Showing posts with label விஜய் டிவி . சூப்பர் சிங்கர் .. Show all posts
Showing posts with label விஜய் டிவி . சூப்பர் சிங்கர் .. Show all posts

Apr 12, 2014

பேசாத வார்த்தைகள் : சூப்பர் சிங்கர் , ட்வீட் , ச.இ.க.இ ...!



ட்வீட் !

சிவகங்கை தொகுதியில் நானே போட்டியிடுவதாக நினைத்து ஓட்டுப்போடவும் –ப.சிதம்பரம் பேட்டி.

அய்யய்யோ...! கிடைக்கப்போற ஒன்னு ரெண்டு ஓட்டுக்கும் வேட்டு வச்சுட்டாரே அப்பச்சி – கார்த்தி சிதம்பரம் - மைண்ட் வாய்ஸ் .

               **************************************************************************************

ச.இ.க.இ...!

மண் வாசனையை நுகராத நாசியும்
இடிச்சத்தம் கேளாத செவியும்
மின்னற் கீற்றைப் பார்க்காத கண்ணும்
பிறவிப்பயனடைவதே இல்லை ...!

எமது நாசியும்
செவியும்
கண்ணும்
இன்று பிறவிப்பயனடைந்தன  ...!

              **************************************************************************************

சூப்பர் சிங்கர்.

ஆரம்பித்துவிட்டார்கள் அடுத்த ரவுண்டை . இன்றைய தேதிக்கு நீயா நானாவையும் , சூப்பர் சிங்கரையும் சிலாகிப்பது என்பது ஒரு Style Statement போல ஆகிவிட்டது . முன்பெல்லாம் நீயா நானா புகழ் கோபிநாத் என்று போடுவார்கள் , இப்பொழுது நீயா நானா புகழ் அராத்து என்று பிளக்ஸ் வைக்கிறார்கள் . அதாகப்பட்டது நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு போய்விட்டதாம் .

சூப்பர் சிங்கர் இன்னும் கொஞ்ச நாளில் ஒரு பிராண்ட் ஆக உருவெடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை . Flat ல் நாங்கள் டிவி பார்க்கவில்லை எனிலும் முப்பத்தி சொச்ச வீட்டிலிருந்தும் கோரசாக வந்து விழுகின்றது சூப்பர் சிங்கர் ஒலி.

சொந்தமா சுச்ச்சூ போகத் தெரியாத குஞ்சு , குளுவானை எல்லாம் கூட்டி வந்து பாடு பாடுன்னு பாடுபடுத்துகின்றார்கள் நம் பாசத்திற்குரிய தமிழ் அம்மா , அப்பாக்கள் . ஒரு அம்மா வாய் நிறைய புன்னகையோடு சொல்லுது , காலை ஒன்பது மணி குரல் தேர்வுக்கு முதல் நாள் மாலையே வந்து இடம் பிடித்தோமென்று . இரண்டு வருடங்கள் வீட்டிற்கே தனி பயிற்சியாளர் வரவழைத்து பயிற்சி மேற்கொண்டோம் , இன்னொரு வாய்ப்பு கண்டிப்பாக தரவேண்டுமென்று மற்றுமொரு நிராகரிக்கப்பட குழந்தையின் அம்மா – சண்டை போடுகிறார் . டாக்டராக்க வேண்டும் , இஞ்சினியர் ஆக்கவேண்டும் என்ற தமிழ் பெற்றோர்களின் ஆசையில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பது சூப்பர் சிங்கராக்க வேண்டும் , சூப்பர் டான்சர் ஆகவேண்டும் என்ற ஆசையும் . போகிற போக்கை பார்த்தால் வீதிக்கு நாலு ரியாலிட்டி ஷோ பயிற்சி மையங்கள் வந்துவிடும்போல .


போட்டியில் அடுத்த ரவுண்டிற்கு போகவேண்டுமென்ற ஆதீதமான அழுத்தத்தை குழந்தைகளின் மேலே திணிக்கின்றார்கள் . திணிக்கும் திணிப்பில் எல்லாமே வாந்தியாகத்தான் வெளிவருகின்றது. ஓவியம் , பாட்டு , நடனம் போன்ற கலைகளெல்லாம் இயல்பாய் வெளிவந்தால் தான் சிறப்பே . நம்மாட்களுக்கு இது தெரிவதே இல்லை .


இது எங்கே போய் முடியுமென்று தெரியவில்லை . ரியாலிட்டி ஷோ தோல்வியின் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் பத்து வயது குழந்தை தற்கொலைன்னு செய்தி வரும் வரை  நாமளும் சரி , சேனல்சும் சரி திருந்தமாட்டோமென்றே நினைக்கின்றேன் .


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .