Jul 23, 2013

இசையும் , மழையும் - ரசித்த பதிவும் ...!








இசையையும் , மழையையும் பிடிக்காதவர்கள் யாரேனும் இந்த உலகத்தில் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை . எல்லோரும் பிடிக்குமென்றே சொல்கின்றார்கள் . முகநூல் முதல் ரெஸ்யூம் வரை எனக்கும் பிடிக்குமென்றே சொல்லிவருகின்றேன் . ஆனால் என்னால்  எந்தவொரு மழைப்பொழுதையும் , இசைத்துளியையும் ரசித்து, லயித்து சொல்லமுடியவில்லை ....! எத்தனை பேரால் சொல்ல முடியுமென்று தெரியவில்லை . உங்களால் முடியுமென்றால் நீங்கள் ஒரு ரசிகன் பாஸ் ...!

முன்னிரவு மழையையும் , பின்னிரவின் இசையையும் அழகாக , அமைதியாக லயித்து , ரசிக்கவேண்டுமேன்று நினைக்கும் ஒவ்வொருமுறையும் , மனம் அவசர ஊர்தியாய் பறந்துவிடுகின்றது .   நடிப்பதற்கு , இசைப்பதற்கு , வரைவதற்கு , பாடுவதற்கு , எழுதுவதற்கு எப்படி பொறுமையும், திறமையும்  தேவைப்படுகின்றதோ , அதைப்போலவே ஏன் அதைவிட அதிகமாகவே பொறுமையும் , திறமையும் தேவப்படுகின்றது ரசிப்பதற்கு ...!

ஆழமாக , அழகாக , ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக சில ஜீவன்கள் அனைத்தையும் ரசித்துக்கொண்டே இருக்கின்றது , ரசனை மிக்க அந்த ஜீவன்களால் தான் இந்த உலகம் இன்னும் ஜீவித்திருக்கின்றது என்று திடமாக நம்புகின்றேன்  .

ரசிப்பதே ஒரு கலை எனும்பொழுது , ரசித்ததை அப்படியே எழுத்தில் வார்த்து வாசிப்பவர்களையும் நேசிப்பவர்களாக , ரசனைமிக்கவர்களாக மாற்றும் செயலை என்னவென்று சொல்ல  ...!

இந்தியாவின் முதன்மையான பத்திரிகை என்று “மார்”தட்டிக்”கொல்லும்” பத்திரிகைகள் எல்லாம் நடிகைகளின் “....பை” மட்டுமே பிரதானமாக அட்டைப்படமாக போட்டு , ரசித்து லயித்து எழுதும் காலத்தில் , அழகழகான ரசனைகளை மிக அற்புதமாக வார்த்திருக்கிறார்கள் நம் வலையுலக நண்பர்கள் . நான் மிக ரசித்த இரண்டு பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அளவற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றேன்  . இந்தப்பதிவுகளையும் , பதிவர்களையும் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம் . தவறவிடக்கூடாத இந்தப்பதிவுகளை , தவறவிட்டவர்களுக்கு  மீட்டெடுத்துக்கொடுக்கும் முயற்சிதான் இந்தப்பதிவு ....!.

ரசனையின் உச்சமான இந்த இரண்டு பதிவுகளையும் படித்து முடித்தவுடன் எனக்கு இதுதான் தோன்றியது ....... அப்படியே ஓடிச்சென்று கட்டியணைத்து , உச்சி முகர்ந்து , நச்சென்று முத்தமிடத்தோன்றியது அந்த அழகான ரசனைவாதிகளின் கரங்களுக்கு.
    
பாடல் கேட்ட கதை – இளையராஜாவின்இயற்பியல் பகுதி - குமரன் .

வாரியார் – சித்திரமே செந்தேன் மழையே – தேவா சுப்பையா .

இந்த ஒரு பதிவு மட்டுமல்ல , இவர்கள் எழுதும் அத்துனை பதிவுகளுமே ரசனையின் உச்சம்தான். இவர்களைப் பற்றிய இந்தப்பதிவால்  நான் பெருமைப்பட்டுக்கொள்கிறேன் . மிக அழகான அனுபவத்தை தந்த தேவா அண்ணனுக்கும் , குமரன் அண்ணனுக்கும்( !) கடைநிலை ரசிகனின் கனிவான நன்றிகள் ...!

  


என்றென்றும் புன்னகையுடன்

ஜீவன்சுப்பு .

22 comments:

  1. சக பதிவர்களின் பதிவை ரசித்து பகிர்ந்து கொண்டதில்........ எனது நண்பர் என்று சொல்லிக் கொள்ள பெருமைப்படுகிறேன்...! ஏனென்றால் எனக்கு தெரிந்து வலையுலகம் வந்து சிறிது நாட்களிலே... மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன...? என்பதை புரிந்து கொண்டமைக்கு பாராட்டுக்கள்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நேரம் கிடைப்பின் :

    மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன...? : (http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_08.html

    அல்லது

    பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க! : http://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post.html)

    ReplyDelete
  3. அருமையான பதிவர்களை அழகாக அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அறிமுகப்படுத்தவில்லை , அறியத்தந்தேன் ...!

      Delete
  4. குட் போஸ்ட்.. அண்ணே அவர் வாரியார் இல்ல. வேரியர் :))

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ...! மறுபடியும் பல்ப்பு ..! தமிழ் அர்த்தம் போர்வீரன் தானே ...?

      போர்வீரன்னு உச்சரிக்கும் போது இருக்குற கம்பீரம் வேரியர்ல இல்லையே ...! ஏதோ டிபன் கேரியர் மாதிரில்லா இருக்கு ...! எப்பவுமே தமிழ் அழகுதேன் ...!

      நன்றி பாசமலரே ..!

      Delete
  5. கடைநிலை ரசிகனின் கனிவான நன்றிகள்

    இது தான் தன்னடக்கமா?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தெரியாததான்னேன் ...!

      Delete
  6. உங்களின் அடுத்த பகிர்வு : http://schoolpaiyan2012.blogspot.com/2013/07/blog-post_24.html

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. நல்ல விஷயம்...

    ரசித்த பதிவுகளைச் சொல்லியிருப்பது நன்று.

    ReplyDelete
  8. தேவா அண்ணாவின் எழுத்துக்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்...
    குமரன் படிக்கிறேன்...
    அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. குமரன் எனக்கு பதிவு மூலம் அறிமுகம் அவரின் பாடல் ரசனை வியப்பே அதே போல வேரியர் இன்னும் பிடிக்கும்!

    ReplyDelete
  10. இசையை நம் எல்லாராலும் ரசித்து லயித்து சொல்ல முடியுமா என்று தெரியவில்லை... ஆனால் மழை எல்லாருக்கும் பொதுவானதுதானே :-) இசையும் பொதுவானது தான்... ஆனால் இசையை உருகாக்க பிரம்மாகள் வேண்டும்... மழைக்கு இயற்க்கை மட்டுமே போதுமே :-)

    நீங்கள் கூறியதில் இஒருந்து வாரியர் அவர்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்... அட்டகாசமாக எழுதுகிறார்...

    நீங்களும் தான் :-)

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் தான் :-)--- பயபுள்ள ரெம்ப மருவாதையா பின்னூட்டம் போட்ருக்கே , எதுனாச்சும் உள்குத்தோ ...!

      தம்பு! அது வேரியர் இல்லையாமாம் ...!

      Delete
  11. முதலில் அந்த தளங்களுக்கு சென்று வாசித்த பின்பே இங்கு வருகிறேன். ரசனையோடு ஒத்துப்போகிற விஷயங்களை பகிர்ந்த உங்களுக்குத்தான் என் நன்றியை தெரிவிக்க வேண்டும்.

    ReplyDelete

Related Posts with Thumbnails