Mar 10, 2014

பேசாத வார்த்தைகள் : கோலி சோடா *ச.இ.க.இ * ட்வீட் .









ரசித்தது –உடல் மொழி

ஒரு படமோ , பாடலோ  வெற்றியடைந்துவிட்டால் அதைபோலவோ/ அதையேவோ  திரும்ப திரும்ப வேறு வேறு பெயர்களில் எடுத்து , நம்மை சாவடிக்குரதுல தமிழ் சினிமா பிரம்மாக்களை மிஞ்ச ஆளே இல்லை .

சமீபத்திய உ.தா – கானா பாலா . கதையில்லாமல் கூட படம் எடுக்கிறார்கள் , ஆனால் கானா பாலா குரலில்லாமல் எடுப்பதில்லை . படத்திற்கும் , காட்சிக்கும் தேவையா , கதாபாத்திரத்திற்கு பொருத்தமான குரலான்னு ஏதொன்றையும் கருத்தில் கொள்ளாமல் நம்மைக் கொல்லுகிறார்கள். இப்பல்லாம் கா.பாலா குரலைக் கேட்டாலே காதுக்குள்ளார கடப்பாறைய விட்டு குடையுறமாதிரியே feel ஆகுது .

மேற்படி குடைச்சல் காரணமாகவே கோலி சோடா படத்தில் அண்ணன் கா.பா பாடிய All your Beauty பாட்டை கேட்டாலே தெரிச்சுடுவேன் . But , போன வாரம் ரிமோட் மக்கர் பண்ண வேறு வழியில்லாம கடப்பாறைய காதுக்குள்ளார விடவேண்டியதாப்போச்சு . ஆனா பாருங்க பாட்டும் , காட்சியும் ரெம்ப நல்லாவே இருக்கு . இப்ப அடிக்கடி விரும்பிப் பார்க்கும் பாடலாகிவிட்டது

பாடல் வரிகள் செம்ம லோக்கலா , ரகளையா நல்லா இருக்கு . அத விட முக்கியமா அன்பரசு விற்கு ஜோடியாக (சின்னத்)தாமரை போன்ற சாயலில் வரும் அந்தப் பொண்ணு அவ்வளவு லட்சணம் . உடல் மொழி கூட ரெம்பவே நல்லாருக்கு. குறிப்பா பையன் கைய புடிச்சுகிட்டு விடுற ஒரு லுக்கும் , அரை நொடிப்பொழுதில் அடிக்கும் அந்த சைட்டும் , வாயில் கை வைத்தபடி சிந்தும் சிரிப்பும் அட்டகாசம் . பொண்ணு வர்ற காட்சியெல்லாம் ஹைக்கூ கவிதை .

கவிஞர் தாமரை , சொய்ங் சொய்ங் பாடலுக்கு நடனமாடிய சந்தியா , அப்புறம் நம்ம பொண்ணு இந்த மூணு பேருக்கும் உள்ள எனக்கு ரெம்பப்பிடித்த ஒரு ஒற்றுமை , மூணு பேருமே நடு வகிடு எடுக்காமல் , பக்கவாட்டில வகிடு எடுத்திருப்பார்கள் . அவர்களின் முகவெட்டுக்கு , பக்கவாட்டு வகிடு பக்காவா இருக்கு .

பெண் குழந்தை பிறக்கவேண்டும் என்றும்  , அவள் பக்கவாட்டு வகிடு எடுக்கவேண்டும் என்றொரு ஆசையும் உண்டெனக்கு ....! J

ச.இ.க.இ...!

அதிகாலைத் தேநீருடன்
கூடிய செய்தித்தாள்

பின் மதிய கருப்பு
வெள்ளை கிளாசிக் மூவி

முன்னிரவு இளையராஜா இசை

இது மூன்றுமே போதுமானதாக
இருக்கிறது எனதொருநாளை
உயிர்ப்பித்துக் கொள்ள ...!

பிளாக்குல ட்வீட்டு :

கீழ விழுந்ததும், அடிபட்டுருக்கான்னு பார்க்குறதவிட அடுத்தவய்ங்க யாரும் பார்த்துட்டாய்ங்களான்னு பார்க்குறவய்ங்கதான் நம்மில் அதிகம். - நான் அவன்-



என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .


22 comments:

  1. சின்ன பிள்ளைகள் யூனிபார்ம் போட்டுக்கிட்டு வர டூயட் எல்லாம் எங்களை மாதிரி பெண்ணை பெற்று வைத்திருபவர்கள் பார்ப்பதில்லை சகோ!
    டெரர் படம் பாக்கிற மாதிரி இருக்கும்!
    கவிதை fact fact
    நான் அவள் !!

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு feeling ...

      Delete
  2. உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்... மூன்றுமே போதும் ரசனை...!

    ReplyDelete
  3. கவிதை அருமை...
    அந்தப் பெண் நல்லா நடிச்சிருக்கும்...
    உங்கள் ஆசை நிறைவேறட்டும்...

    ReplyDelete
  4. நல்லாத்தான் இருக்கு உங்கள் தினத்திற்கான மெனு...

    ReplyDelete
  5. ச.இ.க.இ...! நல்லா இருக்கு.. ஆமா விரிவாக்கம் என்ன

    ReplyDelete
  6. சின்ன புள்ளைங்க லவ் படம்னாலே ஒரு வித பயத்தோடவே பார்க்குறதா இருக்கு.

    ReplyDelete
  7. கீழ விழுந்ததும், அடிபட்டுருக்கான்னு பார்க்குறதவிட அடுத்தவய்ங்க யாரும் பார்த்துட்டாய்ங்களான்னு பார்க்குறவய்ங்கதான் நம்மில் அதிகம். - நான் அவன்-
    >>
    எல்லோருமே இப்படிதானா!?

    ReplyDelete
  8. ட்வீட்டு கலக்கல்! உடல் மொழி ரசனை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. உங்க எழுத்துகள் போலவே உங்கள் ஆசைகளும் அழகாக இருக்கிறது.. விரைவில் நிறைவேறட்டும்... :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆவி ... ஆசை நிறைவேரிட்டா செபெசல் ட்ரீட்டு வச்சுடுவோம் .

      Delete
  10. அருமை..... ட்வீட் - பலர் சொல்ல மறுப்பதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்!

    கவிதை - அருமை!

    ReplyDelete
  11. ச.இ.க.இ...// சத்தியமா இது கவிதை இல்லை ... என்ன அண்ணே நான் சொன்னது கரெக்டா .... அட்டகாசமான வார்த்தைகள் பதிவு முழுக்க தெறித்து நிற்கிறது அண்ணே ,,,, அடிக்கடி எழுதலாமே இப்படி ...

    ReplyDelete
    Replies
    1. அரசன் சொல்லிட்டா அப்பீல் ஏது ..? Exactly correct

      Delete
  12. பெண் குழந்தை பிறக்கவேண்டும் என்றும் , அவள் பக்கவாட்டு வகிடு எடுக்கவேண்டும் என்றொரு ஆசையும் உண்டெனக்கு ....! // நல்ல ஆசை தான் ....

    ReplyDelete

Related Posts with Thumbnails