Jan 24, 2013

நானும் பதிவர் ! நானும் பதிவர் ! நானும் பதிவர் !
எல்லாரும் பாத்துக்குங்க நானும் பதிவர் !  நானும் பதிவர் ! நானும் பதிவர் ! அப்டின்னு சொல்லாமலே டிசம்பர் 30   திருப்பூர் பதிவர் சந்திப்புல சங்கமம் ஆனேன் . ( இதுவரைக்கும் சுமாரா , ரெம்ப சுமாரா ஒரே ஒரு பதிவு போட்டுட்டு அதுவும் ஒரே வரில போட்டுட்டு மொத ஆளா போனது வேற விஷயம் )

சொந்தம் , நட்பு , இது இல்லாம ஒரு புதிய உறவுகளை சந்திக்க போற ஒரு ஆர்வம் மேலோங்க போன முதல் சந்திப்பு .

நிறைய வருடல்களையும் கொஞ்சமே கொஞ்சம் நெருடல்களையும் தந்த சந்திப்பை பற்றி  சுருக்கமா ( ? )..

வருஷ கணக்குல கூடவே சேர்ந்து வாழ்ந்தாலும் ஒருத்தர இவர் இப்டிதான்னு உறுதியா சொல்லிடமுடியாது . சந்தர்ப்பமும் , சூழ்நிலையும் ஒருத்தர எப்டி வேணும்னாலும் மாத்தலாம் . அப்டி இருக்கும் போது நிமிச நேர சந்திப்பின் மூலம் யாரையும் மதிப்பிட முடியாது , கூடாது . அதே நேரம்  ஒருத்தர பத்தின நல்ல விசயங்கள பதிய நிமிச நேரம் போதும்னு நெனச்சதால இந்த பதிவு.

அருண் 

மொத நாளே தொலைபேசியில  என் வருகையை
உறுதிபடுத்திக்கிட்டாரு. மொதல்ல சந்திச்சதே இவர்தான் .
நம்மள பாத்தொன்ன மொதல்ல இவர் சொன்னது ...
நண்பா ! நெறைய வேல இருக்கு  கைய கட்டிக்கிட்டு  வேடிக்க பாக்காம , இழுத்து போட்டு வேல செய்யனும்னு என்ன ?  .
 ( அதெப்டி கரெக்டா கண்டுபுடிசாப்லன்னு  தெரியல..! ). இழுத்து போட்டு வேல செய்யனும்னு சொன்னதாலோ என்னவோ ஒரு சேர மட்டும் இழுத்து போட்டதோட சரி . ( உண்மையிலே வேற வேல இல்லங்க .) ஆரம்பத்துல இருந்து கடசி வரைக்கும் கொஞ்சம் கூட சோர்வடையாம பர பரன்னு பம்பரமா சுத்தி வேல பாத்தாருங்க  .
சீனு 
ஒரு சில பெயர்கள உச்சரிக்கும் போதே ஒரு நெருக்கத்தையும் , பிரியத்தையும் உணரமுடியும்.  ஆனா பழகி பார்த்தா மொத்தமா முரண்படுவாங்க . சீனுவும் அப்டிதான் ஆனா முரண்பாடில்லாதவர் .பெயரைபோலவே பழகுவதற்கும் இனிமையான ஆளு .
பழகிய கூட்டத்திலே பம்மி பதுங்குற ஆளு நாம,  புது கூட்டம் பாத்து மிரண்டு போயி ஒதுங்குனா, விடாம  கடைசி வர அரவணைச்சு ஆதரவு கொடுதாப்புல.
பார்த்தா பள்ளிகூடம் போற பையனாட்டம்சாதரணமாக” இருக்காரு . ஆனா எழுத்துலஅசாதரணமானமுதிர்ச்சி . அழகியல் முரண்பாடு ..!.
கவுதம் பாணியில இவர் எழுத்த சொல்லனும்னா ... " அவ்ளோ அழகு !". வலைச்சரத்தில் எழுதுச்சரம் தொடுக்கப் போகும் சீனுவுக்கு ஒரு மலர்ச்சரம் ..

ஜோதிஜி 
டாலர் நகரத்தின் தந்தை . நான் சந்தித்த முதல் பதிவர்எண்ணம் , எழுத்து , சொல்செயல் 
எல்லாம் கை வர பெற்றவர். அந்த வகையில வரம் வாங்கி வந்தவருன்னு சொல்லலாம்
( சொல்லாடல் உபயம் டா...)
ஒரு சில தினங்களில் தன்னோட மொத புஸ்தக குழந்தைய பிரசவிக்க இருக்காரு அண்ணன் . ஊரும் பெரும் கூடி , சீரும் சிறப்புமா பிரசவம் ,தல பிரசவமா நடக்கும்னு ... வாழ்த்தவோ , வணங்கவோ , இறைவனை வேண்டவோ வேண்டாம். எண்ணுவோம் அது போதும் . ஏன்னா எண்ணம் போல் வாழ்வு , எண்ணங்கள் வலிமையானது .
 ( சொல்லாடல் உபயம் எம்.எஸ் .உதயமூர்த்தி அய்யா . நீங்க இன்னும் இது போன்ற வார்த்தைகளால் வாழ்ந்து கொண்டுதான் இருக்கீங்க .)

கண்மணி அன்போடு

சகோதரி கண்மணி , தன ரெண்டு கண்களோடு அன்போடு வந்திருந்தார். நடை உடை பாவனை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் அத்துனையும் ரெம்ப நேர்த்தி கண்ணியம் .

மதுமதி 

மனுஷன் சிரிக்க சிரிக்க இனிக்க இனிக்க பேசுராருங்க.ஒரு வரலாறையே  போற போக்குல சொல்றாரு . இவர் மேடையில பேசுவாருன்னு போட்ருந்தாங்க ரெம்ப எதிர்பார்த்து காத்திருந்தேன் . வழக்கம்போல எதிர்பார்ப்புகள் ஏமாற்ற தவறுவதில்லை ங்குறது நிருபணம் ஆச்சு .

செழியன் & விஜயன்  

இருபதில் இருக்குற வாலிபங்கள் . இந்த வயசுல ஒயரம் வளரும் பரு கூட வளருமா என்ன அப்டின்னு ஒரு சோப்பு வெளம்பரம் தொல்லைகாட்சியில வந்துட்டுருக்கு . அது மாதிரி இந்த வயசுல Facebook ல இருப்பாங்க  Twitter ல இருப்பாங்க, ஆனா Blog ல இருப்பாங்களா எழுதுவாங்களான்னு ஆச்சர்யபடுத்தியவர்கள் .

சிபி செந்தில் 

சிம்மக்கொரலோன் .அட்ராசக்க ! என்ன கொரலுப்பா ? மொத ஆளுமையையும் ஒத்த கொரல்ல வச்ருக்காருங்க . மனுஷன் ரகசியத்த கூட போக்ரான்ல போட்ட குண்டாட்டம் சொல்லுவாராட்டுக்கு . எதோ அலக்சா ராங்கிங் ல டாப்புன்னாங்க . நமக்கு அலேக்சாவும் தெரியாது அண்டார்டிகாவும் தெரியாது. எதோ பெரிய ஆளுன்னு புரிஞ்சுகிட்டேன்.

ஈஸ்வரன்  

நிகழ்ச்சியின் பிரம்மா . முடிவு பண்ணி கொஞ்ச நாள்ல நிகழ்ச்சிய சிறப்பா நடத்திட்டாங்க . ரெம்ப எளிமையாத்தான் இருந்தாரு . ரெண்டு வேல டீ மத்தியானத்துக்கு வகைக்கு ஒண்ணா மூணு சோறு ன்னு நல்ல உபசரிப்பு .

திண்டுக்கல் தனபாலன்  

பின்னூட்டத்தின் சக்கரவர்த்தி , இல்லனா பின்னூட்ட புயல்னு சொல்லலாம் . நிலாவுக்கு போனா கூட அங்க ஒரு நாயர் சாயா கட வச்சுருப்பாருன்னு சொல்லுவாங்க , அது மாதிரி ஒலகத்துல எந்த மூலையில யாரு பதிவு போட்டாலும்
அங்க நம்ம அண்ணனோட பின்னுட்டம் இருக்கும் . எனக்கு கூட இவருதாங்க மொதல்ல பின்னுட்டுனாரு.  கடமைய செய் பலன எதிபாராத , எதிர்பார்க்கலனா ஏமாற்றம் இல்லன்னு, ஆயிரம்  சொன்னாலும் , மனசு
ஏந்குதே அங்கீகாரத்துக்கு . ஒரே ஒரு வரில ஒரே ஒரு பதிவு போட்டுட்டு ஒரு நாளக்கி ஒம்பது வாட்டி ஒப்பேன் பண்ணி பாக்குற என்ன மாதிரி ஆளுக்கெல்லாம் நீங்க தெய்வம்  ....!


தாய்த்தமிழ் பள்ளி குழந்தைகள் : 

தமிழின் மேல இருக்குற பேரன்பையும் அந்நிய மொழிகள் மேல் இருக்குற பெருங்கோபத்தையும் இயல் இசை நாடகம் அப்புறம் வேல்குச்சி கொண்டு அட்டகாசமா வெளிபடுத்துனாங்க. இயக்குனர் பாலா ஒரு மிகச்சிறந்த வலி கடத்தி அப்டின்னு நாஞ்சில் நாடன் அய்யா ஒரு பேட்டியில சொல்லிருந்தாரு , அது மாதிரி இந்த கொழந்தைங்க  தமிழ் உணர்வை நம்முள் கடத்துவதில் ஆகச்சிறந்தவர்கள்.
 இந்த நேரத்துல இவர்களின் ஆசிரியர்களையும் , நிர்வாகியையும் கண்டிப்பா வணங்கணும் . ஒரு கொழந்த பாடும்போது தொண்ட கட்டி பாடமுடியாம பாதில நிறுத்திடுச்சு . இந்த நேரத்துல அவங்க ஆசிரியர்கள் என்ன பண்றாங்க ரியாக்ட் பண்ணுறாங்களா இல்ல ரெஸ்பாண்ட் பண்றாங்களான்னு பாத்தா.. ஒருத்தர் கூட முகம் சுளிக்கல அத்தன பேரும் அந்த கொழந்தய அரவனச்சுகிட்டாங்க .கான்வன்ட்ல இதல்லாம் நெனச்சு கூட பார்க்க முடியாது .

இவ்வளவு வருடல்களுக்கு மத்தியில கொஞ்சம் நெருடல்கள் ...

1.திட்டமிட்டபடி எல்லாருக்கும் பேச வாய்ப்பு கொடுக்க முடியாம போனது .
2.தனியா சகாயம் அவர்களுக்கு வச்ச வெளம்பர தட்டி ( அவரே  நிச்சயமா விரும்பமாட்டாரு )
3. ரெம்ப முக்கியமா கலை நிகழ்ச்சி நடந்துட்டு இருக்கும் போதே ரெண்டு பேரு மேடையில ஏறி சகாயம் அவர்களுக்கு வெச்சுருந்த வெளம்பர தட்டிய மாத்து மாத்துன்னு எடம் மாத்திகிட்டு இருந்தாங்க . ( அவங்க நோக்கம் நல்லாவே தெரிஞ்சுது .)

ஆதலால் அறிவுரை செய்வீர் :
இந்த கால் குறி  , அரை குறி , முக்கா குறி  , முழு குறி அப்புறம்  ஆச்சர்யகுறி இதெல்லாம் தெரியாத தற்குறி நான் . ஆதலால் தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க அறிவுர சொன்னிங்க னா நானும் தெரிஞ்சுக்குவேன் .

பிகு : அடேங்கப்பா ! இந்த ஒரு பதிவுக்கே நாக்கு தள்ளி போச்சு . ஒன்ரெண்டு  வார்த்தைகள எழுத்துல கொடுவரதுக்கு கீ போர்டு கூட பெரிய போராட்டமே நடத்தவேண்டியதாப்போச்சு . எப்டி தான் தெனம் பதிவு போடுறாங்களோ . ரெம்ப குஷ்டமப்பா ...!
  

மறுபடியும் எழுதுறதுக்கு  தெம்பும் திராணியும் வந்தா வண்ணத்துப்பூச்சி  பறக்கும் .
அது வர ரெஸ்ட் ! ரெஸ்ட் ! ரெஸ்ட் ...!
( ஏன்னா தமிழ் ல்ல எமக்கு புடிக்காத வார்த்த ஓய்வு! ஓய்வு! ஓய்வு! )