே தோன்றுகின்றது . பாடல்கள் எல்லாம் அருமை . VINTAGE FEEL SONGS ...!

பிரபாகரனின் குரல், யுவனை நினைவுபடுத்துவதாக பேச்சு – அப்படித்தான் படுத்துகிறது நேக்கும்   . “எங்க ஊரு வண்டியை” SUPER SINGER JUNIORS ஓட்டியிருக்கிறார்கள் – அருமையான பயணம்  . மற்ற அனைத்துப் பாடல்களுக்கும் பெண் பாடகர்களின் குரல் தேர்வு வெகு பொருத்தம் . பாடல் வரிகள் வாலிபக் கவிஞர் .

என் விருப்பப் பாடல் – ஒனக்காக பொறந்தேனே ...!

விமர்சகர் ஆவியின் பார்வையில் பண்ணையாரும் பத்மினியும் - இங்கே

டிக்கெட் டிக்கெட் ...!

தொடர்வண்டியில் இதுநாள் வரை முன்பதிவு செய்து, “படுத்து”க்கொண்டு பயணித்ததே இல்லை . ALWAYS UNRESERVED தான் .வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்ற போனவாரம் ஒரு வாய்ப்பு . வெகு சிரமப்பட்டு irctc யில் கணக்கு துவங்கி , முன்பதிவும் செய்தேன் . பெருமை பீற்றிக்கொண்டிருக்கும்பொழுது நண்பர் போட்டார் தண்டவாளத்தில் குண்டை . நான் பதிவு செய்திருப்பது RLWL லாம். அதாகப்பட்டது , REMOTE LOCATION WAITING LIST . ரயில்வே பட்ஜெட்டுல நாற்பது ரயில் தமிழ்நாட்டிற்கு விட்டிருக்கிறார்கள் என்றால் கூட நம்பலாம் ஆனால் RLWL சீட்டு உறுதியாகும் என்று நம்பிடாதப்பா ... சாமி சத்தியமா உனக்கு உறுதியாகாது இருக்கை ன்னு சொல்லிட்டு போயிட்டார் . வேறென்ன நண்பர் சொன்னதே நடந்தது . ரத்து செய்த மூன்று நாட்களில் பணம் திருப்பி தரப்பட்டது, ரூபாய் நூறு பிடித்தத்தோடு  .  PRACTICE MAKES A MAN PERFECT...! வேற எப்பூடி சப்பகட்டுறது ...!


பிளாக்குல ட்வீட்டு

ஆயிரத்தெட்டு வசதிகள் இருந்தாலும் APARTMENT ல் குடியிருப்பது LODGE ல் குடியிருப்பதுபோலவே இருக்கிறது   // வாழ்வைத் தொலைத்து பிழைப்பைத் தேடுபவன் L //


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .




Oct 2, 2013

“மினி” பதிவர் சந்திப்பு ...!






தலைப்புக்காக மட்டுமே இங்க வந்திருக்கும் அந்த நாலு நல்லுள்ளங்களுக்கு நாலுவாட்டி நன்றி ...!

இரண்டு, மூன்று முறை தள்ளிப்போன “கோவை ஆவி”யுடனும் , “பாலுஜி”யுடனுமான  சந்திப்பு , சென்ற மாதத்தின் ஒரு சுபயோக சுபதினத்தன்று சுபமானது . பஜ்ஜி , சப்ஜி தெரியும் அது என்ன பாலுஜி அப்படின்னு கேக்குறீங்களா…! அவர்தாங்க  நம்ம “மின்னல் வரிகள் பாலகணேஷ்” ஜி ...!
(எப்பேர்ப்பட்ட “பெரிய” மனிதர்களை சந்திச்சுருக்க , இதப்போயி “மினி” பதிவர் சந்திப்புன்னு சொல்ற, ACTUALLY இத நீ “மெகா” பதிவர் சந்திப்புன்னு தானே சொல்லனும்னு நீங்க கேட்குறது புரியுது யுவர் ஆனர்...! ).

சரியாக ஐந்து மணிக்கு சிங்கை SIGNAL க்கு  வருகிறேன் என்று உறுதியளித்து , சொன்னபடியே மிகச்சரியாக ஆறுமணிக்கு சென்று என் உறுதியை அழித்தேன் .  JUNCTION நடைபாதையில் நின்னு நாலு பக்கமும் சுழன்று சுழன்று பார்த்தாலும் கண்ணுக்கெட்டுன தூரம் வரை நம்ம ஜீவன்களை  காணவில்லை ...! கண்ணுக்கு தெரியாத உருவங்கள் இல்லையே நம் ஜீவன்கள் , எங்க போனாங்க ...! சரி, போஃனிப்பார்க்கலம்னு , போஃனெடுத்து அல்லோ...! அல்லோ...! அல்லோ...! ன்னு கூவுனா , நடைபாதை கடைக்காரர் , யாரடா இவன்...? ஜெபக்கூட்டத்துல சொல்ல வேண்டியத JUNCTION ல நின்னு சொல்லிட்டு இருக்காங்குற மாதிரி பார்த்தார் ...! நல்ல வேளை “அல்லோ ஆவின்னு” கூப்பிடல , இல்லாங்காட்டி எதிர்த்தாப்புல இருந்த A 3 POLICE STATION ல  தள்ளிருப்பாங்க ....! நல்லா வைக்குறாங்கய்யா பேரு “ஆவி” , “ஸ்கூல் பையன்”னு ....!

கொஞ்சம் தள்ளி நின்னு மறுபடி கூவ ஆரம்பிச்சேன் , சத்த நேரத்துல “யோவ் யோவ்” ன்னு அன்பான!? ஒரு குரல் ....! கடைக்காரர் தான் கான்ட்டாயிட்டோரோன்னு திரும்பி பாத்தா... அட நம்ம “பாலுஜி” ...! மகிழுந்தில் இருந்து அகமகிழ்ந்து அடியேனை அழைத்துக்கொண்டிருந்தார். அதிவேகத்துல போயி அண்ணேன் எப்புடி இருக்கீக ன்னு ஜன்னல் வழியே கைநீட்டி  , அப்டிக்கா தலையையும் சேர்த்து ஓட்டுனர் சீட்டுல இருந்த ஆவிக்கும் நீட்ட, ஆவி அரண்டுபோயிட்டார். யோவ் மொதல்ல வண்டில ஏறுய்யா ...இல்லாங்காட்டி வண்டியோட சேர்த்து மாநகராட்சி ரதத்துல ஏத்திருவாய்ங்க....! (சொந்த வண்டி வச்சுருக்கவனுக்கு மட்டுமே தெரியும் ட்ராபிக் போலீசின் அருமை ....! ) ஆவியின் ஆணைக்கிணங்க வண்டி ஏறினேன் .

வண்டில ஏறுன பிறகு, ஆவி மட்டும் ரெண்டு வாட்டி என்னைய திரும்பி, திரும்பி பார்த்தாப்புல ...!
என்னய்யான்னு கேட்டா ... இல்ல புரோபைல் போட்டோவுல வேற மாதிரி இருந்தீரு ... அதான்ன்னு இழுத்தார்  ...! போதாக்குறைக்கு நா வேற மங்கூஸ் கட்டிங் போட்டுகினு , மீச , தாடியெல்லாம் வளிச்சுட்டு நாதஸ்வரம் வாசிக்குற ட்ரூப்புல இருந்து தப்பி வந்த மாதிரியே இருந்தனா ... பயபுளைக்கு, உண்மையிலே இவன் அவன்தானான்னு டவுட்டு ...! இப்டில்லாம் டவுட்டு படுவாருன்னு தெரிஞ்சுருந்தா கையோட ஒரு நசிரியா படம் எடுத்துனு போயிருந்துருப்பேன் ....!

அல்லோ ஆவி ...! புரோபைல் படத்த வச்சுக்கினு ஆளுகள அடையாளம் காணமுயற்சி செய்றதுங்கறது   , கம்ப்யூட்டர்ல வரஞ்ச படத்த வச்சுக்கினு தீவிரவாதிய தேடுறமாதிரி ...! நம்மளால கண்டே புடிக்கமுடியாது , அவனா வந்து மாட்டுனாதான் உண்டு ....! என்ன புரிஞ்சுதா ...?

தொடர்ந்த பயணத்தின் வழியில் “நாயகன்” பட வசனத்தை எம்மிடம் கேள்வியாக வைத்த ”பாலுஜி” க்கு “ஆளவந்தான்” பட வசனத்தை பதிலாக உரைத்தேன் .

“ஆவி வீட்டுக்கு” போனவுடன் , ஆவி பறக்க காஃபி இல்லாட்டி குளிர்பானம் தருவாருன்னு பார்த்தா, மனுஷன் லேப்டாப்ப தொறந்து நசிரியா பாட்ட போட்டுட்டு , பாருங்க பாஸ்  ரெம்ப அழகா இருக்கும்குறாப்புல  ....! அட ஆண்டவா  ...! என்ன மாத்த்ரி சம்மூகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம் ....?

ஆவி & பாலுஜி - ஒரு சிறு குறிப்பு : 

                            ACTUALLY இருவருக்கும் “பெரிய” குறிப்பு தான் எழுதணும் . BUT, நம்மளால “தி.கொ.போ.சீ” அளவுக்கெல்லாம் “விலா”வாரியா எழுதமுடியாது  . SO, “விரல்”வாரியா ஒரு சிறு குறிப்பு ....! J

இடி இடிக்கும் சிரிப்பு
வெடி வெடிக்கும் பேச்சு
குறுகுறுக்கும் பார்வை 
தததடக்கும் வேகம்...
இதுதான் ஆவி ....!

ஆவியை போலவே அவர் மனசும் ரெம்ப ...... . ஆவியிடமிருந்து மிக விரைவில் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை எதிர்பார்க்கலாம் ...கலாம் ...லாம்...ம் ...!

பாலுஜி – அவர் எழுத்தை வா”சிக்காம” ஆளை மட்டும் பார்த்திருந்தா கொஞ்சம் அரண்டு போயிருப்பேன் ....! என்னா “LOOK”க்க்க்கு...! மனுஷன் LOOKக்க பார்க்கும்பொழுது திக்கான டிக்காஷன் மாதிரி இருந்தாலும் , பேச்சுல  , பசுமாட்டு பால் மாதிரி அப்டி ஒரு வெள்ளந்தித்தனம்  ...!

பொன்னியின் செல்வனிலிருந்து ஒரு வசனத்தை பேசிக்காட்டினாரு பாருங்க ....! சான்சே இல்ல ....! AAAAAWESOME...! ஒருவேள உண்மையாகவே இப்டிதான் இருந்திருக்குமோ ங்குற அளவு அட்டகாசம் ...! பதிவ இயக்குனர்களே ...! அருமையான குணச்சித்திர நடிகரை மிஸ் பண்ணீடாதீங்க ....!

பொன்னியின் செல்வனை ஒலிச்சித்திரமாக கொண்டுவரலாம் என்ற பழைய பேச்சுவார்த்தை  பேச்சாகவே இருக்கின்றது என்று  பரஸ்பரம் ஆவியும் , பாலுஜியும் பேசிக்கொண்டபோது தெரிந்து கொண்டேன். ஆகப்பெரிய மெனக்கெடலும் , ஆர்வமும் , பயிற்ச்சியும் , நேரமும் தேவைப்படும் ஒரு சவாலான விஷயம் அது . பாலுஜி , ஆவி , தி.கொ.போ.சீ , பிபி , ஸ்.பை ,DDD ,ரூபக் , அரசன் ..... SO & SO..... இவர்களைப்போன்ற ஆர்வமும் , திறமையும் கொண்டவர்கள் முயற்சி செய்தால்  ஒலிச்சித்திரத்தை ஒலிக்கவிடலாம் . நிச்சயம் அது பதிவர்களின் திறமையை பறைசாற்றும் விதமாக அமையும் ...! 


OKAY ….! இப்பவே ரெண்டு பக்கத்த தாண்டிடுத்து ...! எல்லை தாண்டிய தீவிரவாதம் நல்லதுக்கில்லை என்பதால் இத்தோட பதிவர் சந்திப்பு முடியுது ....! முடியுது ...! மூணாவதா நீங்களே சொல்லிக்குங்க பாஸ் .....!

டிஸ்கி(!?) : நகைச்சுவையும் , திகிலும் கலந்த ஒரு CRIME நாவல் எழுதுவது சம்பந்தமாக பாலுஜியும் , ஆவியும் தீவிரமாக பேசிகொண்டிருந்தார்கள் . ஊரோடு ஒத்து வாழ்வது தானே உத்தமம் ....! செரி, நாமளும் CRIME தொடர் எழுதலாம்னு நினைக்கும்போதே , மனஸ் மண்டையிலே தட்டி சொல்லுது ..... மகனே நீயெல்லாம் எழுதுறதே CRIME தான் ... இதுல தனியா வேறயாக்கும்னு .....! OKAY ன்னு அப்டியே விட்டுட்டேன் ....! NO NO .... எழுதச்சொல்லி போராட்டம்லாம் நடத்தப்புடாது ..ப்புடாது ...! ப்புடாது...!

ஏன்னா....!

நானெல்லாம் மனச்சாட்சியோடு வாழ்பவன் .....!


என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .