Jul 31, 2013

கணினி கற்ற கதை ...!






தொடர்பதிவில் எம்மைக் கோர்த்துவிட்ட ஸ்பை க்கு ஒரு கொட்டு ....!

முட்டையப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும் ...? எனக்கு C ++ பாடம்  தான் ஞாபகத்துக்கு வரும் ...! ( ஏன்னு ல்லாம் விலாவாரியா சொன்னா , எம்மேல் நீங்க வச்சுருக்க கொஞ்சநஞ்ச  மரியாதையும்(?) மானாவாரியா மண்னைக்கவ்விரும்...! ஸோ... நீங்களே யூகிச்சுக்குங்க).  

இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில், அறந்தாங்கி பாலிடெக்னிக்- கணினி செய்முறைக்கூடத்தில் தான்   கூட்டத்தோடு கூட்டமா , எதுவுமே செய்யாம எட்டி நின்னு எக்கிப் பார்த்தேன் . அதுதான் கன்னி  கணினி தரிசனம் . கணினியே தொடாம C,C++ லாம் படிச்ச(?) பாக்கியவான் அடியேன். கல்லூரியில் பசையுள்ள பசங்கல்லாம் தனியா கணினி வகுப்புக்கு போயி , பேருக்கு பின்னாடி என்னென்னமோ எழுதிக்குவாங்க ...! மெயில் ஐடி வச்சுருக்கவனை எல்லாம் , மெர்சிடிஸ் கார் வச்சுருக்கவன பாக்குற மாதிரி “ஆ” ன்னு  பார்த்த நாட்கள் அவை .

அப்புறம் படிச்சு முடிச்சு பெங்களூரு , சென்னை , கோவை , திருச்சி , திருப்பூருன்னு நாலு வருசத்துல அஞ்சு ஊருல வேல பாத்து, மறுபடி  கோவை யிலேயே செட்டிலானவரைக்கும் கம்ப்யூட்டருக்கும் நமக்கும் காத தூரம் . சொந்த பந்தமெல்லாம் கம்ப்யூட்டர் படிக்கலையா , கம்ப்யூட்டர் படிக்கலையான்னு கெடக்கிற கேப்புல எல்லாம் கிடா வெட்டி, கம்ப்யூட்டர ஒரு விரோதியாகவே ஆக்கிப்புட்டாங்க .

இரண்டாயிரத்து ஆறு வரைக்கும் கம்ப்யூட்டர் ல , “கண்ட்ரோல் ஆல்ட் டெலிட்” கூட தெரியாது . வேற வழியே இல்லாம கடசில கம்ப்யூட்டர் தெரிஞ்சுக்கவேண்டிய நிர்பந்தம், இல்லாங்காட்டி வேல பணால். அப்றமென்ன இப்ப வரைக்கும் கம்ப்யூட்டர் கத்துக்கிறேன்னு ஒரே அட்ராசிட்டிதான்....!

சீனியர் இல்லாத ஒரு நாள்ல , ஜி.எம் ஒரு புரெடக்சன் ரிப்போர்ட் கேக்க , நான் word னே தெரியாம அத ஒப்பன் பண்ணி கால்குட்டேர் லையே கணக்குபோட்டு எடுத்துட்டு போனேன் . பாத்தோன்ன பாரட்டுவாருன்னு பாத்தா பிராண்டிட்டாரு ....!

என்னய்யா ரிப்போர்ட்டு இது ...? தப்பு தப்பா இருக்கு ...! போ... போயி எக்சல் ல போட்டு எடுத்துட்டு வா ன்னு தொரத்திவிட்டுட்டாறு ...! என்னடா இது லூசுத்தனமா இருக்கு , எக்சல்ல்ல லக்கேஜ் வேணா போடலாம் .... எப்டி ரிப்போர்ட் போடமுடியும் ...? நமக்கு எக்சல்லும் ஓட்டத்தெரியாதேன்னு சொல்லமா கொள்ளமா ரூமுக்கு ஓடியாந்துட்டேன் . மறுநாள் சீனியர் சொல்லி தான் எக்சல் ண்ணா என்னன்னே தெரிஞ்சுது ...!

மொத மொதல்ல பிரின்ட் அவுட் எடுத்தது அத விட பெரிய காமெடி . வேறோருமொர, அதே ஜி.எம் மீட்டிங்க்ல  இருக்கும்போது ஒரு WORD FILE ல ஒரு பார்ட்டியோட பேர சொல்லி , அந்த டீடெயில பிரிண்ட் எடுத்துட்டு வான்னும் ,அர்ஜன்ட் ன்னும்  சொல்லிட்டு போன வச்சுட்டாரு. சரி பிரின்ட் அவுட் தானேன்னு நானும் பிரின்ட் கொடுத்து எடுத்துக்கிட்டு இருந்தேன் . ஒரு பத்து நிமிஷம் இருக்கும் பாதி மீட்டிங்க்லேயே பாஞ்சு வந்தாரு நம்ம ஜி.எம்மு ...

“என்னய்யா பண்ணுற ...?”

“பிரின்ட் எடுத்துட்டு இருக்கேன் சார் ... “

நாப்பது பக்கம் வந்துருச்சு , இன்னும் பத்து பக்கம் வந்தா நீங்க கேட்ட பார்ட்டி டீடேயிலு வந்துரும் சார்ன்னு சொல்லி முடிக்கவும் , அவர் தலயில அடிச்சுக்கவும் சரியா இருந்துச்சு ...!

கம்ப்யூட்டர்ல , ஒவ்வொரு எழுத்தா டைப்பண்ணிட்டு இருக்கும்போதே சட்டுன்னு , அய்யய்யோ U வக்காணூம் , E காணும்னும் , கேணியக்கானும்ங்குற மாதிரி நா போட்டு வச்சுருந்த ரிப்போர்ட்ட காணும்ன்னு அப்பப்போ  EDP STAFFS ச கலவரப்”படுத்துன” நாட்கள் லாம் மறக்கவே முடியாது .

ஒரு முறை ஊருக்கு போயிருந்த போது, சொந்தக்காரர் ஒருத்தர் என்னோட வேல , சம்பளம் , படிப்பெல்லாம் பத்தி விசாரிச்சுட்டு இருந்தாரு . நானும் சொல்லிட்டு இருந்தேன் .

“இந்த சம்பளத்த வச்சு என்ன பண்றது” ...? “ஆமா ஒனக்கு கம்ப்யூட்டர் தெரியுமா ...?”

“கொஞ்சம் , கொஞ்சம் தெரியும் மாமா ...?

“ம்ம்ம் ..! M.S. OFFICE தெரியுமா ...?”

“தெரியாது மாமா ...”  

இதோட நிறுத்திருந்தா அநியாயமா அவர் என்னோட பேசுறதையே நிறுத்திருக்க மாட்டாரு ...!

அடுத்து நாங் கேட்ட கேள்வி இதுதாங்க ...!

“மாமா ! M.S. OFFICE கோயமுத்தூர்ல எந்த ஏரியாவுல இருக்கு .....?”

“...........”

ஒன்னு முறையா படிச்சுருக்கோணும் , இல்லாங்காட்டி சின்னவயசுலே இருந்து கம்ப்யூட்டர் அறிமுகமாயிருக்கோனும் ரெண்டுங்கெட்டான இருந்தா பெரும் பாடுதான்  ....!

தத்தி, தத்தி இதோ இப்போ வலைப்பதிவு வரையிலும் வந்துருக்கேன் ... அதுக்கு முக்கியமான காரணம் நா வேல பாக்குற நிறுவனம் , என்னோட சீனியர்ஸ் , சக நண்பர்கள் , பத்திரிகைகள் . இதோ இத வாசிச்சுட்டு இருக்க நீங்க .... எல்லாருக்கும் ரெம்ப நன்றிங்கோ ......!
  
ஏதோ, அஞ்சு பெற கோர்த்துவிடனுமாமே ....! இன்னும் எழுதாமா யாருனாச்சும் இருக்கீங்களா ...? நல்லாருப்பீங்க நீங்களா வந்து மாட்டிக்குங்க மக்களே....!


என்றென்றும் புன்னகையுடன் ...
ஜீவன்சுப்பு .



31 comments:

  1. சிரிக்க சிரிக்க அனுபவத்தை பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்! நன்றி!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. //என்னடா இது லூசுத்தனமா இருக்கு , எக்சல்ல்ல லக்கேஜ் வேணா போடலாம் .... எப்டி ரிப்போர்ட் போடமுடியும் ...?// நீங்க ஒரு வில்லேஜ விஞ்ஞானி....

    //மாமா ! M.S. OFFICE கோயமுத்தூர்ல எந்த ஏரியாவுல இருக்கு .....?”//ஹா ஹா ஹா

    .முந்தைய கருத்துரையில் எழுத்துக்கள் வரிசை மாற, அதை நீக்கிவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. //முந்தைய கருத்துரையில் எழுத்துக்கள் வரிசை மாற, அதை நீக்கிவிட்டேன்//

      ஹி..ஹி ...!

      Delete
  4. ஹா.... ஹா.... உங்கள் பாணியில் நகைச்சுவையுடன் கணினி கதை சுவாரஸ்யம்...

    ReplyDelete
  5. உள்ளதை உள்ளபடியே உரைக்கும் மாயக்கண்ணாடி போன்று நடந்ததை வெள்ளந்தியாக சொல்லியதற்கு நன்றி! வலைப்பக்கம் வந்து விட்டீர்கள் அல்லவா? இனி கவலை இல்லை. எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து விடுவார்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சார்ஜி ...!

      Delete
  6. “மாமா ! M.S. OFFICE கோயமுத்தூர்ல எந்த ஏரியாவுல இருக்கு .....?”
    >>
    ஈரோடு பக்கமோ அரியலூர் பக்கமோ இருக்குறதா ஞாபகம் !

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்டியா ...! தகவலுக்கு ரெம்ப நன்றி மேடம்ஜி ...

      Delete
  7. அண்ணேன்...
    அப்படியே சட்டுன்னு முடிசிட்டிங்க...
    அம்புட்டுதானா?

    ReplyDelete
    Replies
    1. என்னாது அண்ணனா...? மீ யூத் ...!

      //அம்புட்டுதானா?// அடுத்தவன் பல்பு வாங்குறத ரசிக்கறதுக்கு எம்புட்டு ஆச ....

      Delete
  8. என்னவோ c++ ல மட்டுமே முட்ட மார்க் வாங்குன மாதிரி ஊர ஏமாத்தக் கூடாது வோய் :-)

    ReplyDelete
    Replies
    1. லொள் லொள் லொள் ...! பப்ப்ளிக் பப்ப்ளிக் ...! எதுவா இருந்தாலும் முட்டு சந்துல வச்சு பேசிக்குவோம் .

      Delete
  9. ரசித்தேன்.....

    நல்ல அனுபவம் தான்! :)

    த.ம. 4

    ReplyDelete
  10. சுவாரசியமா எழுதப் பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. //கன்னி கணினி தரிசனம்//
    உங்கள் கன்னி கணினி அனுபவம் செம காமெடி தான் ! பிரின்ட் எடுத்த கதையில் சத்தம் போட்டு சிரித்து விட்டேன் :)
    (அதெல்லாம் சரி ! இதெல்லாம் உண்மையா ??) ஸ்பை கோர்த்துவிட்ட நபர்களில் நானும் ஒருவன் !:(
    //ஏதோ, அஞ்சு பெற கோர்த்துவிடனுமாமே ....! இன்னும் எழுதாமா யாருனாச்சும் இருக்கீங்களா ...? நல்லாருப்பீங்க நீங்களா வந்து மாட்டிக்குங்க மக்களே....!//

    :) :)

    ReplyDelete
    Replies
    1. உண்மை...! உண்மை ...!உண்மை ...! நன் சொல்வதெல்லாம் உண்மை :) :)

      Delete
  12. http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html

    ReplyDelete
  13. நகைச்சுவையாய் கன்னி கணினி அனுபவம்.... அருமை.

    ReplyDelete
  14. எம்.ஆபிஸ் நம்ம தெருவுக்கு அடுத்த தெருவுல தானே இருக்கு...ஹிஹிஹி

    ReplyDelete
    Replies
    1. ஜீவா அங்கேயே ஒரு சீட்டு போட்டு வைங்க ...இதோ வந்தர்றேன் ..!

      Delete
  15. புன்னகையுடனேயே வாசித்து முடித்தேன்!

    ReplyDelete
  16. நல்லா அழைக்கிறாங்கய்யா...!

    ReplyDelete
  17. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

    வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - பனி சறுக்கு விளையாட்டு

    ReplyDelete
  18. சத்தம் போட்டு சிரிக்க வைத்தது.

    ReplyDelete

Related Posts with Thumbnails