உயர்தர உணவகங்கள் , நட்சத்திர விடுதிகள் , பன்னாட்டு நிறுவனங்கள் இங்கெல்லாம்
போகும் என்னைப்போல சாமான்யன்களுக்கு நிறைய அவஸ்தைகள் இருக்கு . அதிலொன்று
கழிவறைகளை “பால்” பிரிப்பது . ஆண் , பெண் என்று பலகையும் இருக்காது , புகைப்படமும்
இருக்காது . இரண்டிற்கும் பதிலாக, குறியீடாக பொம்மைப்படம் (CLIP ART)
போட்டிருப்பார்கள் .
சும்மாவே, குறியீடுகளுக்கும் நமக்கும் வெகுதூரம் . இதில் சோடாப்புட்டிவேறு, சொல்லவும்
வேண்டுமா அவஸ்தைகளுக்கு . அடக்கமுடியாத அவசரத்தில் போய்க்கொண்டிருப்பவனை நிறுத்தி,
ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச் சொல்வது போலத்தான் இது . தொலையட்டும்... விசயத்திற்கு
வருகிறேன் .
போன வாரம் கோவை FUN MALL க்கு ஜன்னல் ஓரம் படத்திற்கு சென்றிருந்தேன் . கடந்த பத்து
நாள்களாக மொத்த கோவையுமே FRIDGE ல் வைத்தது போலத்தான் உள்ளது . போதாக்குறைக்கு, மொத்த
திரையரங்கமும் குளிரூட்டப்பட்டிருந்ததால் FREEZER ல வைத்தது போல ஆகிவிட்டது. அடுத்த
முறை ஜெர்கின் எடுத்துப்போகவேண்டும் .
இடைவேளை விட்ட அடுத்த நொடி முதல் ஆளாக வெளியேறி , கழிவறை தேடுதல் வேட்டையில் இறங்கி
, பின் அங்கிருந்த பணியாளரிடம் உறுதி செய்த பின்னே கழிவறைக்குப் போனேன் ...
ஏற்கனவே ஒருமுறை திசைமாறிப்போய் வசைமாறி வாங்கிய அனுபவம் உண்டென்பதினால், உள்ளே
நுழையும் முன் அறிவிப்பு பலகயை ஒருமுறை பார்த்துக்கொண்டேன் . எதிர்பார்த்ததைப்போலவே
பொம்மைப்படம் – பக்கத்தில் GENTLEMAN என்று எழுதியிருந்தார்கள்- அப்பாடா .....! அட...! அதற்கு கீழே
தமிழிலும் – “மதிப்பிற்குரிய ஆண்கள்” . (நல்லா பெயர்க்குராங்கய்யா மொழிய ..!).
அடக்கமுடியாத அவசரத்திலும் , ஆர்வக்குறுகுறுப்பு மேலோங்க ABOUT TURN
அடித்துப்பார்த்தேன் – அங்கேயும் பொம்மை – பக்கத்தில் LADIES , அதற்கும் கீழே
“பெண்கள்” – அவ்வளவுதான் .
இதற்குபெயர் தான் ஆஆஆஆஆஆஆஆஆஆ......................மா ?
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .
நல்லா முழி பெயர்க்கறாங்கப்பா! :)
ReplyDeleteபல இடங்களில் இந்த தொல்லை உண்டு...... சில இடங்களில் HE / SHE என சுலபமான மொழியில் எழுதி வைத்திருப்பார்கள்......
வட இந்தியாவில் பல இடங்களில் ஹிந்தியில் மட்டுமே எழுதி இருக்கும். ஹிந்தி தெரியாதவர்கள் பாடு திண்டாட்டம் தான்! :)))
Sooperu! Same Blood!
ReplyDeleteஹஹஹா.. அப்போ "ஆண்கள்" மட்டும்தான் மதிப்புக்குரியவர்கள் என்று ஜீவன் சுப்பு கூறுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல மொழிபெயர்ப்பு...
ReplyDeleteஇங்கும் அதே பிரச்சினைதான்...
என் அலுவலகத்தில் எதாவது புதிய கட்டிடத்தில் இருக்கும் டாய்லெட்டினுல் நுழையும் போது பலமுறை கிளிப்ஆர்டை பார்த்துவிட்டு உள்ளேன் சென்றாலும், உள்ளே பார்த்தால் தான் நிம்மதி வருகிறது :-))))))))) அவ்வ்வ்வ்வ்
ReplyDeleteஇதாவது பரவாயில்லை, ஒரு கட்டிடத்தில் அந்த இடத்தில ராஜாவின் படத்தையும் ராணியின் படத்தையும் வரைந்திருப்பார்கள்...
கலிகாலமடா சாமி...
gentlemanன்னு போட்டு இருந்தா நீங்க ஏன் போனீங்க சுப்பு ?
ReplyDeleteத.ம 2
ஹா... ஹா...
ReplyDeleteசிரமம் தான்...
சுப்பு, அது சரி அங்கேயும் அப்படித்தானா? திறந்த வெளி புல்களை கழகத்தில் இந்தப் பிரச்சினை இல்லை.
ReplyDeleteஅங்கயாவது மதிப்பு இருந்துட்டுபோகட்டுமே சுப்பு.
ReplyDeleteபாவம் ஆண்களுக்கு அவர்கள் மரியாதையை
ReplyDeleteஇப்படிதான் தெரிந்துகொள்ளவேண்டிய நிலை.
பொழச்சு போங்க ...........
அனைவருக்கும் நன்றி .
ReplyDelete