“சொல்லுங்கண்ணேன்
சொல்லுங்க” , “கொஞ்சம் நடிங்க பாஸ்” இந்த ரெண்டு நிகழ்ச்சிகளும் எனக்கு மிகவும்
பிடிக்கும் . ரெம்ப, ரெம்ப சுவாரஸ்யமான நிகழ்ச்சி . ரெம்ப சாதாரணமான விசயங்கள,
மக்கள் எப்படி புரிஞ்சுவச்சுருக்காங்கன்னும் , எந்த மாதிரி அதை
வெளிப்படுத்துராங்கன்னும் பார்க்கும்போது செம்ம காமெடியா இருக்கும் . (அடுத்தவங்க
பல்பு வாங்குறத பார்க்குறது
யாருக்குத்தான் பிடிக்காது...! ).
இந்த நிகழ்ச்சிகளை
பார்க்கும்போதெல்லாம் , எனக்கு ஓர் ஆச வரும் , மேற்படி நிகழ்ச்சி மாதிரி
தமிழ்நாட்டின் ஏதாவதொரு ஊரின் பொது எடத்துல , படிச்ச பத்து பேர நிறுத்தி வெள்ளக்
காகிதம் கொடுத்து, ஒரு பக்கத்துக்கு தமிழ்ல எழுதுங்க மக்களே ன்னு சொல்லனும்னு ...!
அப்டி எழுத வச்சு, அதப்படிச்சுப்பாத்தோம்னு வைங்க.. ச்சும்மா சிப்பு சிப்பா
இருக்கும் . வடிவேலு , சந்தானம் காமெடில்லாம் பிச்சை எடுக்கணும், அப்டி அதகளமா
இருக்கும்.
சாமி சத்தியமா
பத்துக்கு நாலு பேரு , நாலு வரிக்கு மேல தாண்டமாட்டாங்க ... சொச்சத்துல பாதி பேரு,
வரிக்கு ரெண்டு எழுத்துப்பிழையோடு தான் எழுதிருப்பாங்க . எழுத்துப்பிழை தவிர்த்து
, இலக்கணப்பிழை , சந்திப்பிழையல்லாம் பாத்தோம்னா ஒருத்தரும் தேரமுடியாது . அதுதான்
இன்றைய நிலை .
பள்ளிப்பருவத்தோடு
முடிஞ்சுபோச்சு தமிழ்ல எழுதுறது . கல்லூரில, கடமைக்கு ஒரு தாள் தமிழ் . மற்றபடி
வேலைக்கு வந்த பிறகு எங்கும் ஆங்கிலம் . தமிழ்ல எழுதுரதுக்கான வாய்ப்பே இல்ல . ஏன்,
பொதுவா எழுதுறதுக்கான வாய்ப்பே இல்லாமப்போச்சு அல்லது போக்கடித்துவிட்டோம் .
தினசரி நாம ஏதாவது எழுதுரோமான்னு யோசிச்சு பத்தா, கையெழுத்து போடுவத தவிர
வேறெதுவும் இருக்குற மாதிரி தெரியல . அதுவும்
சில நேரங்கள்ல டிஜிட்டல் கையெழுத்து இல்லைன்னா பஞ்சிங் ன்னு ஆயிடுத்து . ரெண்டாவது,
கையெழுத்துப் போடுரதையெல்லாம் எழுத்துலேயே சேர்க்கமுடியாது . கைக்கு வந்தத
கிறுக்குறது தானே கையெழுத்து ...!
கடிதம் ..? காணமல்
போன பட்டியல்ல கூட இன்னைக்கு கடிதம் என்ற ஒன்னைக் காணமுடியல . திருமணப்பத்திரிக்கைகள் கூட இன்னைக்கு
ஆங்கிலம் தாங்கி தானே வருது...! நேர்ல கொடுக்குற ஒருசிலர் , பேரே எழுதுறதில்ல,
மொட்டையாத்தான் கொடுக்குறாங்க ...!
ஏதோ தப்பித்தவறி
வலைப்பூவுல எழுதுறதுனால, வட மாநில நடிகைகள் சொல்வது போல கொஞ்சும் கொஞ்சும் தமிழ் வார்த்தைகள் ஞாபகத்துல
இருக்கு . இதக்கூட முழுமையான தமிழ் ன்னு சொல்லமுடியாது தமிங்கிலீஸ் தான் . கைப்பட
காகிதத்துல எழுதும்போதுதான் நம்ம லட்சணம் நமக்கே தெரியுது . இந்த காற்புள்ளி , அரைப்புள்ளி ,
ஆச்சர்யக்குறியெல்லாம் எங்க போடனும்னு தெரியாத தற்குரிகள்ல நானும் ஒருத்தேன்னு
சொல்றதுக்கு வெட்கமாத்தான் இருக்கு. ஆனா அது தான் உண்மை . கொஞ்சம், நா எழுதுன
பதிவுகள(!) படிச்சுப்பாத்தா , கோபிநாத் எப்டி நிமிசத்துக் பத்துத்தடவ வேற, வேற
ன்னும் , சரிதானேன்னும் சொல்றமாதிரி, குறைந்தபட்சம் நாலு வரிக்கு ஒரு எடத்துலயாவது
மூணு புள்ளியும் ஓர் ஆச்சர்யக்குரியும் போட்டிருப்பது நல்லாவே தெரியுது ...!
திடீர்ன்னு
இவனுக்கு என்ன தமிழ்ப்பற்று வந்துருச்சுன்னு உங்களுக்கு தோணலாம், அதற்கு காரணம்
சமீபத்தில படித்த ஒரு பதிவு . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் எனக்கு
ரெம்பப்பிடிக்கும் . அவரயே ஒருத்தரு கயுவி,கயுவி ஊத்திருக்காரு . பரவலான வாசிப்பு
அனுபவமும் , எழுதுகின்ற அனுபவமும் இருக்க
அவருக்கே இப்டின்னா ...?
சரின்னு
இதப்படிச்சு முடிச்சு வீட்டுக்கு போனா அடுத்த அதிர்ச்சி அங்கே செலவுச்சிட்டையில காத்திருந்தது
...!
பொதுவா
, அம்மா எப்ப கடைக்கு போய் வந்தாலும் செலவுக்கணக்கு கண்டிப்பா எழுதீருவாங்க, அது அரரூவாயா
இருந்தாலும் சரி ஆயிரம் ரூவாயா இருந்தாலும் சரி ...! பெரும்பாலும் நா வீட்டுல இருக்கும்போது
என்னையதான் எழுதச்சொல்லுவாங்க . டாக்டர்களுக்கு போட்டியா அண்ணாச்சிக கிறுக்கீருக்கத,
முட்டக்கிளாஸ் வெளக்கு வெளிச்சத்துல படிச்சு சிட்ட எழுதுறதுங்குறது சிறுவயதுல ஒரு பெரிய
சவால் . உ.ப , து.ப ல்லாம் போட்டு சிட்டய முடிச்சா ரெண்டரையோ , மூனரையோ இடிக்கும்.
இதர செலவுன்னு போட்டு கணக்கு முடிக்கலாம்னா அம்மா வுடாது . யோசிச்சு யோசிச்சு கடசில
கணக்கு நேர் பண்ணீரும் . அதுவரைக்கும் தூங்காது , தூங்கவும் வுடாது ...! படிக்காட்டியும் , கொஞ்சம் வருஷம் முன்னாடி
வரைக்கும் இந்தியன் பாட்டி மாதிரி, ஒத்த ஒத்த
எழுத்தா, அழுத்தி அழுத்தி எழுதி அம்மா செலவு
சிட்ட போட்டுட்டுதான் இருந்தாங்க . இப்பத்தான்
போடுறதுல்ல , உண்மைய சொன்னா போட முடியல. இப்பல்லாம், பெரும்பாலும் அண்ணாச்சி கடையில
கூட ஆங்கிலத்துல தானே ரசீது தர்றாங்க, அதான் .
நம்ம
வீட்டுக்காரம்மா போன மாசம்தான் பட்டயப்படிப்பு முடிச்சு பட்டம் வாங்கி வீட்டுக்கு வந்துருக்காக
. அதுனால இந்த மாச செலவு சிட்டய அவுகதான் எழுதீருந்தாக. அதுலதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது
....! அது .....
“மல்லிகை” சாமான் வாங்கிய வகையில் செலவு “ருபய்” : 1150.00
என்னம்மா
இப்டி எழுதீருக்கன்னு கேட்டா , நா என்ன பண்றது தமிழ்ல எழுதி நாலஞ்சு வருசமாச்சு, காலேஜ்ல
புல்லா இங்கிலீசுலதான் படிச்சேன் , எழுதுனேன் அதான் அப்டிங்குராக .
என்னத்தச்சொல்ல
...!
ஆங்கிலோ
இந்தியன் வீடுகள்ல வேல பாக்குற படிக்காத வேலைக்கார அம்மாவுக்கு , ஆங்கிலம்
பேசத்தெரியும் , ஆனா படிக்கவோ , எழுதவோ தெரியாது . அந்த மாதிரி ஆயிடுச்சு
இன்னைக்கு நம்ம நெலம.
செம்மொழியான தமிழ்மொழியே
உனக்கிது பெரும் வலியே...!
வேண்டுகோள் :
இந்தப்பதிவுல கூட நெறைய எழுத்துப்பிழை இருக்கலாம் . என்னன்னு சொன்னீங்கன்னா திருத்திக்குவேன்
.
சிபாரிசு : “அம்மா ,ஆடு , இலக்கணம்” அப்டிங்க்குற தலைப்புல கட்டுரையாளர் / எழுத்தாளர் என்.சொக்கன், தமிழ்பேப்பர்
தளத்துல தமிழ் இலக்கணத்தொடர் எழுதீட்டு வர்றார் . தேவைப்படுபவர்கள் (சு)வாசித்து
எழுதிப்பழகலாம் .
இன்றைக்கு நடைமுறை உண்மைகள் (ஆக்கப்பட்டிருக்கிறது...!)
ReplyDeleteநம் ஆர்வத்தைப் பொறுத்து... விருப்பத்தைப் பொறுத்து தான் மொழி என்பது என்றோ ஆகி விட்டது...! (மறுபடியும் ஆக்..........றது...!)
/// இந்தப்பதிவுல கூட நெறைய எழுத்துப்பிழை இருக்கலாம்... ///
நிறைய நிறைய... பேச்சுத்தமிழ் என்பதால்... நீங்களே ஒருமுறை வாசியுங்களேன்...
நன்றிண்ணா ...! பேச்சு மொழியில் இருக்கவேண்டும் என்றே எழுதினேன் . திருத்திக்கொள்கிறேன் .
Delete"மல்லிகை" - சிரிப்பு பொங்கியது.
ReplyDeleteஅப்புறம், தமிழில் பிழை இல்லாமல் எழுத ஒரே வழி ஆர்வம் மட்டுமே. கல்லூரி போகும் பையன் பிழையோடு எழுதுகிறான் என்றால், அவன் பள்ளியில் தமிழை ஆர்வமாகப் படிக்கவில்லை என்பதே.
அதுபோலவே, பாட புத்தகத்தை தாண்டி எந்த வாசிப்பு பழக்கமும் இல்லை. செய்தித் தாள்கள் கூட படிப்பதில்லை மாணவர்கள். இதற்கு, பெற்றோரும் ஒரு வகையில் காரணம் தான். தங்கள் பிள்ளைகளை, பள்ளிப் புத்தகங்கள் தாண்டி படிக்க விடுவதில்லை. நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வதில்லை. அது சரி, பெற்றோர்கள் முதலில் படித்தால் தானே பிள்ளைகள் தொடர்வார்கள்.
அப்புறம் எஸ்.ரா பற்றி; அவரின் எழுத்துக்களில் இருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம். ஒரு புத்தகத்தைப் படித்தால், அதில் சொல்லப்பட்டுள்ள செய்தி தான் முக்கியமே தவிர, இலக்கணப் பிழைகளும், ஒற்றுப் புள்ளிகளும் இல்லை என்பது என் கருத்து. ஒரு எழுத்தாளர் எழுதிய எல்லா வரிகளையும் நாம் நினைவில் வைத்திருப்பதில்லை. அவர் சொல்ல வந்ததை நாம் உள் வாங்க முடிந்தால் அதுவே போதும்.
இன்னும் ஒன்று; இந்த தமிழ் ஆர்வம், இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் குறைவே. நூற்றுக்கு ஐந்து பேர் தேறினாலே அதிசயம் தான். இதில், தமிழில் பிழை இல்லாமல் எழுதுங்கள் என்றால்.. அவ்வளவுதான். முயற்சி செய்வோம்.
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி இளங்கோ ..!
Delete//அவன் பள்ளியில் தமிழை ஆர்வமாகப் படிக்கவில்லை என்பதே.//
உண்மைதான் , சரியாக பயிற்றுவிக்கப்படாததும் ஒரு காரணமே ..
//அதில் சொல்லப்பட்டுள்ள செய்தி தான் முக்கியமே தவிர, இலக்கணப் பிழைகளும், ஒற்றுப் புள்ளிகளும் இல்லை என்பது என் கருத்து.//
சரிதான் , ஆனால் பரவலாக கவனிக்கப்படும் ஒருவரே இப்படி எழுதும்பொழுது , மற்றவர்களுக்கும் அது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடக்கூடாதே...!
தமில் மொலியை எலுதற தமிலர்கள் பத்தி நீ எலுதிருக்கறதப் படிக்கப் படிக்க சிப்பு சிப்பா வந்துச்சு தம்பி!
ReplyDeleteதமிழை தப்புத் தப்பா எழுதறவங்க ஒரு பக்கம் கொல்றாங்கன்னா.. சரியா எழுதறோம்னு நினைச்சுட்டு கண்ட இடங்கள்ல ஒற்றுக்களைப் போட்டு எழுதி தமிழைக் கொல்றவங்களும் இன்னிக்கு பெருகிட்டிருக்காங்க. அதனால... தமிழ் சரியா எழுதச் சொல்லித்தர இன்னும் பல சொக்கன்கள் தேவை!
நன்றிண்ணா . பல பால கணேஷ் அண்ணன்களும் தேவை ...!
Deleteநீங்கள் சொல்வது உண்மைதான்! தமிழ் மொழி பேச்சுவழக்கிலும் கொஞ்சம் வழக்கொழிந்து ஆங்கில கலப்போடு பேசப்பட்டு வருகிறது! பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைப்பதால் தமிழ் எழுத அவர்களும் தடுமாறுகிறார்கள்! தாய்மொழிக்கு துரோகம் இழைத்துக் கொண்டு இருக்கிறோம்! நல்ல தொரு பகிர்வு! நன்றி!
ReplyDeleteநன்றிங்க ...!
Deleteஉண்மைதான்..தமிழ் இனி மெல்ல சாகும்.,.!
ReplyDelete//தமிழ் இனி மெல்ல சாகும்.,.!//
Deleteஆக்சிஜன் கொடுத்தாவது காப்பாத்திப்புடோணும்...!
ஏன்யா யோவ்... உன்னால எனக்கு இன்னிக்கு வீட்ல அடி விழாதது தான் மிச்சம்...
ReplyDeleteப்ளாக் ஓபன் பண்றேன், மக்களே இந்த இடத்த நல்லா கவனிங்க, காலைல நான் ஆபீஸ்க்கு போகும் போது நல்லா சவுண்டு வச்சி பட்டு கேட்டுட்டு இருந்தேன், ஸ்பீக்கர் ல புல் வால்யும்....
இப்ப மணி 12.30, ஊரே தூங்கிட்டு இருக்கு, ஆவிங்க நடமாடுற நேரம் (அந்த ஆவி இங்கையும் வரும்னு தெரியும், இல்ல கூட்டிட்டு வரேன்) சரி நம்மாளு எதோ தத்துவம் சொல்லப் போறாரேன்னு பிளாக ஓபன் பண்ணினா
நம்ம ராம் சார் அடிதொண்டையில இருந்து பேசுறாரு மகள்களைப் பெற்றன்னு அலறுராறு , அப்புறம் என்னாச்சு தெரியுமா இப்படி ஒரு மகனைப் பெற்றுட்டோமேன்னு எங்க வீட்ல எல்லாரும் அலறுனாங்க...
நியாயம்மாறே இது நியாயம்மாறே
யோவ் இன்னொருவாட்டி பாக்காமலா போகப் போறோம்... அன்னிக்கு இருக்கு, நா எழுதுன மொக்க பதிவை எல்லாம் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து படிக்க சொல்றேன்,,, இத விட பெரிய தண்ட இருக்கவே முடியாது... :-)
//ராம் சார் அடிதொண்டையில இருந்து பேசுறாரு மகள்களைப் பெற்றன்னு அலறுராறு//
Deleteஎன்னாது அலறுராறா ...?, மகனே உனக்கு ஒரு மகள் பிறக்கட்டும் ...!
ஒலி அளவை குறைத்துவிட்டேன் ..! இப்போ "பட்டு" கேட்டுப்பார் சீனு ...!
அந்த 'தேர முடியாதவர்கள்' பட்டியல்ல நானும் வருவத நினைத்தா கொஞ்சம் வெட்கமாத்தான் இருக்கு...
ReplyDeleteஹா ஹா ஹா ...!
Deleteஎனக்கொரு துணை ...!
செம்மொழியான தமிழ்மொழியே
ReplyDeleteஉனக்கிது பெரும் வலியே...!
உண்மையே...
நன்றி குமார் ...!
Deleteநம்ம தமிலும் இந்த வகை தான் ஜீவன்! :)
ReplyDeleteஅட தமிழ்ல இங்கே இணையத்திலாவது எழுதறோமேன்னு கொஞ்சம் மகிழ்ச்சி....
:) நன்றி நாகராஜ் அண்ணா ...!
ReplyDelete