“இமான்” , “விஜய் சேதுபதி” என்ற இரு சமகால சக்கரவர்த்திகளை தாண்டி “ரம்மி”
மீதான பிரியத்திற்கு காரணம் , படத்தின்
பெரும்பாலான காட்சிகள் எம் கிராமத்தில் படமாக்கப்பட்டிருப்பது தான் . எங்கள்
கிராமத்தில் இருக்கும் அரசினர் கலைக்
கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் தான் படத்தின் இயக்குனர் கம் தயாரிப்பாளர்
எனக்கேள்வி . 1980 களில் நடக்கும் “டார்க்
ரொமாண்டிக் திரில்லர்” கதையாம்.
நாலே சீட்டுல ரம்மில டிக் அடிக்குரமாதிரி , நாலே பாட்டுல நச்சுன்னு மற்றுமொரு
ஹிட் அடித்திருக்கின்றார் இமான் . வழக்கமாக இமான் ஆல்பங்களில் வரும் குத்துப்பாடல்
இதில் இல்லை . நான்கு டியூனும் கதை நடக்கும் காலத்திற்கும் , தளத்திற்கும் நியாயம்
செய்வது போலவே அமைந்துள்ளது .
அடியே என்ன ராகம் :
ஆரம்பத்தில் வரும் கர்நாடக சங்கீதம் போன்ற ஆலாப் கேட்டதும் கொஞ்சம் ஜெர்க்
ஆகிடுச்சு , என்னடா படத்துக்கும் , பாட்டுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கே என்று
. சில நொடிகளுக்கு பின் அபய் குரல் ஆரம்பிக்கும் போது பாட்டும் சும்மா பறக்க
ஆரம்பிக்கின்றது . இசைப்புயலின் பள்ளியிலிருந்து வந்திருக்கும் அபய்
மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த இருபத்தி இரண்டு
வயது இளைஞர் . குரலை கேட்டால் நம்பவே முடியல அவ்வளவு தெளிவு & கம்பீரம்
. கடல் படத்தில் வரும் மூங்கில் தோட்டம் இவர் பாடியதாம் . வளமான எதிர்காலம்
அபய்க்கு ...!
கூட மேல கூட வெச்சு :
ரெம்ப நாளைக்குப்பின் பிரசன்னா குரலில் அழகான ஒரு பாடல் . சேர்ந்து
பாடியிருக்கின்றார் வந்தனா சீனிவாசன் . தென் மேற்கு பருவக்காற்றின் – ஏடி கள்ளச்சி
பாடலை போன்று பிரபலமாவதற்கு அதிக வாய்ப்புள்ள பாடல்கள் . யுகபாரதியின் பாடல்வரிகள்
கூடைக்கு பக்க பலம்.
ஒரு நொடி :
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை வரும் வாத்தியக்கருவியின் கோர்வை ரெம்ப நல்லாருக்கு
. , திவ்யா ரமணி & இமானின் குழையும் குரல்களில்
மற்றுமொரு அழகான மெலடி . திவ்யா ரமணியின் குரல் திவ்யம் .
எதுக்காக என்ன நீயும் :
சூப்பர் சிங்கர் பூஜாவும் , சந்தோசும் இணைந்து ஏற்ற இறக்கங்களுடன் ரெம்ப நல்லா
பாடிருக்கின்றார்கள் .
அழகான , எளிமையான வார்த்தைகளுடன் , விளிப்புகளுடனும் ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களையும்
யுகபாரதி எழுதியிருக்கின்றார் . அழகு ...!
மினிமம் பட்ஜெட்டில் எடுக்கும் படங்களுக்கு இமான் கொடுத்துக்கொண்டிருப்பது மேக்சிமம்
கியாரண்டி ....! வாழ்த்துக்கள் மிஸ்டர் இமான் ...!
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .

.jpg)

.jpg)